திங்கள், 5 ஜூலை, 2021

முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச்

 காசியாபாத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இஸ்லாமிய பிரிவான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் நேற்று நடத்திய கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசினார். அப்போது, இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்கள் ஆபத்தில் இருக்கிறார்கள் என்கிற சதி வலையில் சிக்கிக் கொள்ள வேண்டாம். இஸ்லாமியர்கள் எந்த விதமான ஆபத்திலும் இல்லை என்றார்.

மோகன் பகவத்தின் இந்த பேச்சுக்கு அனைத்திந்திய மஜ்லிஸ் இ இதிகாதுல் முஸ்லிமின் கட்சியின் தலைவர் அசாதுதின் ஓவைசி பதிலடி கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் அவர், பசு காவலர்கள் என்ற பெயரில் அப்பாவிகள் மீது கும்பல் வன்முறையில் ஈடுபடுவது இந்துத்துவாவிற்கு எதிரானது என ஆர்எஸ்எஸ் தலைவர் பகவத் கூறுகிறார். ஆனால் இந்த வன்முறையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு பசுவுக்கும், எருமைக்கும் வித்தியாசம் தெரியவில்லை. ஆனால் ஜூனைத், அக்லக், பெலு, ரக்பர், அலிமுதீன் என்ற பெயர் வைத்திருப்பவர்களை கொல்ல வேண்டும் என்று மட்டும் தெரிகிறது. அந்த குற்றவாளிகளிக்கு இந்துத்துவா அரசு ஆதரவளிக்கிறது. அலிமுதீனின் கொலையாளிகள் மத்திய அமைச்சரின் கையால் மாலை அணிவிக்கப்படுகிறார்கள் என்று ஆவேசமாகக் கூறியுள்ளார்.


source https://news7tamil.live/asaduddin-owaisi-on-rss-chiefs-remarks.html


Related Posts: