பாஜக அரசுக்கு எதிராக, அனைத்து எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களும் ஒன்றிணைய வேண்டுமென, தமிழ்நாடு உட்பட பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்களுக்கு, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அரசு அமலாக்கத்துறை, CBI, மத்திய ஊழல் தடுப்பு பிரிவு, வருமான வரித்துறை ஆகியவற்றை தனது சுய லாபத்துக்காக பயன்படுத்தி வருவதாகவும், இவற்றை பயன்படுத்தி பாஜக அரசு, நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளுக்கு குடைச்சல் தருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, CBI, அமலாக்கத்துறை இயக்குனர்களின் பதவி காலத்தை நீட்டித்து மசோதாவை நிறைவேற்றியுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், நீதித்துறையின் சில இடங்களில் பாஜக ஆதிக்கம் செலுத்துவதால், சாதாரண மக்களுக்கு நீதி கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயக கட்டமைப்பை சீர் குலைக்கும் வகையில் பாஜக அரசு செயல்பட்டு வருவதாகவும், அவர்களுக்கு எதிராக, பாஜக அல்லாத அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள், மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் எனவும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
source https://news7tamil.live/mamata-letter-to-all-parties-in-india-to-take-action-against-bjp.html