வெள்ளி, 3 ஜூன், 2022

அச்சுறுத்தும் குரங்கு அம்மை… இவை தான் முக்கிய அறிகுறிகள்!

 

source https://tamil.indianexpress.com/explained/monkeypox-key-symptoms-and-treatments-462008/

குரங்கு அம்மையை கட்டுப்படுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதுவரை, 300 பாதிப்புகள், வைரஸ் பரவாத நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளன. இந்த நோய்க்கான அறிகுறிகளும், சிகிச்சை முறைகளும் என்ன என்பதை இங்கே காணலாம்.

குரங்கு அம்மை அறிகுறிகள்

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்களின் (CDC) கூற்றுப்படி, குரங்கு அம்மை காய்ச்சல், தலைவலி, தசைவலி, முதுகுவலி, சோர்வுடன் ஆரம்பிக்கிறது. குறிப்பாக நிணநீர் கணுக்களை வீங்கச் செய்கிறது (லிம்பேடனோபதி), இது பெரியம்மை பாதிப்பில் ஏற்படாது.

அறிகுறிகள் தெரிய எவ்வளவு காலம் எடுக்கும்?

குரங்கு அம்மை நோயின் அறிகுறிகள் குறைந்தது இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை இருக்கும். பொதுவாக நோய் பாதிப்புக்குளாகி 7 முதல் 14 நாள்களுக்குள் அறிகுறிகள் தென்படும். ஆனால் 5-21 நாட்கள் வரையும் இருக்கலாம்.

நோய் பரவல் எப்படியிருக்கும்?

நோய் நான்கு வெவ்வேறு கட்டங்களில் பரவுகிறது. முதல் கட்டமான 0 முதல் 5 நாள்களில் காய்ச்சல், தலைவலி மற்றும் நிணநீர் முனை வீக்கம் பாதிப்பு ஏற்படும்.

நிணநீர்க்குழாயின் வீக்கம் குரங்கு அம்மை நோயின் முக்கிய அறிகுறியாகும். இதனை தட்டம்மை, சிக்கன் பாக்ஸ் போன்ற நோய் பாதிப்பின் போது காணமுடியாது. நோயால் பாதிக்கப்படுபவர்கள் பலவீனமாக உணர்வதை காணமுடிகிறது.

காய்ச்சல் பாதிப்பை தொடர்ந்து இரண்டு நாட்களில் தோல் வெடிப்பு ஏற்படும். 95 சதவீத பாதிப்புகள், இந்த சோறி முகத்தில் தான் ஏற்படுகிறது. 75 சதவீத பாதிப்புகளில், உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் காணமுடிகிறது. இது, 70 சதவீத பாதிப்புகளில் வாய்வழி சளி சவ் பகுதியை பாதிக்கிறது. இதன் காரணமாக, கருவிழியை சுற்றியுள்ள பகுதிகள், கருவிழி, பிறப்புறுப்பு பகுதியும் பாதிக்கப்படலாம்.

தோல் வெடிப்பு நிலை 2 முதல் 4 வாரங்கள் வரை நீடிக்கும். அந்த காலக்கட்டத்தில் புண்களில் வலி அதிகமாக தென்ப்படும். முதலில் திரவம் வெளிவந்து, பின்னர் சீழ் ஏற்பட்டு, ஸ்கேப்கள் உருவாக வாய்ப்பிருக்கிறது.

கண் வலி, பார்வை திறன் குறைதல் , மூச்சுத் திணறல், சிறுநீரின் அளவு குறைதல் போன்ற அறிகுறிகள் உள்ள நோயாளிகளை தனிமைப்படுத்திக் கவனிக்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

குரங்கு அம்மை – சிகிச்சை முறைகள் என்ன?

குரங்கு அம்மை பாதிப்புக்கு முறையான சிகிச்சை முறை இதுவரை இல்லை. அறிகுறிகளைப் பொறுத்து சிகிச்சையளிக்க உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது. பாதிப்புக்குள்ளான நபர்களை, உடனடியாக தனிமைப்படுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி, தோல் வெடிப்புகளை கிருமி நாசினிகளால் சுத்தம் செய்ய வேண்டும். வாய் புண்களை வெதுவெதுப்பான உப்பு நீர் வாய் கொப்பளிப்பதன் மூலம் நிர்வகிக்க வேண்டும்

குரங்கு அம்மை பாதிப்பு குறித்த புரிதல் நன்றாக இருக்கிறது. அதனை, கிடைக்கக்கூடிய மருத்துவ சிகிச்சைகள் மூலம் திறமையாக நிர்வகிக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

நானாவதி மருத்துவமனையின் உள் மருத்துவம் மற்றும் தொற்று நோய்களுக்கான மூத்த ஆலோசகர் டாக்டர் ஹேம்லதா அரோரா கூறுகையில், குரங்கு அம்மை பாதிப்புக்குள்ளான நபர்கள் பீதியடைய வேண்டாம். முக்கியமாக, குரங்கு அம்மையை மற்றொரு பொதுவான வைரஸ் தொற்றுடன் குழப்பிக்கொள்ள வேண்டாம் என தெரிவித்தார்.