புதன், 14 ஏப்ரல், 2021

கூடுதல் பதிவுக்கட்டணம் : பதிவுத்துறைக்கு முதன்மை செயலாளர் கடிதம்

 மங்களகரமான நாட்களில் கூடுதலாக பதிவுக்கட்டணம் வசூலிக்கலாம் என்று பதிவுத்துறை தலைவருக்கு முதன்மை செயலாளர் பீலா ராஜேஷ் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் மங்களகரமான நாட்களில் பொதுமக்கள் அதிகளவில் பத்திர பதிவு செய்து வருவதால், பத்திரப்பதிவு அலுவலகங்களில் மங்களகரான நாட்களில் பத்திரப்பதிவு செய்தால், அதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம் என்று தமிழகத்தின் முதன்மை செயலாளர் பீலா ராஜேஷ், பதிவுத்துறை தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பத்திரப்பதிவு துறையின் வருவாயை பெருக்கும் வகையில், சித்திரை முதல் நாளான (14.04.2021), ஆடிப்பெருக்கு நாளான (03.08.2021), மற்றும் தைப்பூசம் நாளான (18.01.2022) ஆகிய மங்களகரமான நாட்களில் பதிவு அலுவலங்களை செயல்பாட்டில் வைத்தால், பொதுமக்களால் சொத்து பரிமாற்றம் குறித்த ஆவணங்கள் பதிவுக்கு தாக்கல் செய்திட ஏதுவாக இருக்கும் என்றும், அத்தகைய நாட்களில் செயல்பாட்டில் வைத்திடவும், அத்தகைய விடுமுறை நாட்களில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதிக்குமாறு பத்திரப்பதிவு துறை தலைவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த கோரிக்கையை கவனமுடன் பரிசீலனை செய்த அரசு, சித்திரை முதல் நாளான (14.04.2021), ஆடிப்பெருக்கு நாளான (03.08.2021), மற்றும் தைப்பூசம் நாளான (18.01.2022) ஆகிய மங்களகரமான நாட்களில் பதிவு அலுவலங்களை செயல்பாட்டில் வைத்து பத்திர பதிவினை மேற்கொள்ளவும், அத்தகைய நாட்களில் மேற்கொள்ளப்படும் ஆவணப்பதிவுகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் தமிழகத்தில் குறிப்பிட்ட விடுமுறை நாட்களில் பத்திர பதிவு அலுவலகங்கள் திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-news-update-register-office-extra-fees-for-auspicious-day-291626/

Related Posts: