குடும்பத்தில் உள்ள பெண்களுக்கும் தன் தந்தையின் சொத்தில் சம உரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற குடும்பஸ்ரீ (Kudumbashree) உறுதிமொழிக்கு சமஸ்தா கேரள ஜம்-ஐயத்துல் குத்பா (Samastha Kerala Jam-Iyathul Qutba ) கமிட்டியின் முக்கியத் தலைவரான நாசர் ஃபைசி கூடத்தாய் (Nasar Faizi Koodathayi) எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கேரள அரசின் கீழ் இயங்கும் அனைத்து பெண்களும் கொண்ட அமைப்பான குடும்பஸ்ரீயின் தன்னார்வளர்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு எதிராக இஸ்லாமியர் ஒருவர் களமிறங்கியுள்ளார். அதன், சில பகுதிகள் தங்கள் மத சுதந்திரத்தை மீறுவதாகவும், குர்ஆனின் கொள்கைகளுக்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த உறுதிமொழியில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு பகுதியான, ஒரு குடும்பத்தில் உள்ள பெண்ணுக்கும் தன் தந்தையின் சொத்தில் சம உரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற உறுதிமொழி, கேரளத்தின் செல்வாக்கு மிக்க இஸ்லாமிய அமைப்பான சமஸ்தா கேரளா ஜம்-இயத்துல் குத்பா கமிட்டியின் முக்கிய தலைவரான நாசர் ஃபைசி கூடத்தாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மாநில அரசின் வறுமை ஒழிப்பு திட்டமான குடும்பஸ்ரீ இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரால் அக்கூட்டத்தை நிர்வகிப்பதற்காக பாலின சமத்துவத்தை குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் ஒரு பகுதியே இந்த உறுதிமொழி.
சொத்தின் மீது ஆண் பெண் இருவருக்கும் சம உரிமை வழங்கப்படும் என்று சுற்றறிக்கையின் ஒரு பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு உறுதியாக எதிர்ப்பு தெரிவித்துள்ள அவர், இது அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய மதச் சுதந்திரத்தின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான உறுதிமொழி என்று கூடத்தாய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் நடத்தும் பாலின பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக குடும்பஸ்ரீ அமைப்பின் மூலம் பல்வேறு பாராட்டத்தக்க நலத் திட்டங்களை மாநில அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இருப்பினும், அவற்றில் சில மத சுதந்திரத்தின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற குடும்பஸ்ரீயின் பாலின வள கூட்டத்தில், உறுதிமொழி எடுக்கப்பட்ட முன்மொழிவு சுற்றறிக்கையில் ஒரு குடும்பத்தில் தந்தையின் சொத்தில் மகன்கள், மகள்கள் இருவருக்கும் சமமான சொத்துரிமை வழங்குவோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் திருக்குர்ஆனின் படி ஒரு ஆணுக்கு பெண்ணை விட இரு மடங்கும் பெண்ணுக்கு ஆணில் பாதியும் தன் தந்தையின் சொத்தில் உரிமை உண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு குடும்பத்தை கவனிக்கும் முழு பொறுப்பும் ஆணிடமே உள்ளது அதனால் இதை பாரபட்சமாக கருத முடியாது இதை பாரபட்சமாக பார்ப்பவர்கள் ஒரு ஆண் ஏற்றுக் கொள்ளும் முழு செலவையும் கவனத்தில் கொள்வது இல்லை என்று தெரிவித்தார்.
4 12 2022
source https://tamil.indianexpress.com/india/gender-neutral-oath-of-kudumbashree-irks-islamic-scholar-in-kerala-552815/