வியாழன், 24 மார்ச், 2022

மோசடி கும்பலின் ஹைடெக் தந்திரங்களை வெளியிட்ட ஆர்பிஐ

 அண்மை காலமாக டிஜிட்டல் மோசடி சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நிஜ உலகில் பணத்தை திருடினால் எளிதாக மாட்டிக்கொள்வதால், சில கும்பல் தொழில்நுட்பத்தை கையில் எடுத்துள்ளனர். எளிதாக சில ஹை டேக் ஹேக்கால், வங்கியிலிருக்கும் மொத்த பணத்தையும் சுருட்டி விடுகின்றனர். தனிப்பட்ட தகவல்களை மற்றவர்களுடன் பகிர்வது ஹேக்கர்ஸூக்கு நாமே கேட் ஒப்பன் பண்ணிக்கூடுத்தது போல் ஆகிவிடுகிறது.

இந்நிலையில், ஆன்லைன் மோசடி கும்பலின் ஹை டேக் திருட்டின் 5 வழிகளை ஆர்பிஐ வெளியிட்டுள்ளது. இதில், மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


ஆன்லைன் விற்பனை தளம் மோசடி

மோசடி சம்பவங்களில் ஈடுபடுபவர்கள், உங்கள் தயாரிப்புகளை வாங்குவது போல் ஆர்வம் காட்டுவார்கள். மக்கள் மத்தியில் நம்பிக்கை பெற, நீண்ட தொலைவில் பணியாற்றும் பாதுகாப்பு அதிகாரி போல் காட்டிக்கொள்கின்றனர். விற்பனையாளருக்கு பணம் செலுத்துவதற்குப் பதிலாக, அவர்கள் UPI செயலி மூலம் “Request Money” என்கிற விருப்பத்தைப் பயன்படுத்தி, UPI பின் நம்பரை பதிவிட்டு விற்பனையாளர் கோரிக்கையை அங்கீகரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். விற்பனையாளர் பின் நம்பரை பதிவிட்டதும், மோசடி செய்பவரின் கணக்கிற்கு பணம் எளிதாக மாற்றப்படும்.

ஸ்கிரீன் ஷேரிங் ஆப்ஸ் மோசடி

மோசடி கும்பலின் மற்றொரு ஆயுதம் ஸ்கிரீன் ஷேரிங். வாடிக்கையாளர்களிடம் ஸ்க்ரீன் ஷேரிங் செயலியை பதிவிறக்க வலியுறுத்திகிறார்கள். அப்படி செயலியை பதிவிறக்க ஷேரிங் ஓப்பன் செய்துவிட்டால், வாடிக்கையாளரின் மொபைல் / மடிக்கணினியின் மொத்த கன்ட்ரோலும் மோசடி செய்பவர் கைக்கு சென்றுவிடும். வாடிக்கையாளரின் இன்டர்நெட் பேங்கிங், யுபிஐ செயலி மூலம் உங்களுக்கே தெரியாமல் பணத்தை சுருட்டிவிடுகின்றனர்.

சேர்ச் என்ஜின் மோசடி

வாடிக்கையாளர்கள் வங்கி, காப்பீட்டு நிறுவனம், ஆதார் புதுப்பிப்பு மையம் போன்றவற்றின் தொடர்பு விவரங்கள் மற்றும் தொலைப்பேசி எண்களை, சேர்ச் என்ஜினில் தேடுவதை பழக்கமாக வைத்துள்ளனர். ஆனால், கூகுள் சேர்சில் வரும் ரிசல்டில் பெரும்பாலும் மோசடி நபர்களின் விவரங்களாக இருக்கக்கூடும். அதை உண்மை என நம்பி, மோசடி செய்பவர்களின் நம்பரை தொடர்கொண்டால் போதும், சம்பந்தப்பட்ட வங்கி அல்லது நிறுவன ஊழியர் போலவே பேசி, நமது தனிப்பட்ட தகவல்களை கேட்டு வங்கியிலிருக்கும் பணத்தை சுருட்டிவிடுவார்கள். இதை தடுத்திடவே, வங்கிகளும், நிறுவனங்களும் தங்களது அதிகாரப்பூர்வ தளத்தை பார்வையிட்டு சேவை மையம் நம்பரை தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தி வருகிறது.

QR குறியீடு ஸ்கேன் மோசடி

மோசடி செய்பவர்கள் வாடிக்கையாளர்களை பல்வேறு வழிகள் வாயிலாக தொடர்புகொண்டு, வாடிக்கையாளரின் செல்போன் வாயிலாக QR குறியீடை ஸ்கேன் செய்ய வலியுறுத்துகின்றனர். அப்படி செய்வதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க மோசடி செய்பவர்களை அங்கீகரிக்க வழிவகுக்கிறது.

ஜூஸ் ஜாக்கிங்

உங்கள் மொபைலில் உள்ள தகவல்களை திருட, சார்ஜிங் பாயிண்ட்-வும் சில நேரத்தில் பயன்படுத்தப்படலாம். மோசடி செய்வர்கள், பொது இடங்களில் சார்ஜ் செய்பவர்களின் செல்போனுக்கு மால்வேரை அனுப்பி, அந்த செல்போனின் மொத்த கன்ட்ரோலையும் எடுத்துக்கொள்கின்றனர். பின்னர், இமெயில், எஸ்எம்எஸ், செவ் செய்திருந்த பாஸ்வேர்டு போன்றவை பயன்படுத்தி, பணத்தை எடுக்க முயற்சிப்பார்கள்.

source https://tamil.indianexpress.com/business/rbi-bank-online-fraud-hi-fi-tricks-428894/