திங்கள், 26 டிசம்பர், 2022

திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கைகளில் முதன்மையானது சமூகநீதி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 

26 12 2022

திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கைகளில் முதன்மையானது சமூகநீதிதான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவரும், ஊடகத்துறை தலைவருமான ஆ. கோபண்ணா எழுதிய ‘மாமனிதர் நேரு’ – அரிய புகைப்பட வரலாறு’ என்ற நூலின் வெளியீட்டு விழா, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில், தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் நூலை வெளியிட்டு வாழ்த்துரை வழங்குகிறார்.

அப்போது மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எனக்கு மட்டுமல்ல கலைஞரின் அன்புக்கும் பாராட்டுக்கும் உரியவராக இருக்கும் கோபண்ணா வெளியிட்டுள்ள புத்தகம் நூல் என்பதை விட வரலாற்று கருவூலம் என்று தான் சொல்ல வேண்டும். இது காங்கிரஸ் கட்சி வரலாறு , நேரு வரலாறு மட்டுமல்ல இந்திய வரலாறு, எதிர்கால இந்தியா எப்படி செயல்பட வேண்டும் என்று சொல்ல கூடிய வழிகாட்டியாகவும் உள்ளது என்றார்.

மேலும், கூட்டணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் என்னோடும் திமுவினரோடும் கொள்கையை கடந்த நட்பு கொண்டவர். தேசிய இயக்கத்தில் இருந்தாலும் திராவிட இயக்கத்தின் சமூக நீதி கொள்கை மீது ஆர்வம் கொண்டவர்.இதை படிப்பதை விட பார்த்தாலே போதும் என்னும் ஆர்வத்தை இந்த புத்தக தலைப்பு தூண்டி உள்ளது. 2006 முதல் 2016 வரை நேரு பற்றிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன என கூறினார்.

முன்னாள் பிரதமர் நேரு இந்திய ஒன்றியத்திற்கு ஆற்றியவைகளுக்கு நன்றியாக அனைவரும் இதை படிக்க வேண்டும். இந்தியா தன் அடையாளமாக கொள்ள வேண்டியது நேருவைதான். நேரு பளிங்கு போல தூய்மையானவர் என்று காந்தியடிகள் சொன்னதாக இந்த புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.பொதுவுடைமை கட்சியை சார்ந்தவர்களும், திராவிட கட்சியை சார்ந்த நானும் இதில் கலந்து கொள்ள காரணம் இந்தியா முழுமைக்கும் ஆன பிரதமராக இருந்தார் என கூறினார்.

அத்துடன், ஒரே மொழி, நாடு என்பதை எதிர்த்தவர். வகுப்புவாதமும் , தேசியவாதமும் சேர முடியாது என்று சொன்னவர். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முதல் திருத்தமாக சமூகத்தில் பின் தங்கியவர்களுக்கு செய்வதை அரசு தடுக்காது என்று தமிழகத்தின் மீது இந்தி திணிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தி திணிக்கப்பட கூடாது என்று சொன்னார் நேரு. நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடையாளமாக இருந்தவர் நேரு என பேசினார்.

தமிழ்நாட்டிற்கு பெரியார், அண்ணா, கலைஞர் எப்படி தேவைப்படுகிறார்களோ அது போல் இந்தியாவிற்கு நேரு தேவைப்படுகிறார். 11 முறை மட்டுமே தமிழகத்திற்கு வந்துள்ள பிரதமர் நேரு பல பொதுத்துறை நிறுவனங்களை தமிழகத்திற்கு வழங்கினார். 2015 இல் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் தற்போது வரை நடைபெறவில்லை என கூறினார்.

மேலும், இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டு இருக்கும் ராகுல் காந்தி பேச்சு இந்தியாவில் பூகம்பத்தை ஏற்படுத்தி வருகிறது. ராகுல் காந்தி பேசுவது பல சமயங்களில் நேரு பேசுவது போல் இருக்கிறது. அவர் பேரன் பேசாமல் இருந்தால் தான் ஆச்சரியம். கோட்சேவின் வாரிசுகளுக்கு மகாத்மா காந்தி மற்றும் நேருவின் வாரிசுகள் பேசுவது கசக்கத்தான் செய்யும் எனவும் அவர் பேசினார்.

source https://news7tamil.live/social-justice-was-foremost-among-the-basic-tenets-of-the-dravidian-movement-m-k-stalin.html