ஞாயிறு, 6 மார்ச், 2022

தூதரகத்தின் வழிகாட்டுதலால் சிக்கல்… பசியில் தவிக்கும் இந்தியர்கள்

 05 3 2022 

கார்கிவ் அருகே மூன்று பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக செல்லும்மாறு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தி இரண்டு நாட்கள் ஆன நிலையில், உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரத்திற்கு வெளியே சுமார் 500 இந்தியர்கள் காத்திருக்கிறார்கள். கடும் குளிரிலும், பசியிலும் தவிக்கும் இந்தியர்கள் எங்கு செல்வது என்று தெரியவில்லை என கூறுகின்றனர்.

இந்திய தூதரகம் அறிவுறுத்திய இடங்களில் ஒன்றான Pisochyn பகுதியில், ஏரளாமான இந்தியர்கள் காத்திருக்கின்றனர். மற்ற இரண்டு இடங்கள் Babai, Bezlyudivka ஆகும். அப்பகுதிகளுக்கு செல்ல கார்கிவ்வில் இருந்து புறப்படும் ரயில்களில் ஏற முடியாததால், சுமார் 11 கி.மீ தூரம் நடந்தே Pisochyn பகுதியை மாணவர்கள் அடைந்துள்ளனர்.

மார்ச் 2 அன்று தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில், வாகனங்கள், பேருந்துகள் கிடைக்காத மாணவர்களும், ரயிலில் ஏற முடியாமல் தவிக்கும் மாணவர்களும் நடந்தாவதும் பயணத்தை தொடருங்கள்.

அனைத்து இந்தியர்களும் உக்ரைன் நேரப்படி 6 மணிக்குள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றாக வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.

கார்கிவ் தேசிய மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பயிலும் மத்தியப் பிரதேச மாணவர் ஹிமான்ஷு ராஜ் மௌர்யா கூறுகையில், ” தூதரகம் அறிவுறுத்திய இடங்களில் ஒன்றான Pisochyn பகுதிக்கு, இரண்டு நாள்கள் முன்பு வந்தோம். ஆனால், இங்கு உணவு மிகவும் குறைவாக உள்ளது. நாள் முழுவதும் ஒரே ஒரு துண்டு ரொட்டி அல்லது ஒரு கிண்ண சூப் மட்டுமே உணவாக அருந்துகிறோம்.

இங்கிருந்து பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. ஆனால், அதற்கு பணம் செலுத்த வேண்டும். பேருந்தில் ஏற 500 டாலர் செலுத்தும்படி கேட்டார்கள். ஆனால், என்னிடம் சுத்தமாக பணம் இல்லை” என்றார்.

மேலும் பேசிய அவர், “விடுதியில் உள்ள பதுங்கு குழியில் தங்கியிருந்தோம். மார்ச் 2 அன்று நடந்தே ரயில் நிலையத்திற்கு சென்றோம். விடுதியில் சுமார் ஆயிரம் பேர் இருந்தோம். நாங்கள் ரயில் நிலையத்தை அடைந்தபோது, உக்ரைனியர்கள் எங்களை ரயிலில் ஏற அனுமதிக்கவில்லை.

பெண்கள், குழந்தைகள் மட்டுமே ரயிலில் ஏற அனுமதி இருப்பதாக தெரிவித்தனர். ஆனால், இந்திய பெண்களையும் அவர்கள் அனுமதிக்கவில்லை. ரயில் நிலையம் அருகில் தாக்குதல் நடந்ததை தொடர்ந்து, பயத்தில் அருகிலிருக்கும் மெட்ரோ நிலையத்தில் தஞ்சம் அடைந்தோம். தூதரக அறிவிப்பை தொடர்ந்து, Pisochyn பகுதிக்கு நடந்தே வந்தோம்” என்றார்.

கேஎன்எம்யூவில் கல்வி பயிலும் முதலாம் ஆண்டு ஜார்க்கண்ட் மாணவர் சாகர் குமார் குப்தாவிடம் பேசுகையில், “இங்கு ஊரடங்கு உத்தரவு உள்ளதால் உணவு கிடைப்பது கடினமாக உள்ளது. இங்கு தாக்குதல் நடப்பதற்கான சத்தங்களை கேட்கிறோம். Pisochyn பகுதியில் சுமார் 500 மாணவர்கள்” உள்ளனர்.

மற்றொரு மாணவர் அயன் ஃபைஸ் கூறுகையில், ஒரு சிலர் பணம் செலுத்தி தனியார் பேருந்துகளில் செல்கின்றனர். குறைந்தது 900 பேர் இன்னும் Pisochyn பகுதியில் இருக்க வாய்ப்புள்ளது” என்றார்.

மாணவர்கள் உக்ரைனுக்க அழைந்த வந்த ஏஜென்சிகள் சில, தனியார் பேருந்துகளை ஏற்பாடு செய்கின்றன. தற்போதைக்கு நாங்கள் கூடாரத்தில் தங்கியிருக்கோம். ஆனால் நாங்கள் இங்கிருந்து எங்கு செல்வது? ஹங்கேரி அல்லது போலந்தின் எல்லைகளுக்கு எப்படி செல்வது என்பது தெரியவில்லை என்றனர்

மற்றொரு முதலாம் ஆண்டு மாணவர் கூறுகையில், “ரயில் நிலையத்தை அடைந்தபோது பதற்றமான சூழ்நிலையில் இருந்தோம். ஒரு சிலரே ரயிலில் ஏற முடிந்தது. பலர் காயமடைந்தனர். தொடர்ந்து Pisochyn பகுதிக்கு நடந்தே வந்தோம். எங்களிடம் உணவு இல்லை. சுமார் 500 முதல் 600 பேர் உள்ளோம். ஏஜென்சிகள் பேருந்துகள் மூலம் எல்விவ் அல்லது போலந்தின் எல்லைக்கு அழைத்து செல்வதாக கூறுகின்றனர். ஆனால், பணம் கேட்கின்றனர். மற்ற பகுதிகளை காட்டிலும், இந்த பகுதி ரஷ்ய எல்லைக்கு மிகவும் அருகில் உள்ளது என்றார்.

சுமார் 300 இந்தியர்கள் கார்கிவ் பகுதியிலும், 700 இந்தியர்கள் சுமியிலும் சிக்கித் தவிப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

source https://tamil.indianexpress.com/india/told-to-head-to-safe-point-outside-kharkiv-500-wait-there-russia-ukraine-invasion-420689/

Related Posts: