வியாழன், 2 மே, 2024

தெலங்கானா முன்னாள் முதல்வர் பரப்புரையில் ஈடுபட தேர்தல் ஆணையம் தடை

 

தெலங்கானா முன்னாள் முதல்வரும் பாரத ராஷ்ட்ரிய சமிதி(பிஏர்எஸ்) கட்சித் தலைவருமான சந்திரசேகர் ராவ் பரப்புரையில் ஈடுபட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட்டது.  நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கியது.  இதையடுத்து, 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 மக்களவை தொகுதிகளுக்கான 2ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற்றது.  இறுதி மற்றும் 7ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி நடைபெறும் எனவும், ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் தெலங்கானாவில் மே 13 வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.  இதனால், தெலங்கானா மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட அனைத்து கட்சியினரும் தீவிர பரப்புரையில் ஈடுபடுள்ளனர்.

இதே போன்று காங்கிரஸ் மற்றும் பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சித்தலைவர் சந்திரசேகர் ராவ் ஆகியோர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தெலங்கானா மாநிலம் சிர்சில்லாவில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய சந்திரசேகர் ராவ், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும், அவரது கருத்துகள் அவதூறான வகையில் அமைந்ததாகவும் புகார் எழுந்தது. இதனையடுத்து, இன்று(மே.1) இரவு 8 மணி முதல், அடுத்த 2 நாள்களுக்கு(48 மணி நேரம்) அவர் பரப்புரையில் ஈடுபட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.



source https://news7tamil.live/election-commission-bans-former-telangana-chief-minister-chandrasekhar-rao-from-lobbying.html