ஞாயிறு, 5 ஜூன், 2022

மேட்ரிமோனி வெப்சைட்டில் வரன் தேடுறீங்களா? உஷார்… டி.ஜி.பி எச்சரிக்கை

 

Tamilnadu DGP Sylendra babu alerts girls on Matrimonial fraud: மேட்ரிமோனியல் இணையதளங்களில் வரன் தேடும் பெண்கள், எச்சரிக்கையாக இருக்கவும், மோசடி கும்பலால் ஏமாற்றப்படலாம் என்றும் டி.ஜி.பி சைலேந்திரபாபு எச்சரிக்கையை செய்தியை விடுத்துள்ளார்.

சமீபகாலமாக மோசடி செய்பவர்கள் உங்கள் மொபைல், மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பி, உங்களுக்கு பரிசு வந்திருக்கிறது. குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் கிடைக்கும் என ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி வருகிறார். அந்தவகையில், இதேபோன்ற கும்பல்கள், தற்போது மேட்ரிமோனியல் தளங்களை இதுபோன்ற மோசடிக்கு பயன்படுத்துகிறார்கள்.

இந்தநிலையில், இது பெண்களும், பெண் வீட்டாரும் எச்சரிக்கையாக இருக்கும் வகையில் தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், திருமணத்திற்காக பெண்கள் தங்கள் பெயரை மேட்ரிமோனியல் இணையதளங்களில் பதிவு செய்து வைத்திருப்பீர்கள். அந்த பெண்களை தொடர்பு கொள்ளும் மோசடி பேர்வழிகள், உங்களுக்கு பொருத்தமான மாப்பிள்ளை இருக்கிறது, பெண்கள் என்ன வேலை செய்யும் மாப்பிள்ளை வேண்டும் என பதிவு செய்திருக்கிறார்களோ, அதை கூறி, அதாவது டாக்டர் மாப்பிள்ளை வேண்டும் என்றால், டாக்டர் மாப்பிள்ளை இருக்கிறார், சாப்ட்வேர் இன்ஜினியர் வேண்டும் என்றால் அமெரிக்காவில் பணிபுரியும் சாப்ட்வேர் இன்ஜினியர் இருக்கிறார் என்று கூறி, அந்த நபரை உங்களிடம் அறிமுகபடுத்தி, உங்களிடம் பேச வைக்கிறார்கள். அந்த நபர் உங்களுக்கு ஒரு பரிசு அனுப்புவார். அந்த பரிசு மும்பை கஸ்டம்ஸ் அலுவலத்திற்கு வந்துள்ளதாக உங்களுக்கு போன் வரும். அதற்கு நீங்கள் ரூ.35,000 கட்டினால், அந்த காஸ்ட்லி பரிசை உங்களுக்கு அனுப்பி வைக்கிறோம் என்று சொல்வார்கள். நீங்கள் ரூ.35000ஐ கட்டியவுடன், உங்களுக்கான வருங்கால கணவர் அனுப்பிய பொருள் பல லட்சம் மதிப்புடையது. அதனால் நீங்கள் 10% கட்டணம் கட்ட வேண்டும், என லட்ச கணக்கில் கட்டச் சொல்வார்கள்.

இப்படி உங்களை பலமுறை ஏமாற்றிய பின்னர், அந்த வருங்கால நபர், நான் நேரடியாக வருகிறேன் எனக் கூறுவார்கள். பின்னர், மும்பை ஏர்போர்ட்டில் இருக்கிறேன், என்னிடம் விசா இல்லை, இமிக்ரேசன் பிரச்னை, எனவே நீங்கள் இந்த அக்கவுண்டில் இவ்வளவு பணத்தை செலுத்தினால், வெளியில் வரலாம் என்றெல்லாம் கூறி, பல லட்சங்களை நீங்கள் கட்டிய பிறகு, தான் உங்களுக்கு தெரிய வரும் இது மோசடி கும்பல் என்று. படித்த நிறைய பெண்களே இதில் ஏமாந்துள்ளனர். மேட்ரிமோனியல் இணையதளங்களில் பேசுவதாக கூறினால், எச்சரிக்கையாக இருங்கள். பணம் கேட்கிறார்கள், என்றாலே, அவர்கள் மோசடி செய்பவர்கள் தான். நான் தான் வெளிநாட்டு மாப்பிள்ளை கிப்ட் அனுப்புகிறேன் என்று சொன்னால் ஏமாந்து விடாதீர்கள். இவ்வாறு டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை செய்தியை பகிர்ந்துள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-dgp-sylendra-babu-alerts-girls-on-matrimonial-fraud-463010/