ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு யாராக இருக்கும் என்று இன்றைக்கு ஒவ்வொருத்தரும் தலையை பிச்சிக்கிட்டு இருக்காங்க.
ஜெயலலிதா ஜெயிலுக்கு போனபோது, கைகாட்டிய தற்போதைய தமிழக முதல்வர் ஓ.பி.எஸ் வாரிசா? அல்லது ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வாரிசா? அல்லது 33 வருடங்களாக கூடவே இருந்த சசிகலா வாரிசா? யாரை ஜெயலலிதா தனக்கு பின்னான அரசியல் வாரிசாக எண்ணினார்?
எம்.ஜி.ஆர் கட்சியை உருவாக்கி அரியணையில் அமர்ந்தார். நடிகையாக பழக்கமாகி, தோழியாகி, தன் வாழ்க்கையின் முக்கிய இடத்தில் இருந்த ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர். தன் வாரிசாக அறிவிக்கவில்லை.
அவர் யாரையும் எண்ணவில்லை என்பதற்கு அவரது பேட்டியே சான்று. “அது போல, வாரிசு சம்பிரதாயம் எங்க கட்சியில் இல்லை.யாராவது ஒருவர் மக்கள் ஆதரவுடன் எதிர்காலத்தில் வருவார்கள். எப்படி எம்.ஜி.ஆர் வந்தாரோ, நான் எப்படி வந்தேனோ? அப்படி வருபவர்கள் கட்சியின் தலைவராக இருப்பார்கள்” என்று தெள்ள தெளிவாக சொல்லியுள்ளார்.