ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

பட குழுவிற்கு வன்மையான கண்டனம் -ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம்

 புர்கா பட குழுவிற்கு வன்மையான கண்டனமும் வன்மையான எச்சரிக்கையும்.


இஸ்லாமிய மார்க்கத்தில் கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதம் 10 நாட்கள் இத்தா இருக்க வேண்டிய என்பது மார்க்கத்தில் சொல்லப்பட்ட அறிவியல் உள்ளடக்கிய ஷரியத் சட்டம். அந்த ஷரியத் சட்டத்தை முழுமையாக அறியாமல் இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துவது போன்று புர்கா என்கின்ற படத்தை எடுத்திருக்கின்ற அந்த புர்கா பட குழுவிற்கு வன்மையான கண்டனம்.

அது மட்டுமல்லாமல் அந்த படத்தில் நடித்திருக்கின்ற நடிகர் "1500 வருடத்திற்கு முன்பாக அறிவும் வளரவில்லை அறிவியலும் வளரவில்லை"என்கின்ற தவறான கருத்தை பதிவிட்டுள்ளார். இந்த சொல்லை வன்மையாக கண்டிக்கின்றோம். இஸ்லாமிய மார்க்கம் எந்த அளவிற்கு அறிவியலை 1500 வருடங்களுக்கு முன்பாகவே சொல்லித் தந்துள்ளது என்பது அறிவீனர்களுக்கு தெரியாது.

இதுபோன்று ஷரியத் சட்டத்தை உள்ளடக்கிய படங்களை எடுக்கும்போது இஸ்லாமிய அறிஞர்களிடம் ஒப்புதல் வாங்காமல் எடுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

#செ_ஹைதர்_அலி
#தலைவர்
#ஐக்கிய_முஸ்லிம்_முன்னேற்ற_கழகம்


Related Posts: