செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

மோடியின் தொகுதியில் “மாணவிகளை ‘ஸ்கர்ட்’ இன்றி ஓட வைத்த கொடூரம்” – சமஸ்கிருதம் ஒப்புவிக்காததால் தலைமை ஆசிரியை தண்டனை

பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில், அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவிகள் சமஸ்கிருதம் ஒப்புவிக்காததால், அவர்களைஸ்கர்ட்(குட்டை பாவாடை) இன்றி ஓட வைத்து தலைமை ஆசிரியை தண்டனை கொடுத்துள்ளார்.
இது குறித்து அறிந்து மாணவிகளின் பெற்றோர் போராட்டம் நடத்தியதையடுத்து, அந்த தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சமஸ்கிருதம் படிக்கவில்லை
உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப் பகுதியான சோன்பத்ரா மாவட்டம், அன்பரா நகரில் மாணவிகளுக்கான உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் 15 மாணவிகள் கடந்த வெள்ளக்கிழமை அன்று, சமஸ்கிருதம் ஒப்புவிக்காமல் வகுப்புக்கு வந்தனர். இதையடுத்து, அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை மீனா சிங் அந்த மாணவிகளின் ஸ்கர்ட்டை கழற்றிவிட்டு பள்ளி மைதானத்தை ஓடச் செய்து, தண்டனை கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சஸ்பெண்ட்
இதையடுத்து, இந்த தண்டனை குறித்து மிகவும் வெட்கப்பட்டு, வேதனைப்பட்ட மாணவிகள் 15 பேர் தங்கள் பெற்றோர்களிடம் புகார் அளித்தனர். இதனால், ஆத்திரமடைந்த, மாணவிகளின் பெற்றோர்கள், நேற்றுமுன்தினம் பள்ளிக்கு வந்து, தலைமை ஆசிரியை அளித்த தண்டனை குறித்து சண்டையிட்டு, வாதிட்டனர். உடனடியாக இந்த விவகாரம், மண்டல கல்வி அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஆனால், இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வந்த தலைமை ஆசிரியை மீனா சிங்கை, இடைநீக்கம் செய்து மண்டல கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.
விசாரணை
இது குறித்து மண்டல கல்வி அதிகாரி திலீப் குமார் கூறுகையில், “மாணவிகளுக்கு கொடூரமாக தண்டனை அளித்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், பள்ளியின் தலைமை ஆசிரியை மீனா சிங் பள்ளி நிர்வாகத்தால் சஸ்பெண்ட் ெசய்யப்பட்டுள்ளார். இது குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது, ஒருவாரத்தில் அறிக்கை என்னிடம் அளிக்கப்படும்” என்றார்.
முர்கா தண்டனை
இது குறித்து கல்வி அதிகாரிகள் கூறுகையில், ” கடந்த வெள்ளிக்கிழமை இந்த 15 மாணவிகள் சமஸ்கிருதம் ஒப்புவிக்காமல் வந்துள்ளனர். இதையடுத்து, அந்த மாணவிகளுக்கு ‘முர்கா’ எனப்படும், கைகளை முழங்காலுக்கு கீழ் கட்டிக்கொண்டு குனிந்து இருக்கும் தண்டனையை தலைமை ஆசிரியை அளித்துள்ளார். இந்த தண்டனை அளிப்பது பள்ளிகளில் தடை செய்யப்பட்டு இருந்தபோதிலும், இதை அளித்துள்ளார். மேலும், மாணவிகளின் ஸ்கர்ட்டை கழற்றி மைதானத்தை ஓடவைத்துள்ளார்” என்று தெரிவித்தனர்.

Related Posts: