புதன், 30 மார்ச், 2022

ஸ்டாலின் 4 நாள் டெல்லி பயணம்: யார், யாருடன் சந்திப்பு?

 29 3 2022 

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வருகின்ற 31ம் தேதி அன்று பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். 31ம் தேதி அன்று மதியம் 1 மணிக்கு புதுடெல்லியில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. நான்கு நாட்கள் பயணமாக சென்னையில் இருந்து நாளை டெல்லி பயணமாகிறார் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக முதல்வராக கடந்த மே மாதம் பொறுப்பேற்றுக் கொண்ட முக ஸ்டாலின் தற்போது இரண்டாவது முறையாக மோடியை சந்திக்க உள்ளார். நிலவையில் உள்ள ஜி.எஸ்.டி. தொகை, நீட் விலக்கு மசோதா, சாலைகள் போன்ற முக்கியமான விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரையும் சந்திக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. ஆனால் அவை இன்னும் முடிவாகவில்லை என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வருகின்ற ஏப்ரல் 2ம் தேதி அன்று டெல்லியில் அண்ணா – கலைஞர் அறிவாலயம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள திமுக அலுவலகத்தை திறப்பதற்காக டெல்லி செல்கிறார் முதல்வர் முக ஸ்டாலின். இந்த திறப்புவிழாவில் பங்கேற்க ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, உள்த்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மூத்த தலைவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளது திமுக என்பது குறிப்பிடத்தக்கது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamill-nadu-cm-mk-stalin-to-meet-pm-modi-on-march-31-432528/