30 3 2022 உக்ரைன் தலைநகரில் குவிக்கப்பட்ட ராணுவப் படைகள் குறைக்கப்படும் என ரஷ்யா அறிவித்துள்ளது.
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் ஒருமாதத்தை கடந்து சண்டை நீடித்து வரும் நிலையில், உக்ரைனில் இருந்து பல லட்சம் மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனிடையே இருநாடுகளிடையே போர் நிறுத்த அமைதி பேச்சு வார்த்தையும் நடந்து வருகிறது.
இந்நிலையில், துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில், உக்ரைன் – ரஷ்யா அதிகாரிகள் பங்கேற்ற மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்பட்டு உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இதன்படி, உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள தங்கள் நாட்டுப் படைகளை குறைக்கப்பதாக ரஷ்யா உறுதி அளித்துள்ளது. இதனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்ற போரின் தீவிரம் குறையும் சூழல் உருவாகியுள்ளது.
source https://news7tamil.live/armed-forces-will-be-reduced-russia-announcement.html