5 12 2022
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத்தில் திங்கள்கிழமை வாக்களித்தார்.
அப்போது, ரோடு ஷோ (சாலை பேரணி) நடத்தியதாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாநில காங்கிரஸ் பிரிவின் சட்டப் பிரிவு தலைவர் யோகேஷ் ரவானி அளித்துள்ள புகாரில், பிரதமர் நரேந்திர மோடி, பாஜக கொடியை ஏந்தி, ராணிப்பில் உள்ள வாக்குச் சாவடியிலிருந்து 500-600 மீட்டர் தொலைவில் இறங்கி, அங்கு கூடியிருந்த மக்களுடன் நடந்து சென்றார்” எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல், மேற்கு வங்க முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜியும் குஜராத்தில் சட்டசபைத் தேர்தல் அன்று ரோட் ஷோ நடத்தியதாக பிரதமர் மோடியை விமர்சித்தார்.
அரசியல் கட்சிகளாகிய நாங்கள், தேர்தல் ஆணையத்தின் விதிகளை கடைபிடிக்க வேண்டும். தேர்தல் நாளில், ரோட்ஷோ நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவர்கள் (நரேந்திர மோடி, பாஜக) சிறப்பான மனிதர்கள்” என ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வதற்கு முன்பு கொல்கத்தா விமான நிலையத்தில் கூறினார்.
வாக்குப்பதிவு
குஜராத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 58.38 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக தாராட் 78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
குறைந்த பட்சமாக வெஜல்பூர் தொகுதியில் 44.78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
source https://tamil.indianexpress.com/india/complaint-filed-against-pm-modi-for-holding-road-show-near-polling-booth-553253/