6 12 2022
வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தினால், சென்னையில் புதன்கிழமை முதல் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தெற்கு அந்தமான் கடற்பகுதியில் திங்கள்கிழமை உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் நாட்களில் மாண்டஸ் புயலாக மாற வாய்ப்புள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) டிசம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், பொதுமக்கள் பாதிப்படையாமல் காப்பாற்ற தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) ஒரு குழுவை செவ்வாய்க்கிழமை சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளது.
புயல் எச்சரிக்கையின் காரணமாக தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 10 குழுக்கள் நாகப்பட்டினம், சென்னை, திருவள்ளூர், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு வந்துள்ளது.
சென்னையில் வெள்ளம் ஏற்பட்டு பாதிப்பிற்கு உள்ளாகும் இடங்களை சென்னை மாநகராட்சி சரிசெய்து தயார் நிலையில் வைத்துள்ளனர். இந்த அவசர கால நேரத்தில் மக்களுக்கு தேவைப்படும் சில முக்கியமான ஹெல்ப்லைன் எண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
சென்னை மான்சூன் ஹாட்லைன்: 1913
வெள்ள கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள்: 044-25619206, 044-25619207, மற்றும் 044-25619208
மழை மற்றும் வெள்ளம் தொடர்பான உதவிக்கு வாட்ஸ்அப் ஹெல்ப்லைன்: 9445477205, 9445025818
கார்ப்பரேஷனின் ஹெல்ப்லைன்கள்: ரிப்பன் பில்டிங் – +914425619555, +914425303600
கட்டுப்பாட்டு அறை எண் – +914425303511
source https://tamil.indianexpress.com/tamilnadu/national-disaster-response-force-arrives-at-tamil-nadu-after-hearing-storm-alert-553869/