வியாழன், 31 மார்ச், 2022

10.5% உள்ஒதுக்கீடு செல்லாது

 

வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு கிடையாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில், வன்னியருக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கான சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்றி அரசாணை வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, 10.5 சதவீத உள்ஒதுக்கீடு அரசியலமைப்பிற்கு எதிரானது என கூறி தமிழ்நாடு அரசின் அரசாணையை ரத்து செய்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மற்றும் பாமக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் வன்னியருக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க அனைத்து அதிகாரமும் மாநில அரசுக்கு உள்ளது.

அதனால் இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில், உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் இன்று தீர்ப்பு அளித்திருக்கிறது.

இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை உறுதி செய்யும் வகையில், வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு கிடையாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

source https://news7tamil.live/vanniyar-reservation-is-not-valid-supreme-court-orders.html