பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த சென்னை விமான நிலைய முனையத்தில் உள்ள சிறப்புகளை தற்போது பார்க்கலாம்…..
பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு, இரண்டு நாள் பயணமாக தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள பேகம்பட் விமான நிலையத்தில் இருந்து தனி விமான மூலம் சென்னை பழைய விமான நிலையம் வந்தடைந்தார்.
சென்னை விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்,ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர். இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி கார் மூலமாக சென்னை விமான நிலையத்தில் ரூ.2400 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பன்னாட்டு முனையத்தை பார்வையிட்டு பின் திறந்து வைத்தார்.
சென்னை விமான நிலையத்தின் ஒருங்கிணைந்த பன்னாட்டு முனையத்தின் சிறப்புகளை தற்போது பார்க்கலாம்.
- கட்டடம், 1,36,295 சதுர மீட்டர் பரப்பளவில், அதிநவீன டெர்மினல் மற்றும் தமிழ்நாட்டின் கலை, கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
- இதற்குப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2018 ல் அடிக்கல் நாட்டி, 5 ஆண்டுகளாக பணிகள் தொடர்ந்து நடந்து வந்தன.
- புதிய முனையத்தின் கூரைகள் தமிழ் பாரம்பரியம், கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
- ரூ.2,467 கோடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய கட்டடத்தில் தற்போது முதற்கட்ட பணிகள் நடந்து முடிந்துள்ளன.
- ஆண்டுக்கு 3.5 கோடி பயணிகளைக் கையாளும் திறன் கொண்ட இந்த முனையத்தில் பயணிகள் வேகமாகச் செல்லவும், அவர்களின் உடைமைகளைச் சோதனை செய்யவும் பல்வேறு அதிநவீன வசதிகள் உள்ளன.
- புதிய முனைய கட்டடத்தில் 10 பேக்கேஜ் கன்வேயர் பெல்ட், 38 லிப்ட்கள், 46 நகரும் படிக்கட்டுகள், 12 வாக்கலேட்டர்கள் 100க்கும் மேற்பட்ட செக்-இன் கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- மல்டி லெவல் கார் பார்க்கிங், திரையரங்குகள் என பல வசதிகளைக் கொண்டுள்ளது.
source https://news7tamil.live/awe-inspiring-state-of-the-art-facilities-specials-piled-up-at-the-new-integrated-airport-terminal.html