புதன், 23 மார்ச், 2022

பாலியல் வழங்கில் கைதான திமுக உறுப்பினர் கட்சியில் இருந்து நீக்கம் : துரைமுருகன் அறிக்கை

 

Tamilnadu News Update : விருதுநகரில் பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு்ளள ஜூனைத் என்ற இளைஞர் திமுகவில் இருந்து நீக்கப்ப்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

விருதுநகர் டவுனைச் சேர்ந்த 22 வயதான இளம் பெண் ஒருவர் அங்குள்ள தனியார் ரெடிமேட் ஆடைகள தயாரிககும் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த, திமுக பிரமுகர் ஹரிகரன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர்.

இவர்களின் காதல் எல்லை மீறி சென்ற போது இருவரும் தனிமையில் சந்தித்துள்ளனர். அப்போது ஹரிகரன் தனது செல்போன் மூலம் பெண்ணுடன் தனியாக இரு்ப்பதை வீடியோவாக பதிவு செய்து தனது நண்பர்களாக, ஜூனைத் அகமது, பிரவீன் மற்று அதே பகுதியை சேர்ந்த  பள்ளி சிறுவர்களுக்கு காண்பித்துள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த ஜூனைத் அகமது அந்த பெண்ணிடம் தனியாக சந்தித்து எல்லை மீறியுள்ளார். மேலும் ஹரிகரன் காண்பித்த வீடியோவை வைத்து மிரட்டை பெண்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இவர் மட்டுமல்லாது, அவருடன் பெண்ணின் காதலன் ஹரிகரன் உட்பட 7 பேர் அந்த பெண்ணுக்கு பலமுறை பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் இவர்களின் தொல்லை அதிகரிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாத அந்த பெண் தன்க்கு நேர்ந்த கொடுமை குறித்து, பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், திமுகவை சேர்ந்த 2 பேர் 4 பள்ளி மாணவர்கள் என மொத்தம் 8 பேரை கைது செய்தனர்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது விருதுநகர் அடுத்த பொள்ளாச்சியாக மாறிவிட்டது என்றும், இந்த குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில், பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள ஜூனைத் அகமது, தற்போது திமுகவில் இருந்து நீக்கப்படுவதாக கட்சியில் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

விருதுநகர் வடக்கு மாவட்டம், விருதுநகர் நகரத்தைச் சேர்ந்த  ஜுனைத் அகமது கழகக் கட்டுப்பாட்டை மீறியும்,  கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும்  செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக  நீக்கி வைக்கப்படுகிறார்’ என்று கூறியுள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-dmk-member-suspended-for-sexual-harassment-case-429179/