28 12 2022
இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் புதன்கிழமை (டிச.28) அமர்வில் சரிவில் முடிவடைந்தன. சென்செக்ஸ் 61,000க்கு கீழேயும், நிஃப்டி 18,150க்கு கீழேயும் முடிந்தது.
மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸில் டைட்டன் (2.74%), மஹிந்திரா & மஹிந்திரா (1.81%), பவர் கிரிட் (1.39%), மாருதி (1.27%) மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி (0.72%) ஆகியவை உயர்வில் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
மறுபுறம், பார்தி ஏர்டெல் 1.44% சரிவு, ஆக்சிஸ் வங்கி (1.10% ), பஜாஜ் ஃபின்சர்வ் (1.08%), டாடா ஸ்டீல் (0.99%) மற்றும் அல்ட்ராடெக் சிமென்ட் (0.87%) ஆகியவை பின்தங்கிய முன்னணி நிறுவன பங்குகள் ஆகும்.
இந்திய பங்குச் சந்தை
மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் 17.15 புள்ளிகள் அல்லது 0.03% சரிந்து 60,910.28 ஆகவும், தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 9.80 புள்ளிகள் அல்லது 0.05% குறைந்து 18,122.50 ஆகவும் இருந்தது. துறைசார் குறியீடுகளில், நிஃப்டி ஐடி 0.18% சரிந்தது மற்றும் பேங்க் நிஃப்டி 0.07% சரிந்தது.
ஆசிய சந்தைகள்
சீனாவின் ஷாங்காய் SE கூட்டுக் குறியீடு புதன்கிழமை 8.17 புள்ளிகள் அல்லது 0.26% குறைந்து 3,087.40 ஆக எதிர்மறையாக முடிந்தது.
ஹாங்காங்கின் ஹாங் செங் 305.85 புள்ளிகள் அல்லது 1.56% அதிகரித்து 19,898.91 ஆக இருந்தது. ஜப்பானின் நிக்கேய் 225 107.37 புள்ளிகள் அல்லது 0.41% சரிந்து 26,340.50 ஆக இருந்தது.
தென் கொரியாவின் KOSPI 54.57 புள்ளிகள் அல்லது 2.34% குறைந்து 2,278.22 ஆக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.02% அதிகரித்து 82.8425 ஆக இருந்தது.
கச்சா எண்ணெய்
ஜனவரி டெலிவரிக்கான WTI கச்சா எண்ணெய் 0.7% குறைந்து $78.97 ஆகவும், பிப்ரவரி டெலிவரிக்கான ப்ரெண்ட் க்ரூட் ஃப்யூச்சர்ஸ் 0.72% குறைந்து $83.72 இல் பிற்பகல் 3:22 மணிக்கு (IST) வர்த்தகம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், அமெரிக்க சந்தைகள் ஒரே இரவில் கலவையுடன் முடிவடைந்தன. மேலும், சர்வதேச அளவில் தங்கம், வெள்ளி கமாடிட்டியும் குறைந்தே காணப்பட்டது.
source https://tamil.indianexpress.com/business/28-dec-2022-stocks-fall-rupee-rises-566661/