10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீமை கருவேல கன்றுகளை அகற்றிய கீழக்கரை கல்லூரி மாணவிகள்…..!!
கீழக்கரையிலிருந்து ராமநாதபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலை ஓரங்களில் வளர்ந்துள்ள கருவேல மறுக்கன்றுகளை அகற்றும் பணியில் தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி மாணவிகள் ஈடுபட்டனர்.
1500 மாணவிகள், பேராசிரியைகள், அலுவலக பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் அனைவரும் கல்லூரி நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு பொதுப்பணித்துறையோடு இணைந்து சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கருவேல மரங்களை அகற்றினர்.
இப்பணியின் ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டுநலப்பணி திட்டத்தினர் செய்திருந்தனர்.