வியாழன், 29 டிசம்பர், 2022

தமிழ்நாடு மக்கள் அடையாள அட்டை

 29 12 2022

தமிழ்நாட்டில் வசிக்கும் அனைவரின் தரவுகளையும் ஒருங்கிணைக்க மாநில அரசு திட்டமிட்டு உள்ளது. அதன்படி ஒவ்வொரு குடும்பத்தின் தரவுகளையும் சேமிக்க, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகளின் கீழ் இயங்கிவரும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை முடிவுசெய்துள்ளது.
இதில் மாநில மக்களின் அனைத்து தரவுகளும் சேமிக்கப்படும். இந்த மக்கள் அடையாள அட்டை 10 முதல் 12 இலக்க எண்களை கொண்டிருக்கும். மேலும் இதுவொரு தனித்துவமான அடையாள அட்டையாக விளங்கும்.

தற்போது இதற்கான ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்ட உள்ளன. இந்த ஒப்பந்த புள்ளிகள் இறுதி செய்யப்பட்டு பின்னர் பணிகள் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே பொது விநியோக துறை, வருவாய் துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட பொது மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் பல்வேறு துறைகள் தனித் தனியாக தரவுகளை சேமித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.



source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-government-invites-tender-for-peoples-identity-card-566880/

Related Posts: