2 6 2022 Stalin urged Governor RN Ravi to grant assent to 21 bills: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று நேரில் சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் 21 சட்ட முன்வடிவுகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசினார்.
அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள 21 சட்ட முன்வடிவுகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் வலியுறுத்தினார்.
தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைகழக சட்ட முன்வடிவு 2022-க்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், அரசியல் சாசனத்தின் உணர்வையும் தமிழக மக்களின் விருப்பத்தையும் நிலைநிறுத்துமாறு ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளார். நீட் விலக்கு கோரும் சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதற்காக கவர்னருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து இருவரும் கலந்தாலோசித்தாகவும் கூறப்படுகிறது. மேலும் 6 பேர் விடுதலை குறித்து முதல்வர் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/stalin-urged-governor-rn-ravi-to-grant-assent-to-21-bills-462323/