செவ்வாய், 27 டிசம்பர், 2022

Aadhaar Card Renewal: ஆதார் எடுத்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டதா? உடனே அப்டேட் செய்யுங்க.. எப்படி செய்வது?

 

ஆதார் அட்டை மிக முக்கிய ஆவணமாகி உள்ளது. மொபைல் சிம் வாங்குவது தொடங்கி வங்கி பரிவர்த்தனை, விமான பயணம் என அனைத்திற்கும் ஆதார் அட்டை பயன்படுத்தப்படுகிறது. இந்திய குடிமக்களுக்கு மத்திய அரசு மூலம் ஆதார் கார்டு வழங்கப்படுகிறது. முன்பு ரேஷன் கார்டு இருந்தது போல் இப்போது ஆதார் பயன்படுத்தப்படுகிறது. ஆதார் தனி நபர் அடையாள அட்டையாகும். வங்கி கணக்கு, மொபைல் சிம், பான் கார்டு, ரேஷன் கார்டு என அனைத்திலும் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் கட்டாயம் இணைக்க வேண்டும் என அரசு தெரிவித்து, அதை செயல்படுத்தி வருகிறது.

அந்தவகையில், ஆதார் அட்டை வாங்கி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது என்றால் அதை அப்டேட் அதாவது புதுப்பிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் 30-ம் தேதி வரை கிட்டத்தட்ட 135.1071 கோடி ஆதார் வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஆதார் வாங்கி 10 ஆண்டுகள் மேல் ஆன பயனர்கள் தங்கள் ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டும் என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய அடையாளச் சான்று, முகவரி சான்று ஆகியவற்றை கொடுத்து அப்டேட் செய்ய வேண்டும். ஆன்லைன் மூலமாகவோ அல்லது அருகிலுள்ள ஆதார் மையங்களுக்கு சென்றோ தங்கள் ஆதார் அட்டையை அப்டேட் செய்துகொள்ளலாம்.

ஆதார் அட்டை அப்டேட் செய்வது எப்படி?

  1. மத்திய அரசின் அதிகாரப்பூர்வ தளமான uidai.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
  2. இப்போது ‘எனது ஆதார்’ ‘எனது ஆதார்’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து ‘Update Demographics Data and Check status'(அப்டேட் டெமாக்ரபிக்ஸ் டேட்டா அண்ட் செக் ஸ்டேட்டஸ்) என்பதை செலக்ட் செய்யவும்.
  3. இப்போது https://myaadhaar.uidai.gov.in/ என்கிற பக்கத்திற்கு தானாகவே செல்லும். இதில் நீங்கள் லாக் இன் செய்யவேண்டும்.
  4. பின்னர் ஆதார் எண், கேப்ட்சா குறியீடு (captcha code) கொடுத்து Send OTP என்ற ஆப்ஷனை கொடுக்க வேண்டும். உங்கள் போனிற்கு வந்த ஓ.டி.பி-யை பதிவிடவும்.
  5. அடுத்ததாக ‘அப்டேட் ஆதார் ஆன்லைன்’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  6. அந்த பக்கத்தில் உள்ள தகவல்கள், விவரங்களைப் படித்து ‘ப்ரொசீட் டூ ஆதார் அப்டேட் ‘(Proceed to update Aadhaar) என்பதை கொடுக்கவும்.
  7. இதில் நீங்கள் அப்டேட் செய்ய விரும்பும் டேட்டாவை செலக்ட் செய்து, உங்கள் முகவரியை பதிவிட்டு, அதற்கான ஆதாரத்தை பதிவேற்ற வேண்டும்.
  8. இப்போது நீங்கள் கொடுத்த விவரங்களை சரிபார்த்து கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும்.
  9. கடைசியாக, ஆதார் அப்டேட் கட்டணமாக ரூ.50 ஆன்லைன் மூலமாகவே செலுத்த வேண்டும்.

source https://tamil.indianexpress.com/technology/you-may-have-to-update-your-aadhaar-details-every-10-years-read-more-565165/