27 12 2022
இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் ஜனவரியில் 11 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இதில் அனைத்து ஞாயிறுகளும் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகளும் அடங்கும்.
மேலும் உள்ளூர் திருவிழா அல்லது அந்தந்த மாநிலங்களின் குறிப்பிட்ட அறிவிப்பைப் பொறுத்து விடுமுறைகள் பிராந்தியத்திற்கு பிராந்தியம் மாறுபடும்.
அந்த வகையில், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஒவ்வொரு மாதமும் விடுமுறை நாட்களின் பட்டியலைத் தயாரிக்கிறது. அதன்படி, வரும் (2023) ஜனவரி மாதம் 11 நாள்கள் வங்கிகள் இயங்காது.
இந்த நாள்களில், தனியார், பொது, வெளிநாட்டு, கூட்டுறவு மற்றும் பிராந்திய வங்கிகளின் அனைத்து கிளைகளும் மூடப்பட்டிருக்கும். பிராந்திய மற்றும் தேசிய விடுமுறை நாட்களில் வங்கிகள் நான்கு நாட்களுக்கு மூடப்படும். புத்தாண்டு கொண்டாட்டம், குடியரசு தினம் உள்ளிட்டவை இதில் அடங்கும்
ஜனவரி 2023க்கான வங்கி விடுமுறைகளின் முழுமையான பட்டியல் இதோ.
ஜனவரி 1: ஆங்கில புத்தாண்டு, முதல் ஞாயிறு
ஜனவரி 8: இரண்டாவது ஞாயிறு
ஜனவரி 14: இரண்டாவது சனிக்கிழமை
ஜனவரி 15: மூன்றாவது ஞாயிறு
ஜனவரி 22: நான்காவது ஞாயிறு
ஜனவரி 28: நான்காவது சனிக்கிழமை
ஜனவரி 29: ஐந்தாவது ஞாயிறு
தேசிய மற்றும் பிராந்திய விடுமுறைகள்
ஜனவரி 2: புத்தாண்டு கொண்டாட்டம் – ஐஸ்வால்
ஜனவரி 3: இமோயினு இரட்பா – இம்பால்
ஜனவரி 4: கான்-ங்காய் – இம்பால்
ஜனவரி 26: குடியரசு தினம் – அகமதாபாத், ஐஸ்வால், பேலாப்பூர், பெங்களூரு, காங்டாக், குவஹாத்தி, ஹைதராபாத், இம்பால், ஜெய்ப்பூர், கான்பூர், லக்னோ, மும்பை, நாக்பூர், புது தில்லி, பனாஜி, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா மற்றும் திருவனந்தபுரம்.
பிப்ரவரி 2023 இல், பிராந்திய மற்றும் தேசிய விடுமுறைகள் காரணமாக வங்கிகள் நான்கு நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். அவை லுய்-நகை-நி, மஹாசிவராத்திரி (மஹா வத்-14)/சிவராத்திரி, மாநில நாள் மற்றும் லோசர் ஆகும்.
source https://tamil.indianexpress.com/business/11-bank-holidays-in-january-2023/