சனி, 10 ஏப்ரல், 2021

இந்து, இஸ்லாமியர்கள் பற்றி பேசுபவர்களுக்கு எதிராக ஏன் “நோட்டீஸ்” இல்லை? மமதா கேள்வி

 West Bengal Elections 2021 : கடந்த வாரம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரச்சாரத்தின் போது அரசியல் கட்சிகளுக்கு சிறுபான்மையினர் தங்களின் வாக்குகளை பிரிக்கக் கூடாது என்று கூறியதற்காக தேர்தல் ஆணையம் அவருக்கு தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக மம்தா பானர்ஜி வியாழக்கிழமை பேசியபோது மதரீதியாக வாக்காளர்களை பிரிக்கும் எந்த ஒரு முயற்சிக்கும் எதிராக நான் தொடர்ந்து குரல் கொடுத்து வருவேன் என்று கூறினார்.

மேலும் தேர்தல் ஆணையம் இதுபோன்று பத்துக்கும் மேற்பட்ட நோட்டீஸ்களை தரலாம் ஆனால் என்னுடைய நிலைப்பாடு என்றும் மாறாது என்று கூறினார். நான்கு இடங்களில் வியாழக்கிழமை அன்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட மம்தா பானர்ஜி ஏன் பாஜகவின் நட்சத்திர பேச்சாளரான பிரதமர் நரேந்திர மோடி மீது எந்தவிதமான புகார்களும் பதிவு செய்யப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார்.


மேலும் மோடி தான் தொடர்ந்து தன்னுடைய பிரச்சாரத்தின் போது இந்து மற்றும் இஸ்லாமிய வாக்கு வங்கிகள் குறித்து அடிக்கடி பேசி வருகின்றார் என்று அவர் குறிப்பிட்டார். இதுநாள் வரையில் எத்தனை வழக்குகள் நந்திகிராம் பிரச்சாரத்தின்போது மினி பாகிஸ்தான் என்று கூறியதற்காக பதிவு செய்யப்பட்டது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

”தீதி ஓ தீதி” என்று ஒவ்வொரு பிரச்சார மேடையிலும் மோடி தன்னை பற்றி பேசுவது குறித்து கேள்வி எழுப்பியவர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான பேச்சு நடை இருக்கும். எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் என்னை கிண்டல் செய்யுங்கள் ஆனால் லக்ஷ்மண ரேகையை தாண்டினால் அது உங்களின் ஆளுமையை அது பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார்.

பாலகர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த மம்தா பானர்ஜி வாக்காளர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். மத்திய படைகளில் ஒரு பிரிவு மக்களை அச்சுறுத்துவதற்காக கிராமப்புறங்களுக்கு செல்லக்கூடும். மத்திய துணை ராணுவ படைகள் மீது எனக்கு மரியாதை உண்டு ஆனால் அவர்கள் டெல்லியில் அறிவுறுத்தலின்படி செயல்படுகிறார்கள் என்பது தான் உண்மை . வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முன்னாள் அவர்கள் கிராமங்களுக்குச் சென்று மக்களை அச்சுறுத்துகின்றனர். பெண்களை துன்புறுத்துகிறார்கள். மேலும் அவர்கள் பாஜகவிற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கின்றனர். இது மேலும் தொடர நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் அந்த பிரச்சாரத்தில் கூறினார்.

மாநில காவல் துறையிடம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கூறிய மம்தா பானர்ஜி நியாயமான சுதந்திரமான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்வதுதான் உங்களின் பணி. எக்காரணம் கொண்டும் உங்களின் ஒருமைப்பாட்டை அப்படியே வைத்திருங்கள் என்று அவர் கேட்டுக்கொண்டார். மத்தியப் படை பிரிவினரால் ஏதேனும் பிரச்சனை ஏற்படும் பட்சத்தில் காவல் நிலையங்களில் அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கிராமவாசிகளிடம் கேட்டுக்கொண்டார். காவல்துறையினர் வழக்குகளை பதிவு செய்யவில்லை என்றால் எங்களிடம் தெரிவியுங்கள் என்றும் அவர் கூறினார்.

பாஜக மற்றும் மத்திய படை பிரிவினரால் ஏதேனும் தவறு ஏற்படும் பட்சத்தில் வாக்குப்பதிவு முகவர்கள் எதிர்த்து குரல் கொடுக்கவும் போராட்டம் நடத்தவும் கேட்டுக்கொண்டனர். பாலகர் தொகுதியில் உள்ள குப்திபாரா பகுதியில் நடைபெறும் துர்கா பூஜை தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றால் பாஜகவை வீழ்த்துவதை மக்கள் உறுதி செய்ய வேண்டும் என்றார்.

தோம்ஜூரில் பேசிய அவர், திரிணாமுல் கட்சியின் முன்னாள் அமைச்சரான ராஜிப் பானர்ஜியை கடுமையாக விமர்சனம் செய்தார். தற்போது அவர் பாஜக சார்பில் போட்டியிட உள்ள நிலையில், “துரோகி… அவரை இந்த தொகுதியில் கடந்த முறை போட்டியிட வாய்ப்பளித்தற்காக நான் வருந்துகிறேன்” என்று கூறினார். அவர் பாசனத்துறை அமைச்சராக இருந்த போது அவர் மீது ஒரு புகார் வந்தது. அதனைத் தொடர்ந்து நான் அவரை அந்த பதவியில் இருந்து நீக்கி, வனத்துறை அமைச்சராக பணியமர்த்தினேன். அவரை நம்பி 2016ம் ஆண்டு வாக்களித்த மக்களை அவர் ஏமாற்றிவிட்டார். அப்போது அவர்களின் உண்மையான நிறத்தை நான் காணவில்லை என்னை மன்னித்துவிடுங்கள் என்று கூறினார்.

அரசியலில் எதிர் கருத்தைக் கொண்டவர்களை பாஜக வேட்டையாட படையினர் மற்றும் இயந்திரங்களை வைத்துள்ளது என்பதை கருத்தில் கொண்டு தேசிய செய்தி ஊடகங்களும் கட்சியின் நலனுக்கு ஏற்ற வகையில் செய்திகள் ஒளிபரப்ப கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்றும் அவர் குற்றம் சுமத்தினார்.

பாஜக மேற்கு வங்கத்தில், அரசியல் அமைப்பு சட்டம் 356ஐ போன்று (குடியரசுத் தலைவர் ஆட்சி) ஒரு சூழலை உருவாக்கியுள்ளது.தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக செயல்படுகிறது என்று கூறிய மமதா பானர்ஜி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் டி.ஜி.பிக்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஓய்வு பெற்ற பிறகு புதிய பதவியை வகிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். ஆனாலும் தேர்தல்களை மேற்பார்வையிட ஓய்வு பெற்ற அதிகாரிகளை நியமிப்பது தொடர்பாக அவர்கள் கவலைப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

source https://tamil.indianexpress.com/election/west-bengal-elections-2021-why-no-ec-complaint-against-those-who-talk-hindu-muslim-mamata-290194/

Related Posts: