புதன், 21 டிசம்பர், 2022

மக்களை அச்சமூட்டிய டிஜிட்டல் ரூபாய் அறிவிப்பு!

மக்களை அச்சமூட்டிய டிஜிட்டல் ரூபாய் அறிவிப்பு! நடுநிலைச் சமுதாயம் முதல் பக்கச் செய்தி - https://youtu.be/qp5NJDYlcrw ரிசர்வ் வங்கியின் கிளை அமைப்பான Central Bank Digital Currency-CBDC அமைப்பு கடந்த நவம்பர் 1 ஆம் தேதி ஹோல்சேல் டிஜிட்டல் ரூபாயைச் சோதனை செய்தது. டிசம்பர் 1 ஆம் தேதி ரீடைல் டிஜிட்டல் ரூபாயின் சோதனை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் மக்கள் மத்தியில் இதன் மீதான அச்சம் அதிகரித்துள்ளது. அச்சத்திற்கான காரணம்: மும்பை, டெல்லி, பெங்களூர் மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் முதலில் சோதனை நடைபெறுகிறது. ரூபாய் நோட்டுகளும் நாணயங்களுக்கும் அச்சடிக்க ஆகின்ற செலவுகளைச் மிச்சப்படுத்த இந்த டிஜிட்டல் ரூபாய் கொண்டு வரப்படுகிறது. 2021-2022 ஆம் ஆண்டிற்கான ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க 4,984 கோடி செலவிடப்பட்டுள்ளது. டிஜிட்டல் கரன்சி என்பது இந்திய ரூபாயின் டிஜிட்டல் வடிவம். இந்த டிஜிட்டல் ரூபாயை வாங்கப் பார்த் ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, யெஸ் வங்கி, ஐடிஎஃப்சி பர்ஸ்ட் ஆகிய வங்கிகளின் செயலி அல்லது இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருடன் சோதனை செய்யப்படுவதால் இதை எப்படி வாங்க வேண்டும் என்பது குறித்த தகவல்களை ரிசர்வ் வங்கி தெளிவாக வெளி யிடவில்லை என்பதே அச்சத்திற்கான காரணமாக உள்ளது. கிரிப்டோ & டிஜிட்டல் ரூபாய்: கிரிப்டோ கரன்சி என்ற பெயரில் போன்ற பல டிஜிட்டல் கரன்சிகளின் புழக்கம் அதிகரித்த போது எந்த நாடுகளும் அதை அங்கீகரிக்கவில்லை. அரசின் கட்டுப்பாட்டில் கரன்சிகளின் மதிப்புகள் இல்லாததே அதற்கு காரணம். உலகில் சில நாடுகள் கிரிப்டோ கரன்சிகள் போல தாங்களே அதிகாரப்பூர்வ கரேன்சியையும் வெளி யிடத் தொடங்கின. இந்திய ரிசர்வ் வங்கியும் கரேன்சியை தற்போது வெளி யிட்டிருக்கிறது. தற்போது யுபிஐ அடிப்படையில் கூகிள் பே, போன் பே போன்ற செயலிகள் மூலம் பணப் பரிமாற்றம் நடைபெறுகிறது. அவை ஏற்கனவே நம்மிடம் இருந்த ரொக்கப் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்து அதன் மூலம் செய்யப்படுவது. டிஜிட்டல் கரன்சிக்கு நம்முடைய ரூபாய் நோட்டில் உள்ளது பொன்ற சீரியல் எண்கள் வழங்கப்பட உள்ளன. உண்மையான பத்து ரூபாய்க்கு என்ன மதிப்பு இருக்குமோ அதே போல டிஜிட்டல் பத்து ரூபாய்க்கான மதிப்பும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஒழிக்கப்படாதக் கருப்புப் பணம்: 500 - 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பின் போது சொன்னது போலவே, தீவிரவாதத்திற்கு நிதியுதவி செய்தல், வரி ஏய்ப்பு போன்ற அரசுக்குத் தலைவலி கொடுக்கும் அனைத்துப் பிரச்சனைகளையும் இதனால் தீர்க்கலாம் என்று தற்போதும் சொல்லி வருகிறார்கள். கருப்புப் பணம் வைத்திருப்பவர்களுக்குத் இது திக் திக் நேரம் என்கிறார்கள். 2000 ரூபாய் நோட்டு இலகுவாக அவர்கள் கையில் கிடைக்காது என்றார்கள். வங்கி வாசலில் பாமரர்கள் காத்திருந்த போது கருப்பு பண முதலைகள் தான் 2000 கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தார்கள். அச்சத்திற்கு காரணம் ஆட்சியாளர்கள்: உலகமே டிஜிட்டலில் இயங்கும் போது நம் நாட்டில் டிஜிட்டல் ரூபாய் என்று அறிவித்தால் மட்டும் அச்சம் பற்றிக் கொள்வதற்கு ஆட்சியாளர்கள் தான். காரணம் கள்ளப் பணத்தை ஒழிப்போம் என்றார்கள். ஆனால், அது வளர்ந்து கொண்டு செல்கிறது. கள்ள நோட்டுகள் தற்போது அதிகரிக்கத் தொடங்கி விட்டன. சுவிஸ் வங்கியில் உள்ள கருப்பு பணத்தை மீட்போம் என்றார்கள், அது கிணத்தில் போட்ட கல்லாய் எந்த அசைவும் இல்லாமல் கிடக்கிறது. உலக அளவில் இந்தியாவின் பணமதிப்பு சரிந்து வருகிறது என்றால் நாட்டின் பிரதமர் ஒரு காரணமும், ஒன்றிய உள்துறை அமைச்சர் ஒரு காரணமும், ஒன்றிய நிதி அமைச்சர் ஒரு காரணமும், உத்தரப் பிரதேச முதல்வர் ஒரு காரணமும் என்று ஆளாளுக்கு ஒரு காரணத்தைச் சொல்லி மக்களைத் திக்குமுக்காட வைத்துள்ளார்கள். இவர்களிடத்தில் இந்திய நிர்வாகம் சிக்கி சின்னாபின்னமாவதால் தான், ஒன்றிய அரசின் ஒவ்வொரு அறிவிப்பும் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ YouTube சேனலில் இணைந்து கொள்ளுங்கள். https://www.youtube.com/channel/UCtB2...