செவ்வாய், 27 டிசம்பர், 2022

அமெரிக்கா, கனடாவை ஸ்தம்பிக்க வைத்த ‘பாம் சைக்ளோன்’: இப்படி எல்லாம் நடக்குமா?

 26 12 2022

அமெரிக்கா மற்றும் கனடாவை அச்சுறுத்தி வருகிறது பாம் சைக்ளோன். அமரிக்காவில் இந்த புயலால் இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவின் முக்கிய பகுதிகளிலும், கெனடாவையும் அச்சுறுத்தி வருகிறது பாம் சைக்ளோன். இதனால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். இதுவரை மின்சார துண்டிப்பை பார்த்திராத அமெரிக்க மக்கள், முதல் முறையாக முன்சாரம் இல்லாமல் அவதிபடுகின்றனர். கிறிஸ்துமஸ் விடுமுறையுகூட சரியாக அவர்களால் கொண்டாட முடியவில்லை.

இந்நிலையில் நாம் பாம் சைக்ளோன் என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிக்குதான் அதிக காற்றழுத்த தாழ்வு பகுதியில் இருந்து காற்று வீசும். இப்படி வீசும்போது, அவதன் வேகம் பொறுத்து நாம் அதை புயல் என்று கருதுவோம். ஆனால் இந்த bomb சைக்லோன் ஏற்படும்போது காற்றி அழுத்தம் மாறி மாறி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு நிலை பெரிதாக பாதிக்கப்படுகிறது. குறிப்பாக குறைந்த காற்றழுத்தம் 962 மில்லிபார் வரை குறையும். அதுபோல் வேறொரு பகுதியில் அதிக காற்றழுத்தம்1,047 வரை செல்லும். இதனால் அமெரிக்கா மற்றும் கனடா மக்களின் அச்சத்தில் உள்ளனர். 


source https://tamil.indianexpress.com/explained/what-is-a-bomb-cyclone-565060/