ஞாயிறு, 4 டிசம்பர், 2022

சத்தீஸ்கரில் இடஒதுக்கீடு 76 சதவீதமாக உயர்வு.. பொருளாதார பிரிவினருக்கு 4 சதவீதம் ஒதுக்கீடு

 

3 12 2022

சத்தீஸ்கரில் இடஒதுக்கீடு 76 சதவீதமாக உயர்வு.. பொருளாதார பிரிவினருக்கு 4 சதவீதம் ஒதுக்கீடு
சத்தீஸ்கர் முதல் அமைச்சர் பூபேஷ் பாகல்

சத்தீஸ்கர் மாநிலத்தின் மொத்த இடஒதுக்கீடு 76 சதவீதமாகக் உயர்த்தப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு, இடஒதுக்கீட்டு பிரிவுகளின் மக்கள்தொகை விகிதத்தில் அரசு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு வழங்கப்படும்.
இது தொடர்பான இரண்டு திருத்த மசோதாக்களை சத்தீஸ்கர் சட்டசபை வெள்ளிக்கிழமை (டிச.2) ஒருமனதாக நிறைவேற்றியது.

சத்தீஸ்கர் பொது சேவை (பட்டியலிடப்பட்ட சாதி, பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இடஒதுக்கீடு) திருத்த மசோதா மற்றும் சத்தீஸ்கர் கல்வி நிறுவனங்களில் (சேர்க்கையில் இடஒதுக்கீடு) திருத்த மசோதாவை முதல் அமைச்சர் பூபேஷ் பாகேல் தாக்கல் செய்தார், அவை ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக விவாதத்திற்குப் பிறகு நிறைவேற்றப்பட்டன.

இந்த மசோதாக்களின்படி, பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் 32 சதவீதமும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 27 சதவீதமும், பட்டியலிடப்பட்ட வகுப்பினர் 13 சதவீதமும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு (இடபிள்யூஎஸ்) 4 சதவீதமும் பொது வேலை வாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை வழங்கப்பட்டுள்ளது.

மசோதாக்கள் மீதான விவாதத்திற்குப் பதிலளித்த பாகேல், முந்தைய பாஜக அரசாங்கங்களால் தரவு ஆணையத்தை உருவாக்க முடியவில்லை என்று குற்றஞ்சாட்டினார்.

சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம், இந்த ஆண்டு செப்டம்பரில், அரசு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் சேர்க்கைகளில் இடஒதுக்கீட்டை 58 சதவீதமாக உயர்த்த 2012 ஆம் ஆண்டு ராமன் சிங் தலைமையிலான மாநில அரசின் உத்தரவை ரத்து செய்தது. 50 சதவீத உச்சவரம்பைத் தாண்டிய இடஒதுக்கீடு அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று உயர்நீதிமன்றம் கூறியது.

இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பாஜக உறுப்பினர்கள் கலந்து கொள்ளாமல், இந்த மசோதாவுக்கு ஆளுநரின் ஒப்புதல் கிடைக்காத நிலையில், சட்டசபையில் எப்படி இது போன்ற தீர்மானம் கொண்டு வர முடியும் என்று கூறி வெளிநடப்பு செய்தனர். பின்னர், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


source https://tamil.indianexpress.com/india/chhattisgarh-quota-increases-to-76-as-assembly-clears-amendment-bills-552432/