புதன், 14 ஏப்ரல், 2021

தமிழகத்தில் அடுத்த 3 நாள் ‘ஜில்’ ஆகும் மாவட்டங்கள் இவைதான்!

 சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கான வானிலை நிலவரம் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளது. தென் தமிழகம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் பரவலாக இடியுடன் கூடிய அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

நேற்று (12-04-2021), அன்று தென் தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள்,  டெல்டா மாவட்டங்கள், விழுப்புரம் கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருச்சி, திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது.


இன்று (13-04-2021), தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை (14-04-2021) தென் தமிழக மாவட்ட்ஙகள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் வட உள் மாவட்டங்களில் ஓரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.  காற்றின் வேகம் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வரை வீசக்கூடும்.

நாளை மறுநாள் (15-04-2021) தமிழகம் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். காற்றின் வேகம் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வரை வீசக்கூடும்.

அடுத்த நாள் (16-04-2021) அன்று தமிழக உள் மாவட்ட்ஙகள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி,தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.

தற்போதைய நிலையில் மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவுமில்லை.

கடந்த ஒன்றரை மாத காலத்தில் மாநிலத்தில் தென்காசி மாவட்டத்தில் அதிகபட்சமாக 98.4 மி.மீ, நீலகிரியில் 51.6 மி.மீ, கன்னியாகுமரி 45.7 மி.மீ  அளவிற்கு மழை பெய்துள்ளது. செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பெரம்பலூர், விழுப்புரம்,வேலூர் ,திருப்பத்தூர் மாவட்டங்களில் மழை பெய்யவில்லை.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-weather-reports-for-next-3-days/

Related Posts: