நீங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை உங்கள் நண்பருக்கோ அல்லது OLX தளத்திலோ அல்லது எக்ஸ்சேஞ்ச் செய்யவோ முடிவு செய்திருந்தால், அதற்கு முன் சிறிய ஸ்டேப்ஸ்களை பாலோ செய்ய வேண்டும். நீங்கள் ஒட்டுமொத்த போனின் டேட்டாவை அழித்துவிட்டுதான், அதனை வழங்க வேண்டும். இந்த செய்தித் தொகுப்பில், நீங்கள் டேட்டா அழிக்கையில் பின்பற்ற வேண்டிய முக்கியமான சில தகவல்களை காணலாம்.
செயலி பேக்அப்
உங்கள் செயலிகளின் டேட்டாவை பேக்அப் செய்ய பல வழிகள் இருந்தாலும், இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கு இடையே எளிதான மாற்றும் வசதியை இதில் காணலாம்.
முதலில் கூகுள் கணக்கை Sync செய்ய வேண்டும். அதற்கு Settings/ Accounts/ your Gmail email ID/ Account Sync செல்ல வேண்டும். அதில் மேலே இருக்கும் மூன்று டாட்டை கிளிக் செய்து, ‘sync now’சேலக்ட் செய்ய வேண்டும். இந்த ஸ்டேப் மூலம், கூகுள் கீப், கேலண்டர், கான்ட்கட் உள்பட அனைத்து கூகுள் செயலிகளின் டேட்டாவும் மின்னஞ்சலில் இணைந்துவிடும்.
அடுத்ததாக, தனித்தனி செயலிகளின் டேட்டாவை பேக்அப் செய்ய வேண்டும். பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளின் சாட் உட்பட அனைத்து டேட்டாவும் தானாகவே கிளவுடில் செவ் ஆகிவிடும். ஆனால், எண்ட் டூ எண்ட் என்கிரிப்ட் செயலியான வாட்ஸ்அப்பின் தகவல்களை கிளவுடில் தானாக பேக்அப் செய்யப்படாது. ஆனால், நீங்கள் சொந்தமாக தான் செய்ய வேண்டும்.
வாட்ஸ்அப் பொறுத்தவரை, Settings/ Chats/ Chat Backup பகுதிக்கு செல்ல வேண்டும். அதில், ‘Backup to Google Drive’ ஆப்ஷனில் Never அல்லாமல் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம். இரண்டாம் ஆப்ஷனான, ‘Only when I tap Back Up’கொடுத்துவிட்டு, Backup buttoN கிளிக் செய்லாம். வாட்ஸ்அப்பில் பகிர்ந்து போட்டோ, வீடியோ, சாட் என அனைத்தும், ஜிட்ரைவ்-இல் செவ் ஆகிவிடும். நீங்கள் புதிய போனில் வாட்ஸ்அப் இன்ஸ்டால் செய்கையில், அதனை இம்போர்ட் செய்துக்கொள்ளாலம்.
மற்ற கேம்கள், செயலிகளில், டேட்டாவை பேக்அப் செய்திட ஆன்லைன் அல்லது ஆப்லைன் ஆப்ஷன் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். அப்படி இல்லையெனில், நீங்கள் புதிதாக தான் அந்த செயலியை புதிய போனில் பயன்படுத்த முடியும். இவற்றை பாலோ செய்தால் போதும், அனைத்து ஃபைல்களும் பேக்அப் ஆகிவிடும்.
பைல்ஸ் பேக்அப் செய்வது
பைல்ஸ் மாற்றிட மிகவும் எளிதான வழி என்னவென்றால், உங்கள் போனை கணினியுடன் இணைத்து, File Transfer USB mode கிளிக் செய்தால் போதும், அனைத்து தகவல்களையும் மாற்றிவிடலாம். அதில், டவுன்லோடு, படம், பாடல், போட்டோ என அனைத்தையும் மாற்றிவிடலாம். பின்னர், புதிய போனில் அதனை காப்பி செய்துக்கொள்ளலாம்.
அனைத்து டேட்டாவையும் பேக்அப் செய்துவிட்டால், உங்கள் சிம் கார்டு, மைக்ரோ எஸ்டி கார்டை நீக்கிவிட்டு, அனைத்தையும் டெலிட் செய்துக்கொள்ளலாம்.
மொபைல் ரிசெட் செய்வது
உங்கள் ஸ்மார்ட்போனை ரிசட் செய்ய வேண்டுமென்றால், எளிதாக Settings சென்று, மேலே உள்ள சேர்ச் பாரில் Reset என டைப் செய்ய வேண்டும். பின்னர் திரையில் தோன்றும் ஆப்ஷனில் reset or factory reset கிளிக் செய்தால், அந்த ஆப்ஷன் இருக்கும் பகுதிக்கு சென்றுவிடலாம்.
பின்னர், திரையில் தோன்றும் instructions-ஐ பாலோ செய்து, தகவல்களை அழிக்கலாம். அப்போது, பைல்ஸ் வைக்க வேண்டுமா அல்லது மொத்தமாக டெலிட் செய்ய வேண்டுமா என கேட்கப்படும். அதில், reset/ delete everything கொடுக்க வேண்டும்.
ஏனெனில், நீங்கள் ஸ்மார்ட்போன் மற்றொரு நபரிடம் கொடுக்கையில், அதிலிருக்கும் டேட்டாவை தவறாக பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது. எனவே, அனைத்தையும் டெலிட் செய்வது சிறந்த ஆப்ஷன் ஆகும்.
மொபைல் ரிசட் முடிவடைந்ததும், உங்கள் ஸ்மார்ட்போன் ரிஸ்டார்ட் ஆகி, மொபைல் வாங்கிய சமயத்தில் இருந்ததுபோல் மாறிவிடும்.
source https://tamil.indianexpress.com/technology/reset-an-android-smartphone-before-selling-it-428351/