தமிழக அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படித்து விட்டு பாலிடெக்னிக், ஐடிஐ படிப்பில் சேரும் மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 நிதி உதவித் தொகை கிடைக்கும் என்று சட்டசபையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
கடந்த 18ஆம் தேதி தமிழக சட்டசபையில் 2022-23ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர், உயர் கல்வி சேரும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று தெரிவித்தார்.
இது பெரிய வரவேற்பைப் பெற்றது. மாணவிகள் கல்லூரிகளில் படித்து முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 நிதி உதவி பெறுவார்கள்.
இந்நிலையில், தமிழக அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படித்து விட்டு பாலிடெக்னிக், ஐடிஐ படிப்பில் சேரும் மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 நிதி உதவித்தொகை கிடைக்கும் என்று சட்டசபையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாடு ஏழை மாநிலம் அல்ல என்பதற்கு பல்வேறு புள்ளி விவரங்களை அடுக்கி நிதியமைச்சர் விளக்கமளித்தார். வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் 52 சதவீத இளைஞர்கள் உயர்கல்வி பயில்கின்றனர்.
அரசு வழங்கிய வீடுகளில் வசிப்பவர்கள் வெறும் 14 சதவீதம் பேர்தான் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தெரிவித்தார்.
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றிதான் மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கும் முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/polytechnic-after-leaving-10th-class-in-tamil-nadu-government-schools-girls-will-get-rs-1000-430044/