Chennai port invites application for Executive Engineer jobs: இந்தியாவின் முன்னணி துறைமுகங்களில் ஒன்றான சென்னை துறைமுகத்தில் செயற் பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 28.04.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
செயற் பொறியாளர் (EXECUTIVE ENGINEER)
காலியிடங்களின் எண்ணிக்கை : 16
கல்வித் தகுதி : மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் பிரிவில் பி.இ படித்திருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் : ரூ.50,000 – 1,60,000
வயதுத் தகுதி : 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.chennaiport.gov.in/sites/all/themes/nexus/files/pdf/CAREERS/ee22.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்து பூர்த்தி செய்து கொள்ளவும். பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : SECRETARY, CHENNAI PORT AUTHORITY, RAJAJI SALAI, CHENNAI – 600001.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.04.2022
இந்த வேலைவாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.chennaiport.gov.in/sites/all/themes/nexus/files/pdf/CAREERS/ee22.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
source https://tamil.indianexpress.com/education-jobs/chennai-port-invites-application-for-executive-engineer-jobs-427539/