புதன், 30 மார்ச், 2022

திரையரங்குகளில் திரையிட அனுமதிக்கக் கூடாது

 தி காஷ்மீர் பைல்ஸ் - இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரம் - தடை விதிக்க SDPI கட்சி  மாவட்ட ஆட்சியர் & மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு 


வெறுப்பை விதைக்கும், சமூக நல்லிணக்கத்தை சிதைக்கும் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை, புதுக்கோட்டை  மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் திரையிட அனுமதிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை  சந்தித்து, புதுக்கோட்டை  எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக இன்று 29.03.2022 மனு அளிக்கப்பட்டது.


ஆர்.எஸ்.எஸ். விசுவாசி அக்னி கோத்ரி இயக்கியுள்ள தி காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற இத்திரைப்படம் இந்தியா முழுவதும் திரையிடப்பட்டு கொண்டிருக்கிறது. இத்திரைப்படம் முழுக்க முழுக்க மத நல்லிணக்கத்திற்கு எதிராகவும், இந்து-முஸ்லீம் சமூகத்தினுடைய ஒற்றுமையை சீர்குலைக்கும் வண்ணமாக, பொய்யான கருத்துக்களை மையப்படுத்தி வெளியிட்டிருக்கிறது. எனவே, இத்திரைப்படத்தை புதுக்கோட்டை மாவட்ட திரையரங்குகளில் திரையிட தடை விதிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை சந்தித்து எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக மனு அளிக்கப்பட்டது.

 

இந்த நிகழ்வின் போது கட்சியின் மாவட்டத் தலைவர் ஸலாஹுவுதீன் அவர்கள் தலைமையில் மாவட்ட பொதுச்செயலாளர் ஜகுபர் அலி மாவட்ட செயலாளர் முஹம்மது அலி ஜின்னா , மாவட்ட பொருளாளர் ஹசனுதீன் மாவட்ட வர்த்தக அணி தலைவர் ஷேக் அலாவுதீன் மற்றும் மாவட்ட சுற்றுசூழல் அணி தலைவர் சிராஜூதீன் & ஆடிட்டர் அமானுல்லா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


வெளியீடு 

சமூக ஊடக அணி

புதுக்கோட்டை மேற்கு மாவட்டம்