சனி, 31 ஜூலை, 2021

பிரசாந்த் கிஷோர் கொடுத்த திட்டம் : காங்கிரஸ் தொடர் ஆலோசனை

 prasanth kishore

காங்கிரஸ் கட்சியை வலிமையாக்கவும், 2024-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு அக்கட்சியை பாஜகவுக்கு எதிராக வலிமை கொண்ட எதிர்க்கட்சியாக மாற்றவும் பிரசாந்த் கிஷோர் விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி புத்துயிர் பெறுவதற்கும், 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு தயாராவதற்கும் தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோர் கொடுத்த செயல் திட்ட முன்வரைவு குறித்து காங்கிரஸ் தலைமை ஆலோசித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியில் சீர்திருத்தம் மற்றும் மறுமலர்ச்சி குறித்து விவாதிக்க செயற்குழு உறுப்பினர்கள் குழுக்களாக கூடி விவாதிப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

பிரசாந்த் கிஷோர் இந்த மாத தொடக்கத்தில் ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை சந்தித்தபோது திட்டம் ஒன்றை முன்மொழிந்ததாக கூறப்படுகிறது. ஜூலை 13 ஆம் தேதி ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி வாத்ராவை அவர் சந்தித்தார். முன்பு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர் ஒருவர் கூறுகையில், தேர்தல் வியூகம், ஒருங்கிணைப்பு, மேலாண்மை மற்றும் கூட்டணி அமைப்பது உள்ளிட்ட விவகாரங்களில் கிஷோர் தீவிரமாக ஈடுபட விரும்புவதாகக் கூறினார். மற்றொரு தலைவர் “இது காங்கிரஸ் கட்சியை எவ்வாறு புதுப்பிப்பது என்பது குறித்த பட்டியல். கிஷோர் முறையாக கட்சிக்கு வர விரும்புகிறார். இது பற்றிய விவாதங்கள் மற்றும் அதை முன்னெடுத்து செல்வது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. பிரியங்கா காந்தி வத்ரா இதற்கு உந்து சக்தியாக செயல்படுகிறார்” என்றார்.

கட்சியில் அனைத்து முடிவுகளையும் எடுக்க ஒரு அதிகாரமளிக்கப்பட்ட குழுவை அமைக்கவும், மாநில மற்றும் மாவட்ட குழுக்களை வலுவாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கவும் கிஷோர் பரிந்துரைத்துள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது குறித்து விவாதிக்க காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் பல முறை சந்தித்து பேசியுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால் மற்றும் மூத்த தலைவர் ஏகே அந்தோணி ஆகியோர் கூட்டங்களை ஒருங்கிணைப்பதாக கூறப்படுகிறது. பிரசாந்த் கிஷோரின் திட்ட முன்வரைவு காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்களுக்கு விரிவாக பகிரப்படவில்லை ,சில முக்கியமான அம்சங்கள் மட்டும் வழங்கப்பட்டன என கட்சியை சேர்ந்த தலைவர் ஒருவர் கூறினார்.

முதல் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ப.சிதம்பரம், மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் AICC பொதுச் செயலாளர் பவன்குமார் பன்சால் ஆகியோர் கலந்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டாவது கூட்டத்தில் ராஜ்யசபா காங்கிரஸ் துணைத் தலைவர் ஆனந்த் சர்மா, AICC பொதுச் செயலாளர் ஹரிஷ் ராவத், கமல்நாத், ரகுவீர் மீனா மற்றும் அம்பிகா சோனி ஆகியோர் பங்கேற்றனர். மூன்றாவது கூட்டத்தில் பிரியங்கா, திக்விஜயா சிங், தாரிக் அன்வர் மற்றும் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர் ஒருவர் கூறுகையில், “விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் திட்ட முன்வரைவு குறித்து இப்போது தீவிரமாக சிந்திக்கப்படவில்லை. இப்போது, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்து என்பதே சவால். 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு இன்னும் மூன்று வருடங்கள் உள்ளது. காங்கிரஸ் போன்ற பெரிய கட்சியில் கலந்துரையாடல்கள் மற்றும் சந்திப்புகள் நடப்பது இயல்பு’ என கூறினார்.

source https://tamil.indianexpress.com/india/congress-discusses-plan-proposed-by-prashant-kishor-327584/

10 நாட்களுக்கு குறிப்பிட்ட இடங்களில் வணிக வளாகங்கள் செயல்படத் தடை – சென்னை மாநகராட்சி அதிரடி

 கொரோனா வைரஸ் தொற்று சென்னையில் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு 9 முக்கியமான பகுதிகளில் 10 நாட்களுக்கு கடைகள் செயல்பட அனுமதி மறுத்து அறிவித்துள்ளது சென்னை மாநகராட்சி.

கோவிட் நோய் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில், ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஊரடங்கை, எவ்வித தளர்வுகளும் இன்றி 09.08.2021 வரை நீட்டித்து அறிவித்துள்ளது தமிழக அரசு. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக பின்பற்ற மாநகராட்சி ஆணையர் மற்றும் காவல்துறை ஆணையருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவின் அடிப்படையில் மக்கள் அதிகம் கூடும் இங்களில் உள்ள வணிக வளாகங்கள் அடுத்த 10 நாட்களுக்கு செயல்படத் தடை விதித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த பகுதிகளில் வணிக வளாகங்கள் செயல்படாது?

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட, ரங்கநாதன் தெரு சந்திப்பில் வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் ரயில் நிலையம் வரை, புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் ப்ரூக்லின் சாலை வரை, ஜாம் பசார் பாரதி சாலை ரத்னா கஃபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை, ஃபக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு, பிலிபோன் பஜார், என்.எஸ்.சி. போஸ் குறளகம் முதல் தங்கசாலை சந்திப்பு வரை, ராயபுரம் மார்கெட் பகுதியில் கல்மண்டபம் சாலை, வாட்டர் டேங்க் முதல் காமாட்சி அம்மன் கோவில் வரை, அமைந்தகரை மார்கெட் பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலை அமைந்தகரை காவல் உதவி மையம் முதல் புல்லா அவென்யூ திரு.வி.க நகர் பூங்கா சந்திப்பு வரை மற்றும் ரெட்ஹில்ஸ் மார்க்கெட் பகுதியில் ஆஞ்சிநேயர் சிலை முதல் அம்பேத்கர் சிலை வரை உள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் இன்று (31/07/2021) முதல் 09/08/2021 வரை செயல்பட அனுமதி இல்லை என்று வணிக நிறுவனங்களுடன் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜீவால் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று கொத்தவால் சாவடி சந்தை 01.08.2021 முதல் 09.08.2021 காலை ஆறு மணி செயல்பட அனுமதி இல்லை என்று வணிகர் சங்க பிரதிநிதிகளுக்கு ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/coronavirus-chennai-corporation-orders-closure-of-shops-in-nine-areas-till-august-9-327772/

வெள்ளி, 30 ஜூலை, 2021

இலங்கையில் தாக்கப்பட்ட இந்தியத் தலைவர்

 

34 ஆண்டுகளுக்கு முன்பு, ஈழத்தமிழர் நலன் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட, இலங்கை சென்ற முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, அந்நாட்டு கடற்படை வீரர் ஒருவரால் தாக்கப்பட்டார். உலகை அதிரச் செய்த அந்த சம்பவத்தை இந்த கட்டுரையில் காணலாம்.

1987, ஜூலை 30 தலைநகர் கொழும்பில் அணிவகுப்பு மரியாதையை ஏற்றபோது அப்படி ஒரு தாக்குதலை, வேறு ஒரு நாட்டின் தலைவர் எதிர்கொண்டிருந்தால், அடுத்த நொடியே இலங்கை என்ற பெயரே இந்திய பெருங்கடலில் இல்லாமல் போயிருக்கும். ஆனால், அந்த தாக்குதலை பிரதமர் ராஜீவ் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. அதற்காகவெல்லாம், இந்திய படைகள் சும்மா இருந்துவிடவும் இல்லை.

இலங்கை கடற்படை வீரர் ஒருவரால் இந்திய பிரதமர் துப்பாக்கிக் கட்டையால் தாக்கப்பட்டார் என்ற தகவல் வெளியான நொடியே, இந்திய விமானப்படை உஷார்படுத்தப்பட்டது. ஆனால், நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கோரியதுடன், வருத்தமும் தெரிவித்தார் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே. அத்துடன், அந்த கடற்படை வீரர் விஜிதா ரோஹண விஜிமுனே, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்த வீரர் மூளைக்கோளாறு நோயால் பாதிக்கப்பட்டவர் என்றும் விளக்கமளித்தார் ஜெயவர்த்தனே. ஆனாலும், இலங்கை அரசு உலகரங்கில் கடும் கண்டனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

ஒரே ஒரு கேள்விதான் பிரதானமாக இருந்தது. ராஜீவ் காப்பாற்றப்பட்டார் என்ற போதிலும், ஏன் இந்த கொலை முயற்சி நடந்தது?

1983க்கு பிறகு, இலங்கை தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்திருந்தன. சொல்லொணா துயரங்களை அனுபவித்தனர் தமிழர்கள். 1987 ஜுன் மாதம், இலங்கை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சம்பவங்கள், மிகவும் கவலையளித்தன. இலங்கை ராணுவம் யாழ்ப்பாணத்தை முற்றுகையிட்டு, அங்குள்ள தமிழர்களை துன்புறுத்தின. மனித உரிமைகள் மீறப்பட்டன. உணவுப் பொருட்களுக்கும் தடை ஏற்படுத்தப்பட்டன. ஆனால், மனித நேயத்துடன் நடந்து கொள்ளுமாறு வலியுறுத்தினார் இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி.

அதே ஆண்டு, ஜுன் 2 ஆம் தேதி இந்தியாவில் இருந்து கப்பல்களில் உணவு பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால், அந்தக் கப்பல்களை தடுத்து நிறுத்தியது இலங்கை கடற்படை. இலங்கையின் எதிர்ப்பையும் மீறி, தமிழர்களை காப்பாற்ற ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொருட்களை அனுப்பி வைத்தார் ராஜீவ். இதனால், மிரண்டு போன இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே, போரை நிறுத்த ராஜீவின் எந்த திட்டத்திற்கும் ஆதரவளிக்க முன் வந்தார். இதனை தொடர்ந்து ராஜீவ் -ஜெயவர்த்தனே ஒப்பந்தத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உள்ளிட்டோரே அரை மனதுடன் தான் ஒப்புக்கொண்டிருந்தனர். இதே நிலை தான், சிங்கள மக்களிடமும் இருந்தது. ஆனால், அப்போதைய தமிழநாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர் ஒப்பந்தத்திற்கு ஆதரவளித்தார். பெரும்பாலான தமிழ்நாட்டு தலைவர்களின் எண்ணமும் அதுவாகவே இருந்தது. ஆனால், இலங்கையை இந்தியாவிடம் தாரை வார்த்து கொடுத்துவிட்டதாக குற்றஞ்சாட்டினர் புத்த பிக்குகள்.

இந்த நிலையில் தான், அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட கொழும்பு சென்றார் ராஜீவ்காந்தி. இலங்கை கடற்படை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. வெள்ளைச் சீருடை அணிந்த 72 கடற்படை வீரர்களுக்கு மத்தியில் பிரதமர் ராஜீவ் நடந்துவரத் தொடங்கினார். அப்போது, திடீரென ராஜீவ் காந்தியை நோக்கி தனது துப்பாக்கியை ஓங்கினார் ஒரு கடற்படை வீரர். அவருடைய நிழலை வைத்து சட்டென்று சுதாரித்துக்கொண்ட ராஜீவ், தாக்குதலில் இருந்து மிக லாவகமாகத் தப்பினார். இதனால் அவரது பின்னந்தலையில் விழவேண்டிய அடி தோளில் விழுந்தது. அந்த அடியால் சற்றே தடுமாறிப் போனார் ராஜீவ் காந்தி.

உலகமே அதிர்ந்தாலும் ராஜீவ் அதிரவில்லை. அவர் இந்த சம்பவத்தை பெரிதுபடுத்தவும் இல்லை. இப்போது ராஜீவ் காந்தி இல்லையென்றாலும், 34 ஆண்டுகளை கடந்தும் இருநாட்டு மக்களால் மறக்க முடியாத ஒரு சம்பவமாகிவிட்டது இது.

 

கட்டுரையாளர்: வரலாறு சுரேஷ்

source news 7 

பெகாசஸ் விவகாரம்; அடுத்த வாரம் விசாரணை

 30 07 2021பெகாசஸ் விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது அடுத்த வாரத்தில் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

முக்கிய பிரமுகர்களின் தொலைபேசி அழைப்புகள், பெகாசஸ் என்ற மென்பொருளை பயன்படுத்தி ஒட்டுக்கேட்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்திலும் தினமும் இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தக்கோரி பத்திரிகையாளர் என். ராம், அரசியல் கட்சியினர் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மற்றும் ரிட் மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

இதுதொடர்பான வழக்கை அவசர வழக்கான விசாரிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, பெகாசஸ் விவகாரம் தொடர்பான வழக்குகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளார்.

source https://news7tamil.live/pegasus-issue-enquiry-started-in-next-week.html

ஆகஸ்ட் மாதம் முதல் குழந்தைகளுக்கு கோவிட்-19 தடுப்பூசி; மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்

 Covid-19 vaccine for children likely in august, Health Minister Mansukh Mandaviya, குழந்தைகளுக்கு கோவிட் 19 தடுப்பூசி, கோவாக்சின், சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, covid 19 vaccines, covaxine, union govt, coronavirus, covid vaccine for children, india

அரசாங்கம் அடுத்த மாதம் முதல் கோவிட் 19க்கு எதிராக குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை தொடங்கும் என்று ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக நாடாளுமன்றக் கூட்டத்தில் கூறினார் என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், அவர் பல நிறுவனங்கள் தடுப்பூசி உற்பத்தி உரிமங்களைப் பெறுவதால், மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா திகழ்கிறது என்று கூறினார்.

இந்த மாத தொடக்கத்தில், 12 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் விரைவில் கிடைக்கக்கூடும் என்றும், ஒப்புதல் பெற்ற பிறகு அவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான கொள்கை வகுக்கப்படும் என்றும் மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

டி.என்.ஏ தடுப்பூசிகளை உருவாக்கி வரும் ஜைடஸ் காடிலா, 12-18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் சோதனைகளை முடித்துள்ளதால், சட்ட விதிகளுக்கு உட்பட்டு, தடுப்பூசி எதிர்காலத்தில் கிடைக்கக்கூடும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கோவாக்சின் தயாரிப்பாளரான பாரத் பயோடெக் 2-18 வயதுக்குட்பட்டவர்களுக்கு மருத்துவ தடுப்பூசி பரிசோதனைகளை நடத்த இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் அரசாங்கம் தெரிவித்திருந்தது.

ஃபைசரின் எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசி ஐரோப்பிய ஒன்றியத்தில் 12-15 வயதுடைய இளம் சிறார்களுக்கு பயன்படுத்த சோதனை செய்யப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், குழந்தைகளில் இன்னும் பரிசோதிக்கப்பட்டுவருகிற கோவாக்சினை தயாரிக்க இந்தியாவின் உள்நாட்டு திறனைப் பயன்படுத்த வேண்டும் என்பது எதிர்பார்ப்பு என்று மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்குத் தெரிவித்தார்.

ஏனென்றால், ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி போடுவது என்பது குழந்தைகளுக்கு முழுமையாகப் பயன்படுத்தப்பட்டாலும் கூட, தடுப்பூசி தேவைக்கு மிகவும் குறைவாக உள்ளது என்று அந்த அதிகாரி கூறினார்.

ஃபைசர் தடுப்பூசிகள் உண்மையில் இந்தியாவுக்கு எவ்வளவு விரைவாக வரக்கூடும் என்பதில் நிச்சயமற்ற தன்மையும் உள்ளது, நாட்டின் தடுப்பூசி முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரி ஒருவர் கூறினார்.

ஃபைசர் உடன் ஒப்பிடும்போது, ​​பாரத் பயோடெக் பெரிய ஆர்டர்களைப் பூர்த்தி செய்ய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தடுப்பூசி தயாரிப்பாளர் கோவாக்சின் தடுப்பூசியை 2 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்ய அனுமதி பெற்றுள்ளது. பரிசோதனை வெற்றிகரமாக அமைந்தால் அதன் தடுப்பூசி அதிக எண்ணிக்கையிலான மக்களை சென்றடையும்.

80 சதவீத கவரேஜ் உத்திப்படி, 104 மில்லியன் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு போதுமான அளவில் அரசாங்கம் திட்டமிட வேண்டும். எனவே, இந்த நடைமுறைக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி என்றால் குறைந்தது 208 மில்லியன் டோஸ் தேவைப்படும். மூன்று டோஸ் தடுப்பூசி விஷயத்தில், தடுப்பூசிகளின் தேவை மிக அதிகமாக இருக்கும்.

முன்னதாக, எய்ம்ஸ் தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா, குழந்தைகளுக்கு கோவிட் -19 தடுப்பூசி கிடைக்கச் செய்வது ஒரு மைல்கல் சாதனையாக இருக்கும். பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கும், வெளிப்புற நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கும் இது வழிவகுக்கும் என்று கூறியிருந்தார். குழந்தைகளுக்கு பெரும்பாலும் COVID-19 இன் லேசான நோய்த்தொற்றுகள் இருந்தாலும், சில அறிகுறிகளற்றவையாக இருந்தாலும், அவை நோய்த்தொற்றை எடுத்துச் செல்பவைகளாக இருக்கலாம் என்று அவர் வலியுறுத்தினார்.

COVID-19 தொற்றுநோயால் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ஆய்வுகளில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய எய்ம்ஸ் தலைவர், “பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட வேண்டும், தடுப்பூசி போடுவதில் முக்கிய பங்கு வகிக்க முடியும். தடுப்பூசி என்பது தொற்றுநோயிலிருந்து வெளியேறுவதற்கான வழி” என்று கூறினார்.

source https://tamil.indianexpress.com/india/covid-19-vaccine-for-children-likely-in-august-health-minister-mansukh-mandaviya-326762/

சோனியா – மம்தா சந்திப்பு: பாஜகவுக்கு எதிராக அணி திரள அழைப்பு

 29 07 2021

India news in tamil: Mamata Banerjee rallies parties against BJP

Mamata Banerjee news in tamil: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்தி 3-வது முறையாக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்ட மம்தா பானர்ஜி, 2024 மக்களவைத் தேர்தலுக்காக எதிர் காட்சிகளை ஓரணியில் திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். 5 நாள் பயணமாக டெல்லியில் முகாமிட்டுள்ள அவர் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை நேற்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இது குறித்து மம்தா பானர்ஜி பேசுகையில், “நான் இன்று சோனியா காந்தி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை சந்தித்தேன். நேற்று லாலு பிரசாத் யாதவுடன் பேசினேன். பாராளுமன்றத்தின் பருவமழைக் கூட்டத்தொடர் முடிந்ததும் சில விவாதங்கள் நடந்துள்ளன, மேலும் இன்னும் உறுதியான விவாதங்கள் நடைபெறும்.

தேர்தல்கள் நெருங்கும்போது, கூட்டணி குறித்து ​​எதிர்க்கட்சிகள் முடிவு செய்யும். நரேந்திர மோடியை எதிர்த்து நாடே போரிடும். அப்போது அவருக்கு எதிராகப் போராட பல முகங்கள் இருக்கும். பாஜக கட்சி அளவில் பெரியதாக இருக்கலாம், ஆனால் அரசியல் கோணத்தில் எதிர்க்கட்சிகள் வலுவாக இருக்கும். அவர்கள் அனைவரும் இணைத்து ஒரு புதிய வரலாற்றை உருவாக்குவார்கள்.

எதிர்வரும் நாட்களில் மாநில கட்சிகள் ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் என நம்புகிறேன். எனக்கு நவீன் பட்நாயக், ஜெகன் மோகன் ரெட்டி, முக ஸ்டாலின் (திமுக) போன்றவர்களுடன் நல்ல உறவு உள்ளது. இவர்களுடனான கூட்டணி இன்று நடக்கவில்லை என்றாலும் நாளை அது நிச்சயம் நடக்கும். அரசியலில் ஒரு புயல் உருவெடுத்தால் அதை யாராலும் தடுக்க முடியாது.

ஒவ்வொரு மாநிலக் கட்சியும் வலிமையானவை என்றுதான் நான் எண்ணுகிறேன். இந்த கட்சிகள் ஒன்றாக இருந்தால், அவை ஒரு சக்தியாக உருவெடுக்கும். இந்த சக்தி ஒரு கட்சியின் கீழ் உள்ள தலைமையை விட வலிமையானது. நேர்மை இருந்தால், ஒற்றுமை இருக்கும், கிடைக்கும் வாக்குகளும் சிதறாது.

எனக்கு பிரதமராக விருப்பம் இல்லை. ஒரு சாதரண தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன்.

சோனியா காந்தி அவர்கள் என்னை ஒரு கப் டீ அருந்த அழைத்தார், அப்போது ராகுல் காந்தியும் உடன் இருந்தார். அரசியல் நிலைமை குறித்து பொதுவாக விவாதித்தோம். பெகாசஸ் மற்றும் கோவிட் நிலைமை பற்றியும் விவாதித்தோம். தொடர்ந்து எதிர்க்கட்சி ஒற்றுமை பற்றி விவாதித்தோம். ஒரு சாதகமான முடிவு வெளிவரும் என நம்புகிறேன்.

ஸ்னூப்பிங் விவகாரத்தை விவாதிக்க மக்களவை ஒரு சிறந்த இடம்.மக்களவை மற்றும் மாநிலங்களவை கொள்கை முடிவுகள் அறிவிக்கப்படாவிட்டால், அவை விவாதிக்கப்படாவிட்டால், அவை எங்கே விவாதிக்கப்படும்?” இவ்வாறு மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

source https://tamil.indianexpress.com/india/india-news-in-tamil-mamata-banerjee-rallies-parties-against-bjp-327209/


டோக்கியோ ஒலிம்பிக்ஸில் வீரர்களின் ஆடைத் தேர்வு எவ்வாறு பேசுபொருளானது?

 Ektaa Malik

Tokyo Olympics : பதக்கப்பட்டியல்கள், புதிய உலக சாதனைகள், கண்கவர் செட்டுகள் போன்றவை ஒலிம்பிக்கை சுற்றியுள்ள உரையாடல்களில் அதிக முக்கியத்துவம் பெறும். தற்போது நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் பேசுபொருளாய் மாறியுள்ளது விளையாட்டுத் துறையில் நிலவி வரும் பாலியல்மயமாக்கல் போக்கு. ஜெர்மனியின் பெண்கள் ஜிம்னாஸ்டிக் அணி பாரம்பரியமான லியோடார்டுகளுக்கு பதிலாக, யூனிடார்டுகளை அணிந்து போட்டியில் பங்கேற்ற போது இந்த சொற்றொடர் தலைப்பு செய்திகளில் இடம் பெற்றது.

புதிய பக்கத்தை திருப்பிய வீராங்கனைகள்

ஜெர்மனியின் பெண்கள் ஜிம்னாஸ்டிக் குழுவினர் தாங்கள் தேர்வு செய்த ஆடைகள் மூலமாக தலைப்பு செய்திகளில் இடம் பெற்றனர். தகுதி சுற்றுகளுக்காக நடைபெற்ற போட்டிகளில் சாரா வோஸ் (Sarah Voss), பாலின் ஸ்கேஃபர் பெட்ஸ் (Pauline Schaefer-Betz), எலிசபெத் செய்ட்ஸ் (Elisabeth Seitz) , கிம் புய் (Kim Bui) அடங்கிய இந்த குழு சிவப்பு மற்றும் வெள்ளை நிற முழு உடலையும் மறைக்கும் யூனிடார்டுகளை அணிந்து கொண்டனர். இது தொடர்பாக ஏற்கனவே கலந்து ஆலோசனை செய்த அவர்கள் பிறகு அந்த ஆடைகளை அணைந்து போட்டிகளில் கலந்து கொண்டனர். சுதந்திரமான தேர்வுகளையும், சகஜமாக உணர வைக்கும் உடைகளை அணிந்து கொள்ள பெண்களை ஊக்குவிக்கவும் முயற்சிக்கும் வகையில் இந்த ஆடைகளை அவர்கள் அணிந்து கொண்டனர்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற ஐரோப்பாவில் நடைபெற்ற ஐரோப்பியன் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்ற இந்த அணி அப்போதும் யூனிடார்டுகளையே அணிந்தனர்.

Olympics, Olympics news

லியோடார்ட் Vs யூனிடார்ட்

ஜிம்னாஸ்டிக் மற்றும் நடனங்களுக்கு ஏற்ற வகையில் விரிந்து கொடுக்கும் தன்மையை கொண்ட ஸ்பாண்டெக்ஸ் மற்றும் லைக்ரா வகை துணிகளை கொண்டு லியோடார்ட் மற்றும் யூனிடார்ட் போன்ற உடலோடு ஒட்டும் ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன. ஜெர்மன் நாட்டு அணியினர் அணிந்திருந்த ஆடை யூனிடார்ட் வகையை சார்ந்தது. இது போட்டியாளரின் உடலை கைகளில் இருந்து கணுக்கால் வரை முழுமையாக மறைக்கிறது. இது பாரம்பரிய ஆடைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. பாரம்பரியமாக பிகினி- ஆடைகள் போன்று வெட்டப்பட்டு தைக்கப்படும் லியோடார்டுகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. உடலை இறுக்கும் ஒரே துணியால் தகைப்படும் ஆடை உடலின் மேல் பகுதியை மூடி , கால்கள் முழுமையாக தெரியும்படியான ஆடைகளாக இருந்தன.

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பெண் விளையாட்டு வீரர்கள் மற்றும் நடனக்கலைஞர்கள் அணைந்து வரும் இந்த வகையிலான ஆடையை உருவாக்கியவர் பிரான்ஸை சேர்ந்த ஜூல்ஸ் லியோடார்ட். மற்றொரு பக்கம் ஆண்கள் உடலை முழுமையாக மறைக்கும் வகையிலான ஆடைகளை அணிகின்றனர். ஒலிம்பிக் விதி புத்தகம் விளையாட்டு வீரர்களுக்கு முழு உடல் ஆடைகளை அணிய அனுமதிக்கிறது, ஆனால் ஒரு தடகள வீரர் அதை மத காரணங்களுக்காக தேர்வு செய்த நிகழ்வுகள் அரிதாகவே நிகழ்ந்துள்ளது.

ஆடை தேர்வுக்காக அபராதம் செலுத்திய நார்வே அணி

விளையாட்டு உலகில் ஆடைத் தேர்வுக்காக தலைப்பு செய்திகள் இடம் பெற்றவர்கள் ஜெர்மனி அணியினர் மட்டும் அல்ல. நார்வே நாட்டின் கடற்கரை கைப்பந்து விளையாட்டு வீராங்கனைகள், பிகினி கீழாடைகளுக்கு பதிலாக ஷார்ட்ஸ் அணிந்து ஐரோப்பிய பீச் ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்றனர்.

மண்ணில் கீழே விழ வேண்டிய சூழல் ஏற்படுவதால் பிகினி கீழ் ஆடைகள், விளையாட்டுக்கு ஏற்ற ஆடைகள் என்ற முடிவுக்கு வந்த நார்வே அணி ஷார்ட்ஸ் அணிந்து விளையாட சென்றனர். ஒரு சிலரால் பிகினி ஆடைகள் பெண்களை இழிவு படுத்தும் வகையில் பார்க்கப்படுகிறது என்பதால் ஷார்ட்ஸை தேர்வு செய்தனர். இந்த அணிக்கு ஐரோப்பிய கைப்பந்து சங்கம் 1500 யூரோக்கள் அபராதம் விதித்தது. தங்கள் நாட்டு வீராங்கனைகளுக்கு ஆதரவு தரும் வகையில் நார்வே நாடு அந்த அபராதத்தை ஏற்றுக் கொண்டது. பாப் ஸ்டார் பிங், இந்த அபராத தொகையை செலுத்த தானாக முன்வந்ததார் என்பது குறிப்பிடத்தக்கது.

Olympics, Olympics news

இதன் தாக்கம் எப்படி இருக்கும்?

ஜெர்மன் நாட்டின் பெண்கள் அணியினர் முடிவுக்கு உலக அளவில் ஆதரவு கிடைத்தது. நான்கு முறை ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற சைமோன் பில்லி இந்த முடிவை கைத்தட்டி வரவேற்றார். இருப்பினும் அவர் பிகினி-கட் லியோடார்ட் ஆடை அணியவே விருப்பம் தெரிவித்தார். இந்த ஆடை அவரை உயரமாக காட்டுவதாக அவர் கூறினார்.

அணியின் நிலைப்பாட்டின் நேரடி விளைவாக, ஒலிம்பிக் ஒளிபரப்பு சேவைகள் “பெண் விளையாட்டு வீரர்களின் வெளிப்படையான செக்ஸுவலைஸ்ட் புகைப்படங்களை காட்சிப்படுத்துவதை கட்டுப்படுத்த அழைப்பு விடுத்துள்ளது.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, வழிகாட்டுதல்களை புதுப்பித்து அறிவித்தது. பாலியல் சமத்துவம் மற்றும் நேர்மையான ஒளிபரப்பினை நிகழ்வுகளின் போது நடத்து வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. “தோற்றம், உடை அல்லது நெருக்கமான உடல் பாகங்கள் ஆகியவற்றில் தேவையின்றி கவனம் செலுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/explained/how-tokyo-olympics-have-turned-the-lens-on-sexualisation-of-sport-327170/

மாநில தேர்தல்களை கருத்தில் கொண்டு வழங்கப்படுகிறதா ஓ.பி.சி. இட ஒதுக்கீடு?

 Govt quota move part of OBC : உத்தரபிரதேச மாநில சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், மருத்துவக் கல்லூரிகளில் இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் (EWS) பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க ஒப்புதல் அளிக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு வியாழக்கிழமை மேற்கொண்ட நடவடிக்கை அதன் சமூக நீதி அரசியலை வலுப்படுத்துவதைக் குறிக்கிறது.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை சென்றடைய மோடி அரசு எடுத்துக் கொண்ட இரண்டு மிக முக்கியமான நடவடிக்கைகளுக்கு அடுத்தது என்று கருதப்படுகிறது. இந்த பிரிவில் கடந்த 10 ஆண்டுகளில் பாஜகவின் ஆதரவு தளம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மோடி அரசின் சமீபத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில், ஓ.பி.சி. பிரதிநிதிகளின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்தது. மேலும் அதில் 5 நபர்கள் கேபினட் அமைச்சர்களாக உள்ளனர். மேலும், மராட்டிய இடஒதுக்கீடு தீர்ப்பில் அரசியலமைப்பின் 102 வது திருத்தத்தின் நீதிமன்றத்தின் விளக்கத்தை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனுவை தாக்கல் செய்தது. இது சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய வர்க்கங்களை அடையாளம் கண்டு அறிவிக்க மாநிலங்களின் அதிகாரத்தை அது அகற்றியது.

மறுஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில், சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய வர்க்கங்களை அடையாளம் காண மாநிலங்களுக்கு அதிகாரங்களை வழங்கக் கோரும் திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வர வாய்ப்புள்ளது என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன – இது ஓபிசி சமூகத்தின் பிரதிநிதிகள் கோரிய மிக முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாகும்.

கடந்த காலங்களில் தேர்தல் வெற்றிகளுக்காக இதர பிற்படுத்தப்பட்டோர் ஆதரவு தளத்தை அதிகம் நம்பி இருந்தது பாஜக. ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற பிகார் தேர்தலில், நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடனான கூட்டணியில் அந்த ஆதரவு தளத்தை பாஜக பெறமுடியாமல் திணறியது. இது அவர்களை எதிர்த்து போட்டியிட்ட ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி பின் தங்கியவர்களின் ஆதரவை கணிசமாக பெற்றுள்ளது என்பதை குறிக்கிறது. ஆனால் வருகின்ற உத்திரப்பிரதேச தேர்தலில், ஓ.பி.சி. ஆதரவு தளம் அப்படியே நீடிப்பதை பாஜக உறுதி செய்ய விரும்புகிறது. காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் பலவீனம் அடைந்து வருகின்ற நிலையில் சமாஜ்வாடி கட்சி ஓபிசி வாக்குகளில் ஒரு பகுதியை கைப்பற்றி சிறுபான்மை வாக்குகளை ஒருங்கிணைக்க முடியும் என்று பிஜேபி வியூகம் வகுத்து வருகிறது.

2019ம் ஆண்டு பொதுத்தேர்தலில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தும், பின்னர் நடைபெற்ற மாநில தேர்தல்களில் வெற்றி பெற்ற பிறகும் கூட, பாஜக போதுமான அதிகாரங்களையும் பதவிகளையும் ஓ.பி.சி. பிரதிநிதிகளுக்கு வழங்கவில்லை என்று கட்சி தலைவர்கள் பலர் ஒப்புக் கொண்டனர். ஆனாலும், சமீபத்திய அமைச்சரவை மறுசீரமைப்பு அந்த அச்சங்களை குறைத்துள்ளது என்று மூத்த கட்சி தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

மருத்துவக் கல்லூரிகளில் ஓ.பி.சி. மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பான மத்திய அரசின் முடிவானது, பாஜக மற்றும் என்.டி.ஏ. கூட்டணியில் உள்ள ஓ.பி.சி. பிரதிநிதிக்கள்மோடியை சந்தித்து, மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி. மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு அனைத்திந்திய கோட்டாவில் இடம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு ஒரு நாள் ஆன நிலையில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இது மிகவும் முக்கியமான முடிவு என்று பாஜக எம்.பி. கனேஷ் சிங் கூறினார். வேலைகளில் OBC களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு இருந்தபோதிலும், பொருளாதார மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் இடஒதுக்கீடு சலுகைகளைப் பெறவில்லை. ஓபிசி சமூகங்களிலிருந்து ஏராளமான புகார்கள் வந்துள்ளன, நிலைமை சற்று மோசமாகி வருகிறது. பாஜக ஒரு கட்சியாக அது அநீதியாக உணரத் தொடங்கியது, அது நியாயமில்லை என்று பிரதமர் மோடிஜியும் ஒப்புக்கொண்டார் என்று அவர் குறிப்பிட்டார்.

ஓ.பி.சிக்காக அதிகம் உழைத்த கட்சி என்றால் அது பாஜக தான். மண்டேல் ஆணையத்திற்கு பிறகு இந்த பிரிவில் எதுவும் அதிகம் ந்நடைபெறவில்லை. ஆனால் இந்த அரசாங்கம் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான தேசிய ஆணையத்திற்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கும் மசோதாவை நிறைவேற்றியது, ”என்று அவர் கூறினார்.

source https://tamil.indianexpress.com/india/govt-quota-move-part-of-obc-outreach-ahead-of-key-state-polls-327504/

மேக வெடிப்புகள் ஏன் அடிக்கடி நிகழ்கின்றன?

 29 07 2021 What is Cloudbursts Why cloud bursts frequently Tamil News : ஜூலை 28 அன்று, ஜம்மு -காஷ்மீர் கிராமத்தில் மேக வெடிப்பு ஏற்பட்டதில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர், 17 பேர் காயமடைந்தனர் மற்றும் 35-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. அண்மையில், ஜே & கே, யூனியன் பிரதேசமான லடாக், உத்தரகண்ட் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் பல இடங்களிலிருந்து மேக வெடிப்புகள் பதிவாகியுள்ளன. இந்திய இமயமலையில் மேக வெடிப்பு பற்றிய 2017 ஆய்வில், பெரும்பாலான நிகழ்வுகள் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நிகழ்ந்தன.

மேக வெடிப்பு என்றால் என்ன?

மேக வெடிப்பு  என்பது ஒரு சிறிய பகுதியில் குறுகிய கால, தீவிர மழை நிகழ்வுகள். இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (ஐஎம்டி) கருத்துப்படி, இது ஒரு புவியியல் பகுதியில் சுமார் 20-30 சதுர கி.மீ பரப்பளவில் எதிர்பாராத மழைப்பொழிவு, 100 மி.மீ / மணிநேரத்திற்கு மேல் இருக்கும்.

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, கேதார்நாத் பிராந்தியத்தில் மேக வெடிப்புக்குப் பின்னால் உள்ள வானிலை காரணிகளைக் கண்டறிந்தது. வளிமண்டல அழுத்தம், வளிமண்டல வெப்பநிலை, மழைப்பொழிவு, மேக நீர் உள்ளடக்கம், cloud fraction, மேகத் துகள் ரேடியஸ், மேகக் கலவை விகிதம், மொத்த மேகக்கணி, காற்றின் வேகம், காற்றின் திசை மற்றும் மேகமூட்டத்தின் போது ஈரப்பதம் ஆகியவற்றை அவர்கள் பகுப்பாய்வு செய்தனர். மேக வெடிப்பின் போது, ​​ஈரப்பதம் மற்றும் அதன் குறைந்த வெப்பநிலை மற்றும் மெதுவான காற்றுடன் அதிகபட்ச மட்டத்தில் இருப்பதாக முடிவுகள் காண்பித்தன. “இந்த சூழ்நிலையின் காரணமாக அதிக அளவு மேகங்கள் மிக விரைவான விகிதத்தில் ஒடுக்கப்பட்டு மேக வெடிப்பு ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று குறிப்பிட்டிருந்தனர்.

இதுபோன்ற மேக வெடிப்புகளை நாம் பார்ப்போமா?

காலநிலை மாற்றம், உலகெங்கிலும் உள்ள பல நகரங்களில் மேக வெடிப்புகளின் அதிர்வெண் மற்றும் தீவிரத்தை அதிகரிக்கும் என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன. மே மாதத்தில், உலக வானிலை அமைப்பு, வருடாந்திர சராசரி உலக வெப்பநிலையானது தற்காலிகமாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒன்றில் குறைந்தபட்சம் தொழில்துறைக்கு முந்தைய நிலைக்கு மேல் 1.5 ° C-ஐ எட்டுவதற்கு 40% வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிட்டது. மேலும், 2021 மற்றும் 2025-க்கு இடையில் குறைந்தது ஒரு வருடத்திற்கு 90% நிகழ்தகவு இருப்பதாகவும், இது 2016-ம் ஆண்டின் மிக உயர்ந்த பதிவை தோற்கடிக்க வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிடுகிறது.

“வெப்பநிலை அதிகரிக்கும் போது வளிமண்டலம் மேலும் ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ளும். இந்த ஈரப்பதம் குறுகிய காலத்திற்கு மிகக் குறுகிய மழை அல்லது அரை மணிநேரம் அல்லது ஒரு மணி நேரத்திற்கு மலையகப் பகுதிகளில் திடீர் வெள்ளம் மற்றும் நகரங்களில் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தும். மேலும், உலகளவில் குறுகிய கால மழைப்பொழிவு தீவிரமாக மாறப்போகிறது என்பதற்கான சான்றுகள் உள்ளன. காலநிலை மாற்றம் அல்லது வெப்பமயமாதல், எதிர்காலத்தில் அதிகரித்த அதிர்வெண்ணில் இந்த மேக வெடிப்பு நிகழ்வுகளை நாம் நிச்சயமாகக் காண்போம்” என்று ஐ.ஐ.டி காந்திநகரில் உள்ள சிவில் இன்ஜினியரிங் மற்றும் எர்த் சயின்ஸைச் சேர்ந்த விமல் மிஸ்ரா விளக்குகிறார்.

மேக வெடிப்புகளை நம்மால் கணிக்க முடியுமா?

“இது மிகவும் சவாலான பணி மற்றும் மேக வெடிப்பை மாதிரியாக்குவது மிகவும் கடினம்” என்று மும்பை ஐஐடியில் சிவில் இன்ஜினியரிங் துறையைச் சேர்ந்த சுபிமல் கோஷ் கூறுகிறார். அவருடைய குழு இந்திய பருவமழை மற்றும் நீர்நிலை காலநிலை குறித்து ஆய்வு செய்து வருகிறது.

மாதிரிகள் அந்தத் தீர்மானத்தில் உண்மையில் இயங்காது என்று பாப்கார்ன் உதாரணத்துடன் மேலும் அவர் விரிவாக விளக்குகிறார். “நீங்கள் பாப்கார்னை உருவாக்குகிறீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். சமைக்கும் பானை வெப்பமடைகிறது மற்றும் சோளம் உதிர்கிறது. எந்த சோளம் முதலில் உதிக்கும் என்று நான் கேட்டால், உங்களால் பதில் சொல்ல முடியாமல் போகலாம். டிகோட் செய்ய உங்களுக்கு மிகச் சிறந்த தெளிவுத்திறன் ஆய்வுகள் தேவை. மேலும், இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு எவ்வளவு சோளம் வரும் என்று நான் உங்களிடம் கேட்டால், நீங்கள் 99% சொல்ல முடியும். ஆனால் 10 விநாடிகளுக்குப் பிறகு எத்தனை என்றால் சொல்ல முடியுமா? சிறந்த தீர்மானம் மற்றும் சிறந்த நேர அளவிற்கு அதன் பதில் கடினம். இதேபோல், மணிநேர மழை மற்றும் மேக வெடிப்புகளுக்கு, தீவிரத்தையும் இடத்தையும் உருவகப்படுத்துவது மிகவும் கடினம்” என்று கூறினார்.

source https://tamil.indianexpress.com/explained/what-is-cloudbursts-why-cloud-bursts-frequently-tamil-news-327499/

நீட் 2021 : ஓ.பி.சி., பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள்., மற்றும் அனைந்திந்திய இட ஒதுக்கீடு

 30 07 2021 NEET’s All India Quota, and OBC & EWS reservation : நாடு முழுவதும் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்காக நடத்தப்படும் நீட் தேர்வுக்கான அனைத்திந்திய இட ஒதுக்கீட்டில் ஓ.பி.சி. மற்றும் பொருளாதாரத்தால் நலிவடைந்த பிரிவினரையும் (EWS) இணைத்து, புதன்கிழமை இட ஒதுக்கீட்டுக்கு அனுமதி வழங்கியது மத்திய அரசு.

நீட் என்றால் என்ன?

National Eligibility-cum-Entrance Test (NEET) என்பது மருத்துவ இளம்நிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வாகும். இது மருத்துவம் மற்றும் பல்மருத்துவம் படிக்க நாடு முழுவதும் நடத்தப்படும் தகுதி தேர்வாகும்.

2016ம் ஆண்டுக்கு முன்பு தேசிய அளவிலான மருத்துவப் படிப்புகளுக்கு All India Pre-Medical Test (AIPMT) என்ற நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. மாநில அரசுகள் அம்மாநிலங்களில் இருக்கும் மற்ற இடங்களுக்கு நுழைவுத் தேர்வுகளை மாநில அளவில் நடத்தியது. 2003ம் ஆண்டு முதன்முறையாக நீட் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் அடுத்த ஆண்டே நீட் தேர்வுகள் கைவிடப்பட்டன.

ஏப்ரல் 13, 2016 அன்று, இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தில் புதிதாக இணைக்கப்பட்ட பிரிவு 10டியை உச்ச நீதிமன்றம் ஆதரித்தது. இது நாடு முழுவதும் உள்ள மருத்துவ படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்களில் இளம்நிலை மற்றும் முதுநிலை மருத்துவம் படிக்க ஆங்கிலம் மற்றும் இதர இந்திய மொழிகளில் நுழைவுத் தேர்வு எழுதுவதை கட்டாயமாக்கியது.

அன்று முதல் நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கு ஒரே சீராக நீட் தேர்வு நடத்தப்படுகிறது. ஆரம்பத்தில் இந்த தேர்வுகளை சி.பி.எஸ்.இ. நடத்தியது. 2018ம் ஆண்டு முதல் இந்த தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. 2020ம் ஆண்டில் 15.97 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்றனர். இந்த ஆண்டு நீட் தேர்வு செப்டம்பர் 11 ( இளம்நிலை) மற்றும் செப்டம்பர் 12 (முதுநிலை) தேதிகளில் நடைபெற உள்ளது.

அனைத்திந்திய இட ஒதுக்கீடு என்றால் என்ன?

நாடு முழுவதும் ஒரே மாதிரியாக தேர்வுகள் நடைபெற்றாலும், ஒவ்வொரு மாநிலத்திலும், அங்கு வாழும் மாணவர்களுக்காக குறிப்பிட்ட அளவு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 15% (இளம்நிலை) மற்றும் 50% (முதுநிலை) இடங்கள் மட்டும் அனைத்திந்திய இட ஒதுக்கீட்டிற்கு மாநில அரசுகளால் வழங்கப்பட்டுள்ளது. அனைத்திந்திய இட ஒதுக்கீடு 1986ம் ஆண்டு, எந்த ஒரு மாநிலத்தில் பிறந்திருக்கும் மாணவர்களும், எந்த ஒரு மாநிலத்திலும் உள்ள சிறந்த மருத்துவக் கல்லூரிகளில் மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்ந்து படிக்க முடியும் என்ற உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களின் படி, அறிமுகம் செய்யப்பட்டது.

நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்கும் மாணவி, உதாரணமாக உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு மாணவி, மேற்கு வங்கத்தில் ஒரு மாநில அரசு மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கு தகுதியுடையவர் ஆவார். தேசிய இட ஒதுக்கீட்டில் அவர் நல்ல இடம் பெறவில்லை என்றால், அவருடைய மாநிலத்தில் வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில் அவர் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பினை அவர் நம்பலாம். மத்திய பல்கலைக்கழகங்கள், ESIC மற்றும் ஆயுதப்படை மருத்துவக் கல்லூரி (AFMC) போன்ற இடங்களில் உள்ள அனைத்து இடங்களும் அனைத்திந்திய இட ஒதுக்கீட்டிற்கு வழங்கப்படுகிறது.

இதுவரை பின்பற்றப்பட்ட இட ஒதுக்கீட்டு கொள்கை என்ன?

அனைத்திந்திய கோட்டாவில் 2007ம் ஆண்டு வரை இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. ஜனவரி 31, 2007ம் ஆண்டு அன்று, டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் இதர பல்கலைக்கழங்களுக்கு எதிரான அபய் நாத் என்பவரின் வழக்கில் உச்ச நீதிமன்றம் 15% இட ஒதுக்கீட்டை பட்டியல் இன மாணவர்களுக்கும் 7.5% இட ஒதுக்கீடு பட்டியல் பழங்குடியினருக்கும் வழங்கி உத்தரவிட்டது.

அதே ஆண்டு, அரசு மத்திய கல்வி நிறுவனங்கள் (சேர்க்கையில் இட ஒதுக்கீடு) சட்டம், 2007-ஐ நிறைவேற்றியது. அதில் 27% இட ஒதுக்கீடு ஓ.பி.சி. மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் என்பது முக்கிய சிறப்பம்சமாக இருந்தது. மாநில அரசு மருத்துவம் மற்றும் பல்மருத்துவ கல்லூரிகளில் அனைத்திந்திய இட ஒதுக்கீட்டிற்கு வெளியே ஓ.பி.சிகளுக்கு இட ஒதுக்கீட்டை வழங்கியது. ஆனால் இந்த ஒட ஒதுக்கீட்டின் பலன், அனைத்திந்திய இட ஒதுக்கீடுகள் வழங்கப்பட்ட மாநில கல்லூரிகள் வரை சேரவில்லை. பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டை வழங்கும் அரசியல் சாசன சட்டம் 2019 (103வது திருத்த சட்டம்) அனைத்து மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் கொண்டு வரப்பட்டது. ஆனால் நீட் தேர்வுகளில் அது இணைக்கப்படவில்லை.

இப்போது என்ன மாறியுள்ளது?

ஓ.பி.சி. மற்றும் பொருளாதாரத்தில் பின்னடைந்தவர்களுக்கான இட ஒதுக்கீடு அனைத்திந்திய கோட்டாவில் இந்த ஆண்டு முதல் இடம் பெறும். 1500 ஓ.பி.சி. மாணவர்களும், மருத்துவ மேற்படிப்பு படிக்க 2500 ஓ.பி.சி. மாணவர்களும் இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் பயன் அடைவார்கள். அதே போன்று முறையே 550 மற்றும் 1000 பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் இதன் மூலம் பயன் அடைவார்கள் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

2017ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையில் மாநில அரசுகளால் நடத்தப்படும் மருத்துக் கல்லூரிகளில் அனைத்திந்திய கோட்டாவிற்காக 40,800 இடங்கள் ஒதுக்கப்பட்ட என்று இதர பிற்படுத்தப்பட்டோர் ஊழியர்களின் நலத்துறை அறிக்கை அறிவிக்கிறது. ஓ.பி.சி. கோட்டாவின் கீழ் 10,900 மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இந்த முடிவுக்கு வழி வகை செய்தது என்ன?

ஓ.பி.சி. மற்றும் பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கான ஒட ஒதுக்கீடு மறுக்கப்படுவது பல நாட்களாக போராட்டங்களுக்கு வழி வகுத்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம், தமிழகத்தின் தற்போதைய ஆளும் கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்த உயர் நீதிமன்றம், அனைத்திந்திய கோட்டாவில் ஓ.பி.சி. மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. அந்த ஆண்டுக்கான கல்வி ஆண்டில் இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது சாத்தியம் ஆகாது ஆனால் 2021 – 22 கல்வி ஆண்டில் இருந்து இதனை அமல்படுத்தலாம் என்று கூறியது.

இருப்பினும், NEET-2021 க்கு அறிவிப்பு ஜூலை 13 ம் தேதி வெளியிடப்பட்டது போது, AIQ க்குள் OBC இட ஒதுக்கீட்டிற்கான எந்தவொரு ஏற்பாட்டையும் குறிப்பிடவில்லை. நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை என்று இந்த ஆண்டு ஜூலை மாதம் 19ம் தேதி அன்று திமுக தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நடைபெறும் 2021-22 கல்வி ஆண்டில் மத்திய அரசு, ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டை அனைத்திந்திய கோட்டாவில் வழங்காமல் இருப்பது நீதிமன்ற அவமதிப்பாகும்” என்று கூறியது.

சமூக வலைதளங்கள் உட்பட பல இடங்களில் மாணவர்கள் போராட்டங்கள் நடத்தியதற்கு மத்தியில், சோலிசிட்டர் துஷார் மேத்தா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜூலை 26ம் தேதி அன்று மத்திய அரசு அனைத்திய கோட்டாவில் ஓ.பி.சி. மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான முடிவு அடுத்த கட்டத்தில் உள்ளது என்று பதில் தாக்கல் செய்தார். அடுத்த விசாரணை ஆகஸ்ட் 3க்கு பட்டியலிடப்பட்டுள்ளது, அதே நேரத்தில் சலோனி குமாரி உள்ளிட்ட பலரும் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

அரசு அதன் முடிவை அறிவிக்கும் நிலையில், தேசிய தேர்வு முகமையில் நீட்டுக்கான தகவல் பகுதியில், இந்த கல்வி ஆண்டியில், அனைத்திந்திய கோட்டாவில், மாநில அரசுகள் வழங்கி இருக்கும் இடங்களில் ஓ.பி.சி. மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு, உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ள சலோனி குமாரி வழக்கின் முடிவை பொறுத்தது என்று குறிப்பிட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/explained/neets-all-india-quota-and-obc-ews-reservation-327474/

வியாழன், 29 ஜூலை, 2021

அத்தஹிய்யாத்தில் விரலசைக்காமல் தொழலாமா?

அத்தஹிய்யாத்தில் விரலசைக்காமல் தொழலாமா? (இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்) பேர்ணாம்பட்டு கிளை - வேலூர் மாவட்டம் - 25-12-2020 பதிலளிப்பவர் : அ. சபீர் அலி எம்.ஐ.எஸ்.ஸி

அண்ணலாரின் ஆன்மிக அரசியல்!

அண்ணலாரின் ஆன்மிக அரசியல்! உசேன் புறா கிளை - வேலூர் மாவட்டம் - 05.03.2021 C.V, இம்ரான் (மாநிலச் செயலாளர்,TNTJ)

இறந்தவர்கள் வீட்டில் முஸ்லிம்கள் ஏன் அழுவதில்ல

இறந்தவர்கள் வீட்டில் முஸ்லிம்கள் ஏன் அழுவதில்லை? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) செட்டித்தோட்டம் - சைதை - தென்சென்னை மாவட்டம் - 26-01-2021 பதிலளிப்பவர் : இ. பாரூக்

மார்க்க கல்வியின் அவசியம்

மார்க்க கல்வியின் அவசியம் அர்ராஷிதா மகளிர் இஸ்லாமியக் கல்வியகம் பட்டமளிப்பு நிகழ்ச்சி - 10-07-2021 உரை : எம்.எஸ். சுலைமான் (மேலாண்மைக்குழுத் தலைவர், TNTJ)

Cryonics தொழில்நுட்பம் உயிர் பெற்று வர உதவுமா

Cryonics தொழில்நுட்பம் உயிர் பெற்று வர உதவுமா? ஹமீதுர்ரஹ்மான் M.I.Sc இஸ்லாமிய கல்வி களஞ்சியம் - 27-07-2021

தொழுகையில் இமாம் சூரத்துல் பாத்திஹா ஓதும் போது பின்னால் உள்ளவர்களும் ஓத வேண்டுமா?

தொழுகையில் இமாம் சூரத்துல் பாத்திஹா ஓதும் போது பின்னால் உள்ளவர்களும் ஓத வேண்டுமா? இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் A.சபீர் அலி (பேச்சாளர்,TNTJ) பேர்ணாம்பட்டு கிளை - வேலூர் மாவட்டம் - 25.12.2021

பயனுள்ள கல்வி

பயனுள்ள கல்வி அர்ராஷிதா மகளிர் இஸ்லாமியக் கல்வியகம் பட்டமளிப்பு நிகழ்ச்சி - மேலப்பாளையம் - 10-07-2021 உரை : எம்.ஷம்சுல்லுஹா ரஹ்மானி (மாநிலத் தலைவர், TNTJ)

முஸ்லிம் பெண்கள் திருமணத்தின் போது வித்தியாசமாக ஆடை அணிவதும் புர்கா அணிவதும் ஏன்?

முஸ்லிம் பெண்கள் திருமணத்தின் போது வித்தியாசமாக ஆடை அணிவதும் புர்கா அணிவதும் ஏன்? பதிலளிப்பவர்: இ.பாரூக் - மாநிலச்செயலாளர் TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 26-01-2021 தென் சென்னை மாவட்டம் - சைதை செட்டித்தோட்டம்

"ஏகத்துவம்" சுவன வாழ்விற்கு ஓர் உத்தரவாதம்!

 

"ஏகத்துவம்" சுவன வாழ்விற்கு ஓர் உத்தரவாதம்! எம்.ஷம்சுல்லுஹா ரஹ்மானி மாநிலத் தலைவர்-TNTJ ஹஜ்ஜுப் பெருநாள் உரை மேலப்பாளையம் - 21-07-2021

கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூலை 26 முதல் ஆன்லைன் விண்ணப்பம் – கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு

 25 07 2021 தமிழ்நாட்டில் உள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு இளநிலை பட்டப்படிப்பு முதலமாண்டில் மாணவர் சேர்க்கைக்கு ஜூலை 26ம் தேதி முதல் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

கல்லூரிக் கல்வி இயக்ககம் சார்பில் இன்று (ஜூலை 25) வெளியிட்டுள்ள் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: “தமிழகத்தில் உள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான (2021- 2022) விண்ணப்பங்களை http://www.tngasa.org மற்றும் http://www.tngasa.in என்ற இணையதள முகவரிகளில் பதிவு செய்யலாம்.

தமிழகத்தில் உள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்புகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு இணைய நாளை (26/07/2021) முதல் ஆகஸ்ட் 10- ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் கல்லூரி உதவி மையங்கள் (Admission Facilitation centre-AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து ‘AFC’ மையங்களிலும் போதிய அளவில் கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

விண்ணப்பக் கட்டணம்:

கல்லூரி விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பத்தாரர்கள் Debit Card/Credit Card/Net Banking மூலம் இணையதள வாயிலாக செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. பதிவுக் கட்டணம் மட்டும் ரூபாய் 2 செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர்கள் ஒரு கல்லூரிக்கு விண்ணப்பக் கட்டணமாக 48 ரூபாயும், பதிவு கட்டணமாக 2 ரூபாயும் செலுத்தி விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்.

இணையதள வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் “The Director, Directorate of Collegiate Education, Chennai- 6” என்ற பெயரில் 26/07/2021 அன்று அல்லது அதற்கு பின்னர் பெற்ற வங்கி வரைவோலை அல்லது நேரடியாகவும் செலுத்தலாம்.

மாணவர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மாணவர்கள் மேற்குறித்த இணையதளங்கள் வாயிலாக அறிந்துக் கொள்ளலாம்.” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/education-jobs/tn-govt-arts-and-science-college-online-application-starts-from-july-26th-326200/


9-12 வகுப்புக்கு 30% பாடத்திட்டம் குறைப்பு; இரண்டு கட்டங்களாக தேர்வு; சிபிஎஸ்இ அறிவிப்பு

 25 07 2021 மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சனிக்கிழமை 9 முதல் 12 வகுப்பிற்கான திருத்தப்பட்ட கால (Term-wise) வாரியான பாடத்திட்டத்தை வெளியிட்டுள்ளது. இந்த கல்வி அமர்வில் இருந்து டேர்ம் வாரியான பாடத்திட்டம் அமலாகிறது. அனைத்து பாடங்களுக்கான விரிவான பாடத்திட்டம் சிபிஎஸ்இயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கிறது.

பாடத்திட்ட விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் – http://cbseacademic.nic.in/.

கொரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு, சிபிஎஸ்இ தற்போது 9 முதல் 12 வகுப்புகளுக்கு 30% அளவிற்கு பாடங்களை குறைத்துள்ளது.

2021-2022 கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு மற்றும் 12 வகுப்பு வாரியத் தேர்வுகளுக்கான புதிய திட்டத்தை சிபிஎஸ்இ வாரியம் முன்பு அறிவித்துள்ளது. ஆண்டின் இறுதியில் ஒரு போர்டு தேர்வுக்கு பதிலாக, கல்வி அமர்வு இரண்டு டேர்ம்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு டேர்ம் முடிவிலும் சிபிஎஸ்இ வாரியம் முடிவிலும் தேர்வுகளை நடத்தவுள்ளது.

பாடநெறி உள்ளடக்கம் தவிர, இந்த பாடத்திட்டம், இரண்டு வாரிய தேர்வுக் கொள்கையின் அடிப்படையில் மாணவர்களை மதிப்பீடு செய்வதற்கான அளவுகோல்களைக் குறிப்பிடுகிறது.

முதற்கட்ட டேர்ம் தேர்வுகள் நவம்பர்-டிசம்பர் 2021 இல் நடைபெற உள்ளது. இந்த தேர்வு கொள்குறி வகை வினாக்கள் (MCQ) அடிப்படையில் நடக்கும். மேலும் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முதல் பாதியை மட்டுமே உள்ளடக்கி தேர்வில் கேள்விகள்  இருக்கும். இந்த தேர்வுகளுக்கான கால அளவு 90 நிமிடங்களாக இருக்கும். சிபிஎஸ்இ வினாத்தாள்கள் மற்றும் குறிக்கும் திட்டங்களை பள்ளிகளுக்கு அனுப்பும். பள்ளிகள் வெளி தேர்வாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் மேற்பார்வையில் தேர்வுகளை நடத்தி, முடிவுகளை வாரியத்திற்கு அனுப்பும்.

இரண்டாம் கட்ட டேர்ம் தேர்வுகள் 2022 மார்ச்-ஏப்ரல் மாதங்களில் வாரியம் நிர்ணயித்த தேர்வு மையங்களில் நடத்தப்பட உள்ளன. இந்தத் தேர்வுகள் வெவ்வேறு வடிவங்களில் கேள்விகளைக் கொண்ட இரண்டு மணிநேர தேர்வுகளாக இருக்கும், ஆனால் “சாதாரண எழுத்துத் தேர்வுகளுக்கு நிலைமை உகந்ததாக இல்லாவிட்டால்”, இரண்டாம் கால தேர்வுகளும் 90 நிமிட MCQ வினாக்களின் வடிவத்தில் இருக்கும்.

source https://tamil.indianexpress.com/education-jobs/cbse-class-9-12-syllabus-releases-rationalised-term-wise-syllabus-for-class-9-12-cbseacademic-nic-in-326074/

BEL வேலைவாய்ப்பு; ஐ.டி.ஐ முடித்திருந்தால் போதும்; விவரங்கள் இதோ…

 

பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 112 இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பிட்டர், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக் மெக்கானிக், COPA போன்ற பிரிவுகளில் பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வந்துள்ளது. இந்த அப்ரண்டிஸ் பயிற்சி ஒரு வருட காலத்திற்கு வழங்கப்படும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் இதற்கு முன் வேறு எந்த நிறுவனத்திலும் பயிற்சி பெற்றிருக்க கூடாது.

வயதுத் தகுதி: 30.09.2021 அன்று 21 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST/PWD பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது சலுகை உண்டு.

பிட்டர்

மொத்த காலியிடங்கள்: 5

கல்வித் தகுதி : ஐ.டி.ஐ-யில் பிட்டர் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த படிப்பு NCVT யின் கீழ் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.8985 (மாதத்திற்கு)

எலக்ட்ரீசியன்

மொத்த காலியிடங்கள்: 10

கல்வித் தகுதி : ஐ.டி.ஐ-யில் எலக்ட்ரீசியன் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த படிப்பு NCVT யின் கீழ் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.8985 (மாதத்திற்கு)

எலக்ட்ரானிக் மெக்கானிக்

மொத்த காலியிடங்கள்: 10

கல்வித் தகுதி : ஐ.டி.ஐ-யில் எலக்ட்ரானிக் மெக்கானிக் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த படிப்பு NCVT யின் கீழ் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.8985 (மாதத்திற்கு)

COPA

மொத்த காலியிடங்கள்: 87

கல்வித் தகுதி : ஐ.டி.ஐ-யில் COPA படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த படிப்பு NCVT யின் கீழ் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.7987 (மாதத்திற்கு)

இந்த பணியிடங்களுக்கு 26.07.2021 முதல் 10.08.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு https://apprenticeshipindia.org/candidate-registration என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்

source https://tamil.indianexpress.com/education-jobs/bel-recruitment-iti-apprentice-training-jobs-online-application-starts-327047/

தெலுங்கானாவின் தலித் பந்து திட்டம் என்றால் என்ன? அது விமர்சனங்களை எதிர்கொள்வது ஏன்?

 28 07 2021 தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் சமீபத்தில், தலித் பந்து திட்டத்திற்கு ரூ .80,000 கோடியிலிருந்து ரூ .1 லட்சம் கோடி வரை செலவிடத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். இது நாட்டின் மிகப்பெரிய நேரடி பணப் பரிமாற்றத் திட்டமாகும். இது தலித்களின் முன்னேற்றத்திற்காக மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது.

இடைத்தேர்தல் வரவிருக்கும் ஹுசுராபாத் சட்டமன்றத் தொகுதியில் முதன்முதலில் தலிதா பந்து திட்டத்தை பயிற்சி அடிப்படையில் செயல்படுத்த சந்திரசேகர் ராவ் எடுத்த முடிவை, தேர்தல் அரசியல் என எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.

கட்சியின் ஒரு நிகழ்ச்சியில் விமர்சகர்களுக்கு பதிலளித்த முதல்வர்,   நலத்திட்ட உதவிகள் மூலம் அரசியல் ரீதியாக ஆதாயம் பெறுவதில் என்ன தவறு என்று ஆச்சரியப்பட்டார். தலிதா பந்து என்பது ஒரு திட்டம் அல்லது வேலைத்திட்டம் மட்டுமல்ல. இந்த இயக்கத்தை நாடு தழுவிய அளவில் செயல்படுத்த மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்தியுள்ளது என்று அவர் கூறியுள்ளார். ஆனால், அரசாங்க உத்தரவு இன்னும் வெளியிடப்படவில்லை.

முதல்வரின் கனவுத் திட்டமான இந்த திட்டத்தின் முன்மொழியப்பட்ட திட்டத்தின் விவரங்கள், தொடர்ச்சியான வெளிப்படையற்ற கூட்டங்கள் மற்றும் அடுத்தடுத்த அறிவிப்புகள் மூலம் மட்டுமே வெளிவந்துள்ளன.

தெலுங்கானா தலிதா பந்து திட்டம் என்பது என்ன?

தலிதா பந்து என்பது தெலுங்கானா அரசாங்கத்தின் சமீபத்திய முதன்மை திட்டமாகும். இது தலித் குடும்பங்களை மேம்படுத்துவதற்கான ஒரு நலத்திட்டமாக கருதப்படுகிறது, மேலும் அவர்களிடையே தொழில்முனைவோருக்கு ஒரு குடும்பத்திற்கு ரூ .10 லட்சம் நேரடி பணப் பரிமாற்றத்தின் மூலம் உதவுகிறது. இது, செயல்படுத்தப்பட்டால், இது நாட்டின் மிகப்பெரிய பண பரிமாற்ற திட்டமாக இருக்கும்.

இந்த வழிகளில் ஒரு தலித் மேம்பாட்டு திட்டம் இந்த ஆண்டு தொடக்கத்தில் மாநில பட்ஜெட்டில் முதலில் அறிவிக்கப்பட்டது. ஜூன் 25 அன்று, முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் பிரதிநிதிகள் மற்றும் தலைவர்களுடன் முதல் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தினார். அந்த சந்திப்பின் போது, ​​மாநிலத்தின் 119 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து தலா 100 பேர் கொண்ட 11,900 தலித் குடும்பங்களுக்கு தங்களது தொழில்களைத் தொடங்க எந்த வங்கி உத்தரவாதமும் இல்லாமல் தலா ரூ. 10 லட்சம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆரம்பகட்ட செலவினங்களுக்காக 1,200 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் பெயரில் அர்த்தமற்ற வேலையை டி.ஆர்.எஸ் அரசாங்கம் செய்வதாக குற்றம் சாட்டிய பாஜகவைத் தவிர, அனைத்து கட்சிகளையும் சேர்ந்த தலித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி எஸ்சி துணைத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதிக்கு மேல் இருக்கும் என்று முதல்வர் தெளிவுபடுத்தியுள்ளார்.

தலிதா பந்து திட்டம் எங்கே செயல்படுத்தப்படுகிறது?

இத்திட்டத்தின் பலன்களை மிகவும் ஏழ்மையானவர்களுக்கு கொண்டு வருவது முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறி, ஹுசுராபாத் சட்டமன்றத் தொகுதியில் பைலட் அடிப்படையில் அதை செயல்படுத்த முதல்வர் முடிவு செய்தார். ஹுசுராபாத்தில் அமல்படுத்தப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில், இத்திட்டம் ஒவ்வொரு கட்டமாக மாநிலம் முழுவதும் பரப்பப்படும். இத்திட்டத்திற்கான வழிகாட்டுதல்களைத் தயாரிப்பதற்கு முன்பு தலித் காலனிகளைப் பார்வையிடவும், தலித் குடும்பங்களுடன் தொடர்புகொண்டு அவர்களின் பார்வைகளையும் கருத்துகளையும் அறிய அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். இந்த வழிகாட்டுதல்களின் அடிப்படையில் ஆய்வுக்குப் பிறகு, தொகுதியின் தகுதியான 20,929 தலித் குடும்பங்களில் இருந்து பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஜூலை 26 அன்று ஹுசுராபாத் சட்டமன்ற பிரிவைச் சேர்ந்த 427 தலித் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அறிமுகக் கூட்டத்தை கே.சி.ஆர் நடத்தினார். இதில் கிராமங்கள் மற்றும் நகராட்சி வார்டுகளில் தலா இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் மற்றும் 15 வள நபர்கள் அடங்குவர். திட்டத்தின் நோக்கம் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது, மேலும் அதை செயல்படுத்துவதையும் கண்காணிப்பதையும் புரிந்து கொள்ளும்படி செய்யப்பட்டது.

கே.சி.ஆரின் கூற்றுப்படி, பயிற்சி திட்டமானது, திட்டத்தின் செயல்பாட்டை கண்காணித்தல், முடிவுகளை மதிப்பீடு செய்தல் மற்றும் அரசாங்கத்தின் பங்களிப்புடன் பயனாளிகளுக்கு பாதுகாப்பு நிதியை உருவாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும். இத்திட்டத்தை தொடங்குவதற்காக ரூ .1,200 கோடி தவிர, ஹுசுராபாத்தில் பயிற்சி திட்டத்திற்காக ரூ .2,000 கோடியை முதல்வர் அறிவித்தார்.

தலிதா பந்து எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது?

தலித் மேம்பாட்டிற்கான கடந்த கால திட்டங்களை கே.சி.ஆர் ஒப்புக் கொண்டார், ஆனால் அரசாங்கங்கள் பயனாளிகளிடமிருந்து வங்கி உத்தரவாதங்களை கோரியுள்ளன, தற்போது தலிதா பந்து இலவசமாக இருப்பதை தனது அரசாங்கம் உறுதி செய்யும் என்றார்.

“கடந்த காலங்களில் அரசாங்கங்கள் சில திட்டங்களை கொண்டு வந்து வங்கி உத்தரவாதங்களைக் கேட்டன. கைகளால் உழைக்கும் தலித்துகளுக்கு வங்கி உத்தரவாதங்கள் எவ்வாறு கிடைக்கும்? எனவே, தலிதா பந்து மூலம் அரசு வழங்கும் நிதி உதவி இலவசம். இது கடன் அல்ல. அதை திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியமில்லை. இதில் எந்த இடைத்தரகர்களுக்கும் வாய்ப்பு இல்லை. தகுதியான பயனாளிகள் தங்கள் வங்கிக் கணக்குகளில் உதவி பெறுவார்கள், ”என்றார்.

தலித் தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்காக, அரசாங்கம் உரிமங்களை வழங்கும் துறைகளில் தலித்துகளுக்கு இடஒதுக்கீடு முறையைத் தொடங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஒயின் கடைகள், மருத்துவ கடைகள், உர கடைகள், அரிசி ஆலைகள் போன்றவற்றுக்கு உரிமம் வழங்குவதில் தலித்துகளுக்கு அரசு இட ஒதுக்கீடு வழங்கும்.

கோழிப்பண்ணை, பால் பண்ணை, எண்ணெய் ஆலை, அரைக்கும் ஆலை, எஃகு, சிமென்ட் மற்றும் செங்கல் வணிகம், பர்னிச்சர் கடைகள், துணி எம்போரியங்கள், மொபைல் போன் கடைகள் அல்லது உணவங்கள் மற்றும் ஹோட்டல்கள் போன்றவற்றை அமைப்பதற்காக ஒரு பயனாளி தங்கள் பண்ணைகளுக்கு ஒரு பவர் டில்லர், அறுவடை, நெல் நடவு இயந்திரங்கள், ஆட்டோ தள்ளுவண்டிகள், டிராக்டர்கள் போன்றவற்றை தேர்வு செய்யலாம்.

பண உதவியைத் தவிர, ஏதேனும் துன்பங்கள் ஏற்பட்டால் பயனாளியை ஆதரிப்பதற்காக நிரந்தரமாக தலித் பாதுகாப்பு நிதி என்று அழைக்கப்படும் ஒரு கார்பஸை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த நிதியை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர், பயனாளிகள் குழுவுடன் நிர்வகிப்பார். இந்த நிதியை நோக்கி குறைந்தபட்ச தொகை பயனாளியால் டெபாசிட் செய்யப்படும். பயனாளிக்கு ஒரு மின்னணு சில்லுடன் அடையாள அட்டை வழங்கப்படும், இது திட்டத்தின் முன்னேற்றத்தை கண்காணிக்க அரசாங்கத்திற்கு உதவும்.

தலிதா பந்து திட்டம் ஏன் விமர்சனங்களை எதிர்கொண்டது?

வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் தலித் வாக்குகளை வென்றெடுப்பதற்கான கே.சி.ஆரின் தேர்தல் அரசியல் விளையாட்டுதான் தலிதா பந்து என்று மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. தற்போதுள்ள சட்டங்களையும், தலித்துகளின் பாதுகாப்பு மற்றும் மேம்படுத்துவதற்கான திட்டங்களையும் நிலைநிறுத்துவதில் அரசாங்கம் தோல்வியுற்றுள்ளபோது, ​​இந்த திட்டத்தின் பின்னால் உள்ள தேவை மற்றும் நோக்கம் குறித்து காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

கட்சித் தலைவர் தசோஜு ஸ்ரவன் இந்தியன் எக்ஸ்பிரஸ்.காமிடம் எஸ்.சி எஸ்.டி துணைத் திட்டச் சட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்பட்ட நிதியை செலவிட டி.ஆர்.எஸ் அரசாங்கம் பலமுறை தவறிவிட்டது; கடந்த ஏழு ஆண்டுகளில் எஸ்சி நிதிக் கழகத்தில் பெறப்பட்ட ஒன்பது லட்சம் விண்ணப்பங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவை சரிசெய்யப்படவில்லை; அரசாங்கத்தின் முதன்மை திட்டத்தின் கீழ் வாக்குறுதியளிக்கப்பட்ட 9 லட்சம் ஏழை தலித்துகளுக்கு தலா 3 ஏக்கர் நிலம் வழங்கப்படவில்லை; அரசுத் துறைகளில் வேலை காலியிடங்களை நிரப்பத் தவறிவிட்டது; எஸ்சி / எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை மதிக்கவில்லை. என்று கூறினார்.

“இந்த ஆண்டுகளில் தலித்துகளின் சுய மரியாதை மற்றும் சமூக பாதுகாப்பை உறுதி செய்வதில் நீங்கள் (டிஆர்எஸ்) தோல்வியுற்றபோது, ​​தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளின் வாழ்க்கையில் ரூ .10 லட்சம் என்ன வித்தியாசத்தை ஏற்படுத்தும்?” என்று கேள்வியெழுப்பியுள்ளார் ஸ்ரவன்.

இதற்கிடையில், அகில இந்திய கிசான் காங்கிரஸ் துணைத் தலைவர் எம்.கோடந்தா ரெட்டி, இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து விவாதிக்க சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கோரியுள்ளார்.

மற்றொரு விமர்சனம் பொதுத் தொகுதியான ஹுசுராபாத்தில் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பானது. பைலட் திட்டம் குறித்து அரசாங்கம் தீவிரமாக இருந்தால், அது மிகவும் ஓரங்கட்டப்பட்ட எஸ்சி தொகுதியில் இந்த திட்டத்தை முயற்சித்திருக்கும் என்று தலைவர்கள் கூறியுள்ளனர்.

இதற்கு பதிலளிக்கும் விதமாகவே, நலத்திட்டங்களை வகுப்பதில் இருந்து அரசியல் ஆதாயம் பெறுவதில் என்ன தவறு என்று கே.சி.ஆர் கேட்டார். எவ்வாறாயினும், கரீம்நகர் மாவட்டத்தில் தொடங்கப்பட்ட டிஆர்எஸ் அரசாங்கத்தின் பல திட்டங்கள் மற்றும் திட்டங்களைப் போலவே இந்த திட்டம் முதலில் ஹுசுராபாத்தில் செயல்படுத்தப்படுகிறது என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஆறு முறை டி.ஆர்.எஸ் எம்.எல்.ஏவான ஈதலா ராஜேந்தர் குடும்பத்தினருக்கு சொந்தமான நிறுவனங்களால் விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்ட அரசு நிலங்களை அபகரித்ததாக குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு எதிரான விசாரணை ஆரம்பமான நிலையில், சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததால் ஹுசுராபாத் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. ராஜேந்தர் பின்னர் பாஜகவில் சேர்ந்தார், தற்போது அதே தொகுதியில் களமிறங்குகிறார். ராஜேந்தர் தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களை சந்திக்கத் தொடங்கியுள்ள நிலையில், டி.ஆர்.எஸ் இன்னும் தங்கள் வேட்பாளரை இறுதி செய்யவில்லை. கடந்த காலத்தில் ராஜேந்தருக்கு எதிராக வெற்றிகரமாக போராடிய காங்கிரஸ் தலைவர் பி.கௌசிக் ரெட்டி இப்போது டி.ஆர்.எஸ் கட்சியில் இணைந்துள்ளார். ராஜேந்தரை தோற்கடித்து தொகுதியை வெல்வது கே.சி.ஆருக்கும் அவரது கட்சிக்கும் மதிப்புமிக்க விஷயமாகும்.

source https://tamil.indianexpress.com/explained/telangana-dalita-bandhu-scheme-explained-327008/

ஜி.எஸ்.டி குறைப்பு எதிரொலி : விலை குறைந்த கொரோனா மருந்துகள்

 28 7 2021 ஜூன் 12ஆம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் 44வது கூட்டத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் மருந்து பொருட்கள், கருவிகள், ஆக்சிஜன் உள்ளிட்ட பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் எனவும் இது செப்டம்பர் 30ஆம் தேதி வரை என அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம்(NPPA) ஜூன் 15ஆம் தேதி அனைத்து மருந்துகள்/ஃபார்முலா மற்றும் மருத்துவ சாதனங்களின் உற்பத்தியாளர்கள் மற்றும் சந்தைப்படுத்தல் நிறுவனங்களுக்கும் ஜிஎஸ்டி வரி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ள பொருட்களின் அதிகபட்ச சில்லறை விலையை திருத்துவதற்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக மத்திய சுகாதாரம், குடும்ப நலன், ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மன்சுக் எல் மாண்டவியா செவ்வாய்க்கிழமை மக்களவையில் தெரிவித்தார்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே ராகவகனின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் இவ்வாறு கூறினார். ஜிஎஸ்டி குறைப்பைக் கருத்தில் கொண்டு மருந்துகளின் விலையைக் குறைக்க மருந்து தயாரிக்கும் நிறுவனங்களை NPPA கேட்டுள்ளதா என்பதை காங்கிரஸ் எம்பி அறிய விரும்பினார்.

source https://tamil.indianexpress.com/explained/lower-mrp-on-covid-19-drugs-devices-after-gst-reduction-326889/