ஞாயிறு, 5 மே, 2024

நகர்ப் புறங்களில் வாக்களிக்க அக்கறையின்மை': சரியும் வாக்குப் பதிவு குறித்து தேர்தல் ஆணையம் ஏமாற்றம்

 இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 2 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது. நடந்துகொண்டிருக்கும் மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவு குறைந்ததை ஒப்புக்கொண்ட தேர்தல் ஆணையம் (EC) வெள்ளிக்கிழமை இரண்டாவது கட்டத்தில் சில பெருநகரங்களில் வாக்குப் பதிவு சதவீதம் குறித்து ஏமாற்றம் தெரிவித்தது. நகர்ப்புறங்களில் மக்கள் வாக்களிக்க  "கடுமையான அக்கறையின்மை" -ஐ வெளிக்ககாட்டுவது இதற்குக் காரணம் என்று கூறியுள்ளது. 

2019 தேர்தலுடன் ஒப்பிடும்போது முதல் கட்டத் தேர்தலுக்கு வெறும் 4 சதவீதப் புள்ளிகளும், இரண்டாம் கட்டத் தேர்தலில் 3 சதவீதப் புள்ளிகளும் குறைந்துள்ள பின்னணியில் ஆணையத்தின் அறிக்கை வந்துள்ளது. ஏப்ரல் 19-ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற 102 இடங்களில் 66.14% வாக்குப் பதிவும், ஏப்ரல் 26-ம் தேதி 88 இடங்களில் நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 66.71% ஆகவும் வாக்குகள் பதிவாகி இருந்தது.

முதல் இரண்டு கட்டங்களில், ஐம்பதுகளில் பாரம்பரியமாக குறைந்த வாக்குப்பதிவுகளை பதிவு செய்த நகர்ப்புற இடங்கள், இந்த முறையும் அதே நிலை  நீடித்தது. உண்மையில், வாக்கு சதவீதம் மேலும் குறைந்துள்ளது. அவற்றில் காசியாபாத், 2019 இல் 55.88% இலிருந்து 49.88% ஆக 6 சதவீத புள்ளிகள் குறைந்துள்ளது. 2019 இல் 60.4% ஆக இருந்த கௌதம் புத்த நகர் 53.63% ஆகக் குறைந்துள்ளது.

கூடுதலாக, ஏப்ரல் 26 அன்று வாக்களித்த பெங்களூர் சென்ட்ரல் மற்றும் பெங்களூர் தெற்கு ஆகிய இடங்களில் முறையே 54.06% மற்றும் 53.17% வாக்குகள் பதிவாகியுள்ளன, இது கடந்த தேர்தலில் 54.31% மற்றும் 53.69% ஆக இருந்தது.

தேர்தல் ஆணையத்தின் தேர்தல் கண்காணிப்புக் குழு இந்த முறை நகர்ப்புற இடங்களை குறிவைத்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொண்ட  போதிலும் நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் இந்தமுறையும் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தாதது ஏமாற்றமடைய செய்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் வெள்ளிக்கிழமை அறிக்கையும் இதைக் குறிப்பிட்டுள்ளது.

அதோடு, "அடுத்த 5 கட்டங்களில் வாக்காளர் எண்ணிக்கையை அதிகரிக்க சாத்தியமான அனைத்து முயற்சிளையும் மேற்கொள்வதில்" உறுதியுடன் இருப்பதாக தேர்தல் ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது. 

இறுதி வாக்குப் பதிவு சதவீத தரவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதற்காக எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனம் செய்தனர். ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்ற முதல் கட்ட வாக்குப் பதிவின் இறுதித் தகவல்கள் தேர்தல் முடிந்து 11 நாட்களுக்குப் பிறகும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான மொத்த வாக்குப் பதிவு சதவீத பட்டியல் தேர்தல் முடிந்து 4 நாட்களுக்குப் பிறகும் வெளியிடப்பட்டது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் கூறுகையில், “வாக்காளர்களின் எண்ணிக்கையை சரியான நேரத்தில் வெளியிடுவதற்கு உரிய முக்கியத்துவத்தை அளிக்கிறது” என்று கூறிய தேர்தல் ஆணையம், வாக்களிப்புத் தரவைக் கணக்கிட்டு வெளியிடுவது தொடர்பான சட்டப்பூர்வ தேவைகளை பட்டியலிட்டது. "வெளிப்படுத்துதல் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவை ECI இன் வேலையில் நிலையான நடைமுறைகளாகும். சட்டப்பூர்வ தேவைகளின்படி, ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வாக்காளர் எண்ணிக்கை படிவம் 17C இல் முழுமையான எண்ணிக்கையில் பதிவு செய்யப்பட வேண்டும். 

வெளிப்படைத்தன்மையின் வலுவான நடவடிக்கையாக, தலைமை அதிகாரி மற்றும் தற்போதுள்ள அனைத்து வாக்குச் சாவடி முகவர்களால் முறையாக கையொப்பமிடப்பட்ட படிவம் 17C யின் நகல்கள், தற்போதுள்ள அனைத்து வாக்குச் சாவடி முகவர்களுடனும் பகிரப்படுகின்றன. எனவே, ஒரு தொகுதியை விட்டு விடுங்கள், வாக்குச்சாவடி வாரியாகப் பதிவான வாக்குகளின் உண்மையான எண்ணிக்கையின் தரவுகள் கூட வேட்பாளர்களிடம் உள்ளன, இது சட்டப்பூர்வ தேவையாகும்” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் இனி வரும் அடுத்த கட்ட வாக்குப் பதிவில் இறுதி வாக்குப் பதவி சதவீதத்தை ஊடகங்கள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கு  சரியான நேரத்தில் வழங்கப்படும் என  தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.


source https://tamil.indianexpress.com/india/disappointed-with-voters-in-metros-says-ec-4535677