தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு; மத்திய சுகாதார செயலாளர் கடிதம்
4 6 2022 தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து அந்த 2 மாவட்டங்களில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷன் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தனிந்திருந்த நிலையில், கடந்த சில நாட்களாக சென்னை, செங்கல்பட்டு ஆகிய 2 மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்டோர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு ஆகிய 2 மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துதுறை செயலாளர் ராஜேஷ் பூஷன், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், இந்த இரண்டு மாவட்டங்களில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தி உள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/covid-positive-numbers-increasing-in-2-districts-central-health-secretary-circular-to-state-health-secretary-462692/