சனி, 8 ஏப்ரல், 2023

டெல்டாவில் நிலக்கரி சுரங்க திட்டத்தை கைவிட்ட மத்திய அரசு;

 8 4 23

மத்திய அரசு சார்பாக கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நிலக்கரி சுரங்கம் அமைக்க திட்டமிட்டிருந்தனர்.

இங்கு பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு வருவதால், விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்து விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதைத்தொடர்ந்து நிலக்கரி அமைச்சகம் கடந்த மாதம் (மார்ச்) 29-ந்தேதி, நாடு முழுவதும் 101 வட்டாரங்களில் நிலக்கரி எடுப்பதற்கான ஏல அறிவிப்பை வெளியிட்டது.

இந்த அறிவிப்பில் தமிழகத்தை சேர்ந்த அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் மைக்கேல்பட்டி, கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டத்தில் சேத்தியாத்தோப்பு கிழக்கு பகுதி, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தில் வடசேரி ஆகிய 3 பகுதிகள் இடம்பெற்று இருந்தன. இந்த 3 பகுதிகளும் காவிரி டெல்டா பகுதிகள் ஆகும்.

எனவே, இந்த இடங்களில் நிலக்கரி எடுப்பதை எதிர்த்து டெல்டா மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில், தமிழக டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாலத் ஜோஷி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதைப்பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், “காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்ற மாண்புமிகு முதலமைச்சர்
@mkstalin அவர்களின் உறுதியான நிலைப்பாட்டால் ஒன்றிய அரசு அத்திட்டத்தையே கைவிட்டுள்ளது.இது டெல்டாக்காரராக முதலமைச்சர் அவர்களுக்கும்-தமிழ்நாட்டுக்கும் கிடைத்த வெற்றி. #விவசாயம்காப்போம்”, என்று தெரிவித்துள்ளார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-delta-coal-mining-project-removed-from-auction-list-udhayanithi-stalin-tweet-632375/