செவ்வாய், 20 டிசம்பர், 2022

QR code scam: க்யூ ஆர் கோடு மோசடிகள்.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?

 17 12 2022

நாம் டிஜிட்டல் யுகத்தில் வாழ்ந்து வருகிறோம். நாளுக்கு நாள் புது புது தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. ஸ்மார்ட்போன் ஒன்று இருந்தால் போதும் அனைத்தும் நம் கைகளுக்கே வந்துவிடும். உணவு, உணவு பொருட்கள், ஆடை என அனைத்தும் ஆன்லைனில் பர்சேஸ் செய்து UPI மூலம் அதாவது Google pay,Phone pay மூலம் பணம் செலுத்தலாம். ஆன்லைன் பர்சேஸ், பேமண்ட் செய்யும் முறைகள் மிகவும் எளிதாக இருப்பதாலும், நேரம் குறைவாக செலவிடப்படுவதாலும் பலரும் இதை பயன்படுத்துகின்றனர்.

நாம் நேரடியாக கடைகளில் சென்று பொருட்கள் வாங்கினாலும், Google pay அல்லது பிற ஆப்களில் ஸ்கேன் செய்து பணம் செலுத்தலாம். இதுவே சில நேரங்களில் மோசடிகளுக்கு வித்திடுகிறது. பணம் தருகிறோம், பரிசு பொருட்கள் உங்களுக்கு உள்ளது எனக் கூறி இந்த க்யூ ஆர் கோட்டை ஸ்கேன் செய்யுங்கள் என வாட்ஸ்அப், எஸ்.எம்.எஸ் மூலமாக அனுப்பபட்டு மோசடிகள் நடைபெறுகிறது. சந்தேகத்திற்குரிய லிங்க், க்யூ ஆர் கோடு அனுப்பபட்டால், அதை கண்டிப்பாக பயன்படுத்த கூடாது. ப்ளாக் செய்து, டெலிட் செய்வது நல்லது.

க்யூ ஆர் கோடு மோசடிகள் என்றால் என்?

க்யூ ஆர் கோடு பற்றி தெரிந்து கொள்வது அவசியம். யாராவது க்யூ ஆர் கோடு மூலம் உங்களுக்கு பணம் திருப்பி அனுப்புகிறோம் என்று கூறினால் நம்பாதீர்கள். க்யூ ஆர் கோடு மூலம் குறியீட்டை ஸ்கேன் செய்து மற்றவர்களுக்கு அனுப்ப மட்டுமே முடியும். க்யூ ஆர் கோடு மூலம் பணம் திரும்ப பெற முடியாது. எனவே, க்யூ ஆர் கோடு, OTP போன்ற தகவல்களை யாரேனும் கேட்டால் கூறாமல் இருப்பது நல்லது.

பாதுகாப்பாக இருப்படி எப்படி?

  1. உங்கள் UPI ஐடி, வங்கிக் கணக்கு விவரங்களை மற்றவர்களுடன் பகிர வேண்டாம்.
    2.OLX அல்லது அது போன்ற பிற தளங்களில் நேரடியாக பொருட்களைப் பெற்று பணத்தை நேரடியாக செலுத்துவது நல்லது.
  2. கடைகளில் நேரடியாக பணம் செலுத்தும் போதும், க்யூ ஆர் கோடு மூலம் செலுத்தும் போதும் பெறுபவர்களின் விவரங்களை சரிபார்த்து அனுப்பவும்.
  3. QR கோட்டின் மீது ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பது போன்று இருந்தால் ஸ்கேன் செய்வதைத் தவிர்க்கவும்.
  4. எப்போதும் ஓ.டி.பி-யை (OTP) பிறரிடம் பகிரவே கூடாது.
  5. நம்பகமான ஆன்லைன் தளத்தில் ஷாப்பிங் செய்வது நல்லது.
  6. தேவை இல்லை என்றால் உங்கள் மொபைல் எண்ணை பகிரவதைக் கூட தவிர்க்கலாம்.


source https://tamil.indianexpress.com/technology/beware-of-qr-code-scam-or-lose-money-how-to-identify-and-be-safe-from-such-scams-560237/