ரமலான் பண்டிகையில் தேர்வு - தேதியை மாற்ற வலியுறுத்தல்
ரமலான் பண்டிகையில் தேர்வு- தேதியை மாற்ற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடமும் , மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.சா.ராஜேஸ்வரி (எம்.எஸ்சி.எம்.எட்.எம்ஃபில்..) அவர்களிடமும் மனு அளிக்கப்பட்டது.
தங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக...
பள்ளிக் கல்வித்துறை சார்பாக தற்போது 6,7,8,9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் 21 ம் தேதி தேர்வு நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.அவர்கள் திட்டமிட்டுள்ள அந்தத் தேதியில் ரமலான் பண்டிகை வரக்கூடிய ஒரு சூழல் உள்ளது. ரமலான் பண்டிகை பிறை தென்படுவதைப் பொருத்து தீர்மானிக்கப்படுகிறது.
இதன்படி ஏப்ரல் மாதம் 21ம் தேதி அல்லது 22ம் தேதி ரமலான் பண்டிகை வர உள்ளது.பண்டிகை நாளில் தேர்வு இருப்பதால் இஸ்லாமிய மாணவ ,மாணவிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாவார்கள்.இதன் மூலம் இஸ்லாமிய மாணவ, மாணவிகள் மனநிலை பாதிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே ஏப்ரல் மாதம் 21ம் தேதி அல்லது 22 ம் தேதி ஆகிய இந்தக் குறிப்பிட்ட நாட்களில் தேர்வு வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்காசி மாவட்டம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
TNTJ
மாவட்ட தலைவர்,
அப்துல் ஸலாம்.