ஞாயிறு, 30 ஜூன், 2024

சாத்தான்குளம் மரணத்தை அதிமுக மறைத்ததைப் போல கள்ளக்குறிச்சி விவகாரத்தை மறைக்கவில்லை

 

சாத்தான்குளம் மரணத்தைப் அதிமுக மறைத்ததைப் போல கள்ளக்குறிச்சி விவகாரத்தை மறைக்கவில்லை என  சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சட்டப் பேரவையின் கடைசி நாளான இன்று கேள்வி நேரத்திற்கு பிறகு மானியக் கோரிக்கைகள் மீதான பதிலுரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாசித்தார். அதில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது..

நாற்பதுக்கு நாற்பது என்ற வெற்றியைப் பெற்ற பெருமிதத்துடன்இந்தப் பேரவைக்கு நாங்கள் வருந்துள்ளோம். நின்ற தேர்தலில் எல்லாம் வென்ற தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவில் நூற்றுக்கு நூறு வெற்றியைப் பெற்று புகழ் மாலையைச் சூட்ட வேண்டும் என்று நான் உறுதி எடுத்து பயணம் தொடங்கினேன்.  எடுத்த உறுதியில் வென்று நூற்றாண்டு நாயகருக்கு புகழ்மாலை சூட்டிய பெருமையோடு உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன்.

நடைபெற்றது நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும், எதிர்க்கட்சிகள் என்னைக் குறி வைத்தும், இந்த திராவிட மாடல் அரசை விமர்சித்தும் தான் தேர்தல் களத்தில் அதிகம் பேசினார்கள். திராவிட மாடல் ஆட்சியின் செல்வாக்கைக் குறைத்துக் காட்ட அவர்கள் செய்த உண்மைக்குப் புறம்பான பிரச்சாரங்களை மக்கள் முறியடித்து, “செய்கூலி சேதாரம் இல்லாமல்” முழுமையான வெற்றியை வழங்கினார்கள்.  ஆளும் திராவிட முன்னேற்றக் கழக அரசின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

நான் ஆட்சிப் பொறுப்பேற்ற காலம் முதல், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணிநேரமும் நாட்டு மக்களுக்கு நல்ல பல திட்டங்களைத் தீட்டி வந்துள்ளேன் என்பதை தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்ததன் அடையாளம்தான் இந்த 100 விழுக்காடு வெற்றி. சட்டமன்றத் தேர்தலில், ‘வாக்களித்த மக்கள் வாக்களிக்காத மக்கள்’ என்ற பாகுபாடின்றி, அனைவருக்கும் கடந்த மூன்றாண்டு காலத்தில் ஏராளமான நன்மைகளைச் செய்துள்ளோம். அதற்கான அங்கீகாரத்தை வாக்குகள் மூலமாக மக்கள் நமக்கு அளித்துள்ளார்கள். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நின்று, வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வரும் இரண்டாண்டு காலமும் இதே போன்ற ஈடு இணையற்ற திட்டங்களைத் தீட்டித் தந்து, 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் மகத்தான வெற்றியை நாங்கள் பெறுவோம் , இதனை மமதையோடு நான் சொல்லவில்லை; மனச்சாட்சிப்படி செயல்படும் இந்த ஸ்டாலின் மீதும் திராவிட மாடல் அரசின் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் அடிப்படையில் துணிச்சலோடு சொல்கிறேன்.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக ஆய்வு செய்தால், திமுக கூட்டணி 221 தொகுதிகளைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. மக்கள் மனதில் யார் இருக்கிறார்கள்? யாரை மக்கள் அடியோடு புறக்கணித்து உள்ளார்கள்? என்பதையெல்லாம் இதன் மூலம் உணர முடியும். அதனால்தான், மக்களால் ஒதுக்கப்பட்டவர்கள், நமது முகத்தை நேருக்கு நேராகப் பார்க்க முடியாமல், தினந்தோறும் இந்த அவைக்கு வந்து, அவையின் மாண்புக்கும் குந்தகம் விளைவித்து சென்றுவிட்டார்கள்.

இந்தத் தேர்தல் தோல்வியை மறைக்க அவர்கள் போட்ட சதித்திட்டம் தான், நடவடிக்கை எடுக்கப்பட்ட கள்ளக்குறிச்சி விவகாரத்தை தொடர்ந்து கிளப்பியது. கடந்த 19 ஆம் தேதி இந்த சம்பவத்தை நான் கேள்விப்பட்டதும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டேன். அது குறித்து இதே அவையில் 20 ஆம் தேதி முழுமையான அறிக்கையை தாக்கல் செய்துள்ளேன். கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கான உண்மையான காரணத்தை அறிய உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் கோகுல்தாஸ்  தலைமையில் ஆணையம் அமைத்தேன்.

சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க உத்தரவிட்டேன். அமைச்சர்கள், உள்துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோரை உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தேன். குற்றவாளிகளில் 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கள்ளச்சாராயம், விஷச்சாராயம் ஒழிப்பு மற்றும் குற்றவாளிகள் கைது நடவடிக்கைகள் தீவிரமாகத் தொடர்கிறது. இறந்தோர் மற்றும் பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
பெற்றோரை இழந்த பிள்ளைகளின் கல்வி, வாழ்க்கைப் பொறுப்பை அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள்மீது பணியிடை நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இப்படிப்பட்ட நடவடிக்கைகளை 24 மணி நேரத்தில் எடுத்துள்ளோம். இதன் பிறகும் நடவடிக்கைகள் சரியில்லை என்று சொல்வது, அவர்கள் நடத்தும் திசைதிருப்பல் நாடகம்.
எதை மறைத்தோம் என்று சி.பி.ஐ. விசாரணை கேட்கிறார்கள்? “சாத்தான்குளம் சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டதற்கே சி.பி.ஐ. விசாரணை கேட்டீர்களே” என்று எதிர்க்கட்சித் தலைவர் பேட்டி அளித்திருக்கிறார். மனித உயிர்கள் இறந்து போனால், இரண்டு பேரா, இருபது பேரா என்று பார்ப்பது இல்லை. ஒரே ஒருவர் இறந்தாலும் அது மாபெரும் இழப்புதான். சாத்தான்குளம் சம்பவத்தை அன்றைய அ.தி.மு.க. அரசு முழுக்க முழுக்க மறைக்க, திரிக்க நினைத்தது. அதனால் அப்போது சி.பி.ஐ. விசாரணை கேட்டோம். ஆனால் இன்றைக்கு இந்த அரசு எதையும் மறைக்கவில்லை. குறுகிய காலத்திற்குள், குற்றவாளிகளைக் கைது செய்து, ஒருவர்கூட தப்ப முடியாது என்ற நிலையை உருவாக்கி இருக்கிறோம்.

விஷச்சாராய விற்பனை என்பது ஒரு சமூகக் குற்றம். விலை மதிப்பில்லாத மனித உயிர்களை பலி வாங்குகிற இதை முற்றிலுமாக ஒழிக்க இந்த அரசு உறுதி பூண்டுள்ளது என்பதை நான் இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு பிறகு மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை எஸ்.பி.-க்கள் ஆய்வுக் கூட்டத்தில் பேசிய நான் இது தொடர்பாக கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளேன். இனிமேல் எங்காவது கள்ளச்சாராய உயிர் பலி நடக்குமானால், அதற்கு அந்த மாவட்ட காவல் துறை அதிகாரியும், எல்லைக்குட்பட்ட காவல் நிலைய அதிகாரியும்தான் பொறுப்பேற்க வேண்டும் என்பதை மிகவும் கண்டிப்புடன் சொல்லியிருக்கிறேன்.

அதைப்போலவே, போதைப் பொருள் நடமாட்டம் மற்றும் விற்பனையை முற்றிலுமாகத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சாவைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இக் குற்றங்களில் கைது செய்யப்படுபவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்கிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக, குற்றவாளிகளின் 18 கோடியே 5 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 46 சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

கள்ளச்சாராயத்தை போலவே போதை மருந்து ஒழிப்பிலும் காவல் துறை அதிகாரிகள் உறுதியாக இருக்க வேண்டுமென்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறேன். மது, போதைப் பழக்கங்களுக்கு எதிராக குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை அரசு ஒரு பக்கம் எடுத்தாலும் இது தொடர்பான விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் அதிகம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அரசு கருதுகிறது. போதை மருந்தின் பாதிப்புகளை உணர்த்துதல், குடிநோயாளிகளை மீட்பது ஆகியவற்றை ஒரு இயக்கமாகவே நடத்தி வருகிறது. அந்த இயக்கத்தை சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கட்சி பாகுபாடின்றி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்து, மிக முக்கிய வழக்கான கொடநாடு வழக்கு குறித்து இந்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை இந்த அவைக்குத் தெரிவிப்பதை எனது கடமையாகக் கருதுகிறேன். கொடநாடு வழக்கில், இதுவரை 268 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, எதிரிகள் பயன்படுத்திய 8 செல்போன்கள், 4 சிம் கார்டுகள் கோவை வட்டார தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து 8 ஆயிரம் பக்கம் கொண்ட ஆய்வறிக்கை பெறப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த போது, எதிரிகள் சிலருக்கு வெளிநாட்டு போன் அழைப்புகள் வந்துள்ளது. எனவே, அதனை இண்டர்போல் உதவியுடன் விசாரிக்க வேண்டும். மேலும், சிலருக்கு இதில் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம்.

சட்டம்-ஒழுங்கைக் காப்பதில் தமிழ்நாடு அரசு வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. அனைத்து விழாக்களையும் அமைதியான முறையில் நடத்திக்காட்டி இருக்கிறோம். 18 ஆண்டுகளாக நின்று போயிருந்த சிவகங்கை கண்டதேவி அருள்மிகு சொர்ணமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் தேரோட்டத்தை எந்தப் பிரச்சினையும் இன்றி, சுமுகமாக நடத்திக் காட்டியிருக்கிறோம். அதற்காக, அந்தப் பகுதி மக்கள் என்னை நேரில் சந்தித்து நன்றி கூறினார்கள்.

40 லட்சம் பேர் திரண்ட திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா, 2 லட்சம் பேர் பங்கெடுத்த மதுரை சித்திரைத் திருவிழா, 8 லட்சம் பேர் கூடிய திருச்செந்தூர் சூரசம்ஹாரம்,  5 லட்சம் பேர் கூடிய பழனி தைப்பூசத் திருவிழா, 12 லட்சம் பேர் பங்கேற்ற குலசேகரப்பட்டினம் தசரா, 3 லட்சம் பேர் பங்கேற்ற வேளாங்கண்ணி தேவாலயக் கொடியேற்றத் திருவிழா, 20 ஆயிரம் பேர் பங்கேற்ற நாகூர் சந்தனக்கூடு திருவிழா உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் விழாக்கள் அனைத்தையும் அமைதியாக நடத்திக் காட்டியிருக்கிறோம்.

இன்றைக்குத் தமிழ்நாடு வளர்ச்சி மிகு மாநிலமாக இருக்கிறது என்றால் அமைதிமிகு மாநிலமாக அது இருப்பதால்தான் வளர்ச்சி மிகு மாநிலமாக இருக்கிறது என்பதை இந்த மாமன்ற உறுப்பினர்கள் அறிவார்கள். காவல் துறையில் கடந்த மூன்றாண்டு காலத்தில் மொத்தம் 190 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில் 179 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளன என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.  மற்ற அறிவிப்புகளும் விரைவில் அரசாணையாக ஆகும் என்று உறுதி அளிக்கிறேன்.

கடந்த ஆண்டு மட்டும் காவல் துறையில் பல்வேறு சீர்திருத்த முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டன. மாணவர்களைப் பண்படுத்தும் “சிற்பி திட்டம்” மூலமாக மாணவர்களுக்கு ஒழுக்கப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. சிறு குற்றம் செய்யும் குற்றவாளிகளைத் திருத்தி அவர்களது எதிர்காலத்தை சிறப்பானதாக மாற்றுவதற்கு “பறவை திட்டம்” தீட்டப்பட்டது.
பதிவேடு குற்றவாளிகள் குறித்த தகவல்களை ஒருங்கிணைக்க “பருந்து திட்டம்” செயல்பாட்டில் உள்ளது. காவலர்களது நன்மைக்காக “ஸ்மார்ட் காவலர்” செயலி உருவாக்கப்பட்டது.

விடுப்புகளை முறைப்படுத்த “விண்ணப்ப செயலி” அறிமுகம் செய்யப்பட்டது.
காவலர்களின் மனஅழுத்தத்தைக் குறைக்கும் பயிற்சியாக “மகிழ்ச்சி” என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது. மகளிர் காவலர்களுக்காக “ஆனந்தம் திட்டம்” அமலில் உள்ளது.
வாகனத் திருட்டைக் கண்காணிக்க “ஐ.வி.எம்.எஸ். திட்டம்” நடைமுறைக்கு வந்துள்ளது.

பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்யவும், புகார்களை விரைந்து விசாரிக்கவும், நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடிக்கவும் இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குற்றங்களைக் குறைக்கும் துறையாக மட்டுமல்லாமல், குற்றங்களைத் தடுக்கும் துறையாக செயல்பட வேண்டுமென்று . காவல் துறை அதிகாரிகள் மாநாட்டில், ஆலோசனைக் கூட்டங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். குற்றங்களின் எண்ணிக்கையைக் குறைப்பது அல்ல; குற்ற எண்ணத்தைக் குறைப்பது காவல் துறையின் பணியாக இருக்க வேண்டும் என்றெல்லாம் கட்டளையிட்ட வகையில் குற்றச்சூழல் கட்டுக்குள் உள்ளது. வருங்காலங்களில் குற்றங்களைத் தடுக்க மேலும் நடவடிக்கைகள் கடுமையாக இருக்கும் என்று உறுதியளிக்கிறேன்.

தமிழ்நாடு இன்று இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக உயர்ந்து வருகிறது. தொழில் வளர்ச்சியில், கல்வி வளர்ச்சியில், உள்கட்டமைப்பில், மனித வளர்ச்சிக் குறியீட்டில் என எந்த வகையை எடுத்துக் கொண்டாலும் தமிழ்நாடு உயர்ந்து வருகிறது. அதன் தனித்தன்மையை தனிச்சிறப்பாக வளர்த்து வருகிறோம். இந்த வளர்ச்சி என்பது என்னால் மட்டும் ஆனதல்ல. என்னை முதலமைச்சராக ஏற்றி வைத்து, ஒவ்வொரு துறையையும் தங்களது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளால் வளர்த்து வரும் எனது அருமை அமைச்சரவை சகாக்களால்தான். இந்த வெற்றியையும் உயர்வையும் பெற்று வருகிறோம் என்பதை எப்போதும் மறக்காமல் சொல்லி வருகிறேன். அனைத்து அமைச்சர் பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கூட்டணிக்கட்சியாக இருந்தாலும் பாராட்ட வேண்டிய நேரத்தில் பாராட்டி, சுட்டிக்காட்ட வேண்டிய நேரத்தில் கனிவோடு சுட்டிக்காட்டும் கூட்டணிக் கட்சியின் உறுப்பினர்களது வாதங்களும் பாராட்டுகளும் ஆலோசனைகளும் எங்களுக்கு எப்போதும் ஊக்கமளித்து வந்துள்ளது. நேற்று நடைபெற்ற விவாதத்தின்போது, சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கோரிக்கைகளைப் பொறுத்தவரை, திரு. பரந்தாமன் அவர்கள் சென்னை மாநகரில் காவலர் குடியிருப்புகளில் பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொள்ள கோரிக்கை விடுத்தார். ஒவ்வொரு ஆண்டும் காவல் துறையில் சிறப்புப் பழுதுபார்க்கும் பணிகளுக்காக வழங்கப்பட்டு வரும் 40 கோடி ரூபாய், இந்த ஆண்டு முதல் 50 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டு அப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

சட்டமன்ற உறுப்பினர்கள் பேராசிரியர் ஜவாஹிருல்லா  மற்றும் சின்னதுரை,  கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்ட அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீதும், பொதுமக்கள் மீதும் காவல் துறையால் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதால் கடவுச் சீட்டு மற்றும் தடையில்லாச் சான்று போன்றவைகளைப் பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது என்று தெரிவித்திருந்தார்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் இது போன்ற பல ஆயிரம் வழக்குகள் திரும்ப பெறப்பட்டுள்ளன. மீதமிருக்கும் வழக்குகள் குறித்தும் உரிய தரவுகள் பெற்று திரும்பப்பெற நடவடிக்கை எடுக்குமாறு சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குநர் அவர்களை அறிவுறுத்தியிருக்கிறேன்.

அருமைச் சகோதர. சிந்தனைச் செல்வன்  பேசும் போது செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பகுதியில் ஒரு புதிய தீயணைப்பு நிலையம் அமைத்து தரக் கோரினார். அக்கோரிக்கையை ஏற்று, கோவளத்தில் ஒரு புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் அமைக்கப்படும்.  இதன் மூலம் திருப்போரூர் பகுதியும், கடலோரப் பகுதியான கோவளமும் பயன்பெறும்

பா.ம.க. சட்டமன்றக் கட்சித் தலைவர் ஜி.கே.மணி  நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் பணி செய்த காவலர்களுக்கு தேர்தல் பணிப்படி வழங்க கோரிக்கை விடுத்தார். அக்கோரிக்கையின் அடிப்படையில் காவல்துறை தலைமை இயக்குநரிடம் கருத்துரு பெற்று விரைவில் தேர்தல் பணிப்படி வழங்கப்படும்.

முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க., இந்தக் கூட்டத்தொடரில் எடுத்த தவறான நிலைப்பாடு எனக்கு வருத்தம் அளிப்பதாகவே இருக்கிறது. ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு பதில் சொல்வதற்கு நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். அந்த பதிலைக் கேட்பதற்குத் தான் அ.தி.மு.க. தயாராக இல்லை. ஒருபுறம் தேர்தல் தோல்வி. மறுபுறம் சொந்தக் கட்சியில் நெருக்கடி என இரண்டுக்கும் இடையே சிக்கிக் கொண்டு, அதில் இருந்து தப்பிப்பதற்காக அவை நடவடிக்கைகளுக்குக் குந்தகம் ஏற்படுத்தியது அ.தி.மு.க.

நாம் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து எதிர்க்கட்சியினர் இந்த அவையில் எவ்வளவு நேரம் பேசியுள்ளார்கள் என்பதையும், அ.தி.மு.க. ஆட்சியில் நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்த போது எங்களுக்கு எவ்வளவு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பதையும் ஒப்பிட்டு பார்த்தால் இரண்டு ஆட்சிகளின் ஜனநாயகப் பண்பும் தெரியும், புரியும்! ஆசிரியருக்கே உரிய கண்டிப்புடனும், தெளிந்த அறிவுக்கூர்மையுடனும், அதே நேரத்தில் சுவைபடவும் இந்த அவையை நடத்திச் செல்லும் தங்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

இந்த ஆண்டு மானியக் கோரிக்கையில் 100 அறிவிப்புகள் உள்ளன. அதில் சிலவற்றை மட்டும் இப்போது அறிவிக்க விரும்புகிறேன். மீதமுள்ள அறிவிப்புகளை நான் படித்ததாகக் கருதி அவைக்குறிப்பில் சேர்த்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் ஏற்காடு ஆகிய இடங்களில் புதிய போக்குவரத்துக் காவல் நிலையங்கள், கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை புறக்காவல் நிலையம், படப்பை, ஆதமங்கலம்புதூர், திருப்பரங்குன்றம் கோவில் ஆகிய இடங்களில் புதிய காவல் நிலையங்கள் அமைக்கப்படும்.

அவை முன்னவர், நீர்வளத் துறை அமைச்சர் இன்று காலை நான் அவைக்கு வந்தவுடன், நெடுநாள் கோரிக்கை என்று தெரிவித்து, என்னிடம் ஒரு கோரிக்கையைக் கொடுத்தார். அதாவது, பேரணாம்பட்டில் இருக்கக்கூடிய காவல் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றிட வேண்டுமென்று கோரிக்கை வைத்திருக்கிறார். அது நிச்சயமாகப் பரிசீலிக்கப்படும்.

கொளத்தூர், கேளம்பாக்கம், செங்குன்றம் உள்ளிட்ட இடங்களில் புதிய அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்படும். தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு புதிய கட்டடம் கட்டப்படும். கோவை பொள்ளாச்சி, திருப்பூர் நல்லூர் ஆகிய இடங்களில் 229 காவல் குடியிருப்புகள் கட்டப்படும். தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் ஆளிநர்கள் பணியின்போது உயிரிழப்போ, உடலுறுப்பு இழப்போ, காயமோ ஏற்பட்டால் வழங்கப்படும் கருணைத் தொகை உயர்த்தப்படும். சிறப்பு இலக்குப் படையில் பணியாற்றும் ஆளிநர்களுக்கும் அத்தொகை உயர்த்தி வழங்கப்படும்.

ஊர்க்காவல் படையில் பணியாற்றும் ஆளிநர்கள் உயிரிழக்கும்போது அவர்கள் குடும்பத்திற்கு தமிழ்நாடு ஊர்க்காவல் படை நலன் மற்றும் கருணைக் கொடை நிதியிலிருந்து வழங்கப்படும் இழப்பீடு 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாயாகவும், காயமுற்றவர்களுக்கான நிதி 10 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்படும்.

கோவை மாநகராட்சியை விபத்தில்லாத மாநகரமாக மாற்ற 5 கோடி ரூபாய் மதிப்பில் செயல்திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும். தஞ்சாவூர் வட்டார தடய அறிவியல் ஆய்வகத்தில் 5 கோடியே 21 லட்ச ரூபாய் செலவில் புதிய ஆயப்பிரிவு ஒன்று உருவாக்கப்படும். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களின் பயன்பாட்டிற்காக 1,500 தற்காப்பு உடைகளும், மீட்பு பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு சிறிய உபகரணங்களுடன் கூடிய 3,000 மீட்பு உடைகளும் 4 கோடியே 50 லட்ச ரூபாய் செலவில் வழங்கப்படும். ஏரல், கருமத்தம்பட்டி, மடத்துக்குளம், கோவளம், படப்பை, திருநெல்வேலி மாநகரம், புதுவயல் உள்ளிட்ட 7 இடங்களில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்கள் நிறுவப்படும். சமயபுரம், மேடவாக்கம், பெரம்பலூர், தியாகதுருகம், நீடாமங்கலம், கொளத்தூர் ஆகிய 6 தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்களுக்கு புதிய கட்டடம் கட்டப்படும்.

அது மட்டுமல்ல; அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் அரசு ஊழியர்களைச் சார்ந்துள்ள தாய், தந்தையரையும் பயனாளிகளாக சேர்த்திட வேண்டுமென்று காவல் துறையினர் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்களிடம் இருந்தும் கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன. அவற்றை உரிய முறையில் ஆராய்ந்து, அரசு அலுவலர்களைச் சார்ந்து வாழும் அவர்களது பெற்றோருக்கும் மருத்துவக் காப்பீட்டின் பலன் சென்றடையும் வகையில் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்களின் விருப்பத்தைப் பெற்று, தற்போது நடைமுறையில் உள்ள புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மறுசீரமைக்கப்படும். மேலும், புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பயன்களைப் பெறும் அரசு அலுவலர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களை களைந்திட தலைமைச் செயலாளர் தலைமையில் விரைவில் ஆய்வுக் கூட்டம் நடத்திடவும், தேவைப்படும் நெறிமுறைகளை வழங்கிடவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

எங்களது இலக்கு மிகப்பெரியது; எங்களது கொள்கை மிகமிகப் பெரியது; எனவே, எங்களது பயணமும் மிகமிக நீண்டது. நூற்றாண்டு கால திராவிட இயக்கத்தின் கனவுகளை நிறைவேற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் எங்களுக்கு உள்ளது. பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் சிந்தனைகளை பேரறிஞர் அண்ணாவின் பாணியில் தமிழினத் தலைவர் கருணாநிதியின் செயல்வேகத்தோடு கொண்டு செலுத்தி வருகிறேன்.
எங்களது இலக்கில் நாங்கள் வெல்வோம்! வென்று கொண்டே இருப்போம்! வென்று கொண்டே இருப்போம்! என்று கூறி என் உரையை நிறைவு செய்கிறேன்.

இவ்வாறு முதலமச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.


source https://news7tamil.live/the-aiadmk-did-not-cover-up-the-kallakurichi-case-like-satangulas-death-chief-minister-m-k-stals-speech-in-the-legislative-assembly.html

பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவேண்டும்” – ஐக்கிய ஜனதா தள செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!

 

பீகார் மாநிலத்துக்கு சிறப்புப் பிரிவு அந்தஸ்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது.

பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி கூடுதல் நிதியை மாநிலத்துக்கு வழங்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான நிதிஷ் குமார் நீண்ட நாட்களாகக் கோரிக்கை விடுத்து வருகிறார். ஆனால் இந்த கோரிக்கைக்கு மத்திய அரசு இதுவரை செவி சாய்க்கவில்லை

இந்நிலையில் அண்மையில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மை பெற முடியாத நிலையில் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய லோக்தளம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. மேலும் ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடமும் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசில் இடம்பெற்றுள்ள முக்கிய கட்சிகளில் ஒன்றாக ஐக்கிய ஜனதா தளம் விளங்குவதால் மீண்டும் பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அக்கட்சி கையில் எடுத்துள்ளது. இதன் மூலம் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்ள ஐக்கிய ஜனதா தள தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற அக்கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் இதுதொடர்பாக தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கூட்டம் முடிந்த பின்னர் இதுகுறித்து ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:

“பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து என்ற கோரிக்கை இப்போது உருவானதல்ல. பீகார் மாநிலத்துக்கு ஏற்பட்டுள்ள சவால்களைச் சந்திப்பதற்கும், பீகார் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும் இந்த கோரிக்கையை நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறோம். தற்போது நடைபெற்ற தேசிய செயற்குழுக் கூட்டத்திலும் இதை வலியுறுத்தி தீர்மானம் இயற்றியுள்ளோம். இது ஒன்றும் புதிதல்ல.

நீட் தேர்வு முறைகேடு விவகாரம் குறித்தும் கூட்டத்தில் கவலை தெரிவிக்கப்பட்டது. நாட்டில் முக்கியமான போட்டித் தேர்வுகளின் நம்பகத்தன்மையை மீட்டெடுத்தல், தேர்வு தகுந்த முறையில்செயல்படுத்தப்படுகிறது என்பதில் பெற்றோர், மாணவர்களின் நம்பிக்கையை நிலைநிறுத்துதல் கட்டாயமாகும்” இவ்வாறு அவர் கூறினார்.


source https://news7tamil.live/special-status-should-be-given-to-bihar-united-janata-dal-working-committee-meeting-resolution.html

“பூரண மதுவிலக்கே தீர்வு”- திருமாவளவன் பேட்டி!

 

மதுவிலக்கு சட்ட மசோதா நல்லது தான் எனவும், ஆனால் பூரண மதுவிலக்கு என்பதே தீர்வு எனவும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

கள்ளச்சாராய, நச்சுச்சாராய உயிரிழப்புகள் இந்தியா முழுவதும் உள்ளது. இதற்கு தீர்வு என்பது பூரண மது விலக்கு. டாஸ்மாக் கடையில் விற்கும் மதுவாலும் பாதிப்பு உள்ளது. ஆகவே தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கை அமல்படுத்த வேண்டும். மெத்தனால் மாபியா கும்பலை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு முதலில் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். மதுவிலக்கு சட்ட மசோதா நல்லது தான். ஆனால், பூரண மது விலக்கு என்பதே தீர்வு.

நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவரின் உரை உண்மைக்கு மாறான உரை. அவர்கள் பெரும்பான்மை பெற்றதாக கூறுவது தவறு. கடந்த தேர்தலில் பெற்ற இடங்களை விட 63 இடங்கள் குறைவாக பெற்றுள்ளனர். அயோத்தி கோயில் உள்ள பைசாபாத் தொகுதியில் பாஜக தோல்வி அடைந்து உள்ளது. சபாநாயகர் ஓம் பிர்லாவும் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறார்.

தவெக தலைவர் விஜய் மாணவர்களிடம் நல்ல தலைவர்கள் உருவாக வேண்டும் என கூறியதில் எந்த உள்நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை. மாணவர்கள் நல்ல தலைவர்களாக உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில் கூறியதாகவே நான் கருதுகிறேன். காந்தியடிகள் கள் உள்பட எந்த மதுவும் வேண்டாம் என்றுதான் கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி விஷசாராய மரண சம்பவம் தொடர்பாக நேரில் சென்றபோது அங்குள்ள மக்கள் கூறியது, டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்றுதான். முதலமைச்சர் டாஸ்மாக் கடையை மூடினால் மக்களிடம் நல்ல பெயர் ஏற்படும். ஆணவ படுகொலைகளை தடுப்பதற்கு, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் காவல் துறையில் தனிஉளவு பிரிவு தொடங்க வேண்டும். பூரண மது விலக்கை ஆதரித்து விசிக சார்பில் பெரியார் பிறந்த நாள் அன்று மிகப்பெரிய மகளிர் மாநாடு நடைபெற உள்ளது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.


source https://news7tamil.live/alcohol-prohibition-bill-is-good-but-the-solution-is-complete-abstinence-thirumavalavan-advises.html

காசாவில் இதுவரை 37834 பேர் உயிரிழப்பு” – சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு!

 

கடந்த அக். 7-ம் தேதி முதல் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37,834-ஆக அதிகரித்துள்ளது.

30 06 2024 

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் – காசா ஆகிய இரு நாடுகள் இடையே போர் பூண்டது. இதில் ஏராளமான ராணுவ வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்தனர். ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டுவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்தார். இதனிடையே மார்ச் மாத இறுதியில் காசாவில் தற்காலிக போர்நிறுத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த தற்காலிக போர் நிறுத்தமும் ஏப்ரல் தொடக்கத்திலேயே முடிவுக்கு வந்தது.

இதனையடுத்து காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியது. வான்வழி, தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டது. இதனால் மீண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37,834-ஆக அதிகரித்துள்ளதாக

இதுகுறித்து காசா சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியதாவது, “காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 40 பேர் உயிரிழந்தனர். 224 பேர் காயமடைந்தனர். இத்துடன், இந்தப் பகுதியில் கடந்த அக். 7-ம் தேதி முதல் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37,834-ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 86,858 பேர் காயமடைந்துள்ளனர்” என்று அமைச்சகம் தெரிவித்தது.


source https://news7tamil.live/37834-deaths-in-gaza-so-far-ministry-of-health-announcement.html

தமிழக அரசின் மின் கொள்முதல் அமைப்பில் முறைகேடுகள்; சி.ஏ.ஜி அறிக்கை

 

தமிழக அரசின் முறையான கண்காணிப்பு இல்லாததால் மின் கொள்முதல் (eProcurement) இணையதளம் குறைவாகவே பயன்படுத்தப்பட்டதாக இந்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் (கம்ப்ட்ரோலர் அண்ட் ஆடிட்டர் ஜெனரல்) இ-கொள்முதல் (eProcurement) அமைப்பில் ஏலக் கூட்டுகள், குடும்ப உறவுகளுடன் ஏலதாரர்கள், கொள்முதல் செய்யும் நிறுவனக் கணினிகளிலிருந்து ஏலம் சமர்ப்பித்தல் மற்றும் வெவ்வேறு ஏலதாரர்கள் ஒரே ஐ.பி (IP) முகவரியில் இருந்து டெண்டருக்கான ஏலத்தை டெண்டரிங் செய்தல் உள்ளிட்ட பல்வேறு முரண்பாடுகளைக் கண்டறிந்துள்ளது என டி.டி நெக்ஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மின் கொள்முதல் முறையை நடைமுறைப்படுத்துவது குறித்த செயல்திறன் தணிக்கையில், இ-கொள்முதல் அமைப்பு, வருங்கால தகுதியுள்ள ஏலதாரர்களை, இ-கொள்முதல் போர்ட்டலில் வெளியிடப்பட்ட டெண்டருக்கான ஏலத்தில் இருந்து தடை செய்யவில்லை என்று சி.ஏ.ஜி (CAG) அறிக்கை கூறியது.

ஏப்ரல் 2016 மற்றும் மார்ச் 2022 க்கு இடையில் இ-கொள்முதல் போர்ட்டலில் வெளியிடப்பட்ட 1.34 லட்சம் டெண்டர்களின் தரவு பகுப்பாய்வு 0.62 லட்சம் டெண்டர்கள் அதாவது 46.27 சதவீதம் இரண்டு ஏலங்களை மட்டுமே பெற்றுள்ளன என்று சி.ஏ.ஜி அறிக்கை கூறியது.

33 முதல் 64 சதவீத டெண்டர்களில் 5 முதல் 16 சதவீத ஜோடி ஏலதாரர்கள் முறையே 169 மற்றும் 113 டெண்டர்களில் பங்கேற்றுள்ளனர். இந்த டெண்டர்களில், டி.ஆர்.டி.ஏ, பெரம்பலூரில் 50:50 என்ற விகிதத்திலும், டி.என்.சி.எஸ்.சி.,யில் 55:45 என்ற விகிதத்திலும் பங்கேற்கும் இரண்டு ஏலதாரர்களுக்கு இடையே ஒப்பந்தங்கள் பகிரப்பட்டன, என்று சி.ஏ.ஜி அறிக்கை கூறியது.

ஏலத்தின் பகுப்பாய்வு ஏலதாரர்களுக்கு குடும்ப உறவு அல்லது அதே நிறுவனங்களின் குழுவைக் கொண்டிருப்பதை வெளிப்படுத்தியுள்ளதாக சி.ஏ.ஜி தெரிவித்துள்ளது. இ-கொள்முதல் அமைப்பு ஏலம் விடப்பட்ட கணினியின் ஐ.பி முகவரியை கண்டுபிடித்துள்ளது. சேலத்தில் உள்ள டி.ஆர்.டி.ஏ.,வில், 2016-22ல் மின் கொள்முதல் முறையில் நிதி மதிப்பீட்டு நிலையை எட்டிய 73 சதவீத டெண்டர்கள் அதாவது 1,741 டெண்டர்களில் 1,265 டெண்டர்கள் சேலத்தில் உள்ள டி.ஆர்.டி.ஏ.,வின் ஐ.பி முகவரியில் இருந்து பதிவேற்றம் செய்யப்பட்டன.

இ-கொள்முதல் அமைப்பின் மூலம் செயலாக்கப்பட்ட டெண்டர்களின் தரவு பகுப்பாய்வு, போர்ட்டலில் வெளியிடப்பட்ட 1.34 லட்சம் டெண்டர்களில், 0.44 லட்சம் டெண்டர்கள் அதாவது 33 சதவீதம் ஒரே ஐ.பி முகவரியிலிருந்து சமர்ப்பிக்கப்பட்டவை, இதில் ஒரு டெண்டருக்காக சமர்ப்பிக்கப்பட்ட ஏலங்களின் எண்ணிக்கை 2 முதல் 33 வரை இருந்தது. 

டிசம்பர் 2022 நிலவரப்படி, 2016-22ல் ஜி.பி.என்.ஐ.சி (GePNIC) போர்ட்டலைப் பயன்படுத்திய 53 கொள்முதல் நிறுவனங்கள் மொத்தம் 2,15,060 கோடி ரூபாய் மதிப்பில் 1.78 லட்சம் டெண்டர்களை வெளியிட்டன. இருப்பினும், ஜி.பி.என்.ஐ.சி.,க்கு எடுத்துச் செல்லப்பட்ட 53 கொள்முதல் யூனிட்களில் கூட, இ-கொள்முதல் போர்ட்டலின் பயன்பாடு ஓரளவு மட்டுமே இருந்தது. “தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு யூனிட்களில், 2019-22ல் மொத்த கொள்முதலில் (ரூ. 5,959.70 கோடி) 21.06 சதவீதம் (ரூ. 1,255.54 கோடி) மட்டுமே இ-கொள்முதல் போர்டல் மூலம் மேற்கொள்ளப்பட்டது. ஜி.பி.என்.ஐ.சி போர்ட்டல் மூலம் அனைத்து கொள்முதல்களையும் மேற்கொள்வதற்கான குறிப்பிட்ட வழிமுறைகளை அரசாங்கம் வெளியிடவில்லை” என்று சி.ஏ.ஜி அறிக்கை கூறியது.

இ-கொள்முதல் போர்டல் செயல்படுத்தப்பட்டு 15 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட போதிலும் அதன் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கவும் கண்காணிக்கவும் எந்த ஒரு ‘பொறுப்பு மையம்’ இல்லை என்று சி.ஏ.ஜி அறிக்கை கூறியது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/cag-report-about-discrepancies-in-tamil-nadu-eprocurment-system-4787175

கொடநாடு கொலை வழக்கில் உள்ள தொடர்புகளை அம்பலப்படுத்த இன்டர்போலின் உதவி தேவை : ஸ்டாலின்

 கொடநாடு கொலை மற்றும் வழிப்பறி வழக்கில் உள்ள தொடர்புகளை அம்பலப்படுத்த இன்டர்போலின் உதவி தேவை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை தெரிவித்தார்.


மாநிலங்களவையில் உள்துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்த ஸ்டாலின், குற்றம் சாட்டப்பட்டவர்கள் பயன்படுத்திய சிம்கார்டுகளை தடயவியல் ஆய்வு செய்ததில், குற்றம் நடந்தபோது சர்வதேச அழைப்புகள் வந்திருப்பது தெரியவந்துள்ளது என்றார்.

கடந்த 2017-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பயன்படுத்திய பங்களாவில் நடந்த பரபரப்பான கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் தனது அரசு எடுத்த நடவடிக்கை குறித்து மக்களவையில் தெரிவிக்க வேண்டியது தனது கடமை என்று கருதி முதல்வர் ஸ்டாலின், “இதுவரை சுமார் 268 சாட்சிகள் உள்ளனர். விசாரணை செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் பயன்படுத்திய 8 செல்போன்கள் மற்றும் நான்கு சிம்கார்டுகள் தடயவியல் பரிசோதனைக்காக கோவையில் உள்ள மண்டல தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தடயவியல் ஆய்வகத்தில் இருந்து 8,000 பக்க அறிக்கை பெறப்பட்டுள்ளது.

அவர் தொடர்ந்து கூறுகையில், “சம்பவத்தின் போது, குற்றம் சாட்டப்பட்ட சிலருக்கு சர்வதேச அழைப்புகள் வந்துள்ளன. எனவே, இன்டர்போல் உதவியுடன் விசாரிக்க வேண்டும். இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளதா என விசாரித்து வருகிறோம்” என்றார்.

2017ஆம் ஆண்டு அங்கு காவலர் ஒருவர் சந்தேகப்படும்படியான கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு மாநில அரசியலின் பேசுபொருளாக மாறியது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் மிக உயர்ந்த நபரின் ஈடுபாட்டைக் குறிப்பிட்டபோது இந்த விவகாரம் மாநில அரசியலை உலுக்கியது. அரசியல்வாதியை குற்றத்தில் ஈடுபடுத்தினார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/interpol-help-need-to-find-out-links-kodanadu-case-mk-stalin-4787331

கள்ளச் சாராயம் தயாரித்தால், விற்றால் ஆயுள் தண்டனை; ரூ.10 லட்சம் அபராதம்: சட்ட மசோதா நிறைவேற்றம்

 

கள்ளச் சாராயம் தயாரித்தால், விற்றால் ஆயுள் தண்டனை; ரூ.10 லட்சம் அபராதம்: சட்ட மசோதா நிறைவேற்றம்


தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் ஜுன் 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று. நேற்று கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. பல்வேறு துறை வாரியான மானியக் கோரிக்கைள் மீதான விவாதம் நடைபெற்றது. 

நேற்று, சட்டப் பேரவையில் மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.  

source https://tamil.indianexpress.com/tamilnadu/illicit-liquor-crimes-imprisonment-for-life-new-bill-4787303

29 06 2024 

தமிழகத்தில் 12 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை

 தமிழகத்தில் சென்னை, திருச்சி உள்ளிட்ட 12  இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 


ஹிஜ்புத் தகர் என்ற தடை செய்யப்பட்ட இயக்க ஆதரவாளர்கள் வீடுகளில் புலனாய்வு  முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வகையில் சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, ஈரோடு உள்ளிட்ட இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். 

ஈரோடு பகுதியில் ஜேசிஸ் ஸ்கூல் அருகில் ஷர்புதீன் என்பவர் வீட்டில் கொச்சி என்.ஐ.ஏ ஆய்வாளர் விஜி என்பவர் தலைமையிலும் சோதனை நடைபெற்று வருகிறது. புதுகோட்டை மாத்தூரில் உள்ள  அப்துல்கான்  என்பவரது வீடு, சென்னையில் முகமது இஷாக் என்பார் வீட்டில் சென்னை என்.ஐ.ஏ ஆய்வாளர் அமுதா தலைமையில் சோதலை நடைபெற்றது. 



source https://tamil.indianexpress.com/tamilnadu/nia-raid-12-palces-of-tamilnadu-4787067

சனி, 29 ஜூன், 2024

1998, 2019, 2024: ஜனாதிபதியின் 3 உரைகளில் தேர்தல் முடிவுகள், அரசியலமைப்பு, கூட்டணி பற்றி கூறியது என்ன?

 வியாழன் அன்று பாராளுமன்றத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆற்றிய உரையானது, அடுத்த ஐந்து வருடங்கள் முந்தைய பத்தாண்டுகளில் கட்டமைக்கப்பட்டவையின் தொடர்ச்சியாக இருக்கும் என்ற வலுவான உறுதிப்பாடாக இருந்தது. கூட்டணி கட்சிகளைப் பற்றி குறிப்பிடாமல், "தீர்மானமான ஆணையின்" பின்னணியில் மூன்றாவது முறையாக அரசாங்கத்திற்கு "தெளிவான பெரும்பான்மையை" இந்த உரை சுட்டிக் காட்டியது மற்றும் கடந்த காலத்தின் "நிலையற்ற" (கூட்டணி) அரசாங்கங்களை விமர்சித்தது.

ஆங்கிலத்தில் படிக்க:

2019ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் தொடக்க உரை மற்றும் 1998ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனின், அடல் பிஹாரி வாஜ்பாய் கூட்டணி ஆட்சிக்கு வந்தபோது ஆற்றிய உரையுடன் ஒப்பிடுகையில், வியாழன் அன்று ஆற்றிய உரையில் செய்திகள் கூறப்பட்டன.

ஜனாதிபதி திரவுபதி முர்முவின் உரையில், கூட்டணிக் கட்டமானது "பல தசாப்தங்களாக" நீடித்த "நிலையற்ற அரசாங்கங்களின்" ஒரு கட்டமாக குறிப்பிடப்பட்டுள்ளது, "பல அரசாங்கங்கள் விரும்பினாலும் கூட, சீர்திருத்தங்களைக் கொண்டுவரவோ அல்லது முக்கியமான முடிவுகளை எடுக்கவோ முடியவில்லை." 2024 தேர்தல் முடிவுகள், "தீர்மானமானது" மற்றும் "கொள்கை, நோக்கம், அர்ப்பணிப்பு மற்றும் முடிவுகளில்" நம்பிக்கை கொண்ட ஒன்றாகும் என்று திரவுபதி முர்மு கூறினார்.

அப்படியே 2019 ஆம் ஆண்டுக்கு வந்தால், எம்.பி.க்களுக்கு ராம்நாத் கோவிந்தின் முதல் உரையும் "தெளிவான ஆணை" என்ற சொற்றொடரைப் பயன்படுத்தியது மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி அல்லது கூட்டணி பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. 2019ல் பெரும்பான்மையை விட 31 இடங்கள் அதிகமாக இருந்த நிலையில், இம்முறை பா.ஜ.க பெரும்பான்மைக்கு 32 இடங்கள் குறைந்துவிட்டது. 1998ல் அடல் பிஹாரி வாஜ்பாய் பெரிய தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் 180 இடங்களுக்கு மேல் பெற்று பா.ஜ.க., ஆட்சிக்கு வந்தபோது, கே.ஆர்.நாராயணன் ஆற்றிய ஜனாதிபதி உரையின் தொனி இணக்கமானது.

கே.ஆர்.நாராயணன், “சபையில் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை என்ற கருத்துக்களுக்கு” மேலாக உயர வேண்டும் என்றும், “ஒத்துழைப்பு, சமரசம் மற்றும் ஒருமித்த உணர்வுடன் செயல்பட வேண்டும்… உரையாடல், வாதம் மற்றும் விவாதம் கடந்த கால குறுகிய முரண்பாடுகளை மாற்றும்” என்று கூறியிருந்தார்.

2019 பேச்சின் உரை புதிய இந்தியா என்ற சொற்றொடரை 21 முறை பயன்படுத்தியுள்ளது. இம்முறை, திரவுபதி முர்முவின் உரையில் "புதிய இந்தியா" பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. அவரது பேச்சு "மாறும் இந்தியா" என்ற வார்த்தையை ஒருமுறை பயன்படுத்துகிறது, "மாறும் இந்தியா" என்பதன் புதிய முகமாக உள்கட்டமைப்பு மேம்பாட்டைக் குறிப்பிடுகிறது. கே.ஆர்.நாராயணனின் உரையில் புதிய இந்தியா பற்றிய ஒரு குறிப்பு இருந்தது, அது "பாதுகாப்பின்மை, பசி மற்றும் ஊழல் இல்லாதது".

ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது உரையில், அரசியலமைப்பை 11 முறை குறிப்பிட்டார், இதில் ஐந்து குறிப்புகள் பல தசாப்தங்களாக, குறிப்பாக அவசரநிலையின் போது அரசியலமைப்பின் சவால்கள் மற்றும் பாதுகாப்பைப் பற்றியது.

ஜூன் 20, 2019 அன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ராம்நாத் கோவிந்த் ஆற்றிய உரையில், 17வது மக்களவை தொடங்கியதும், அரசியலமைப்புச் சட்டத்தின் மீது எந்த ஒரு “தாக்குதலையும்” குறிப்பிடாமல், அரசியலமைப்பை எட்டு முறை குறிப்பிட்டார். அவரது உரையில், அரசியலமைப்பு "சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதியை உறுதி செய்வதற்கும், அனைத்து குடிமக்களுக்கும் சமத்துவம் மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் வழிகாட்டுதல்" என்று மேற்கோள் காட்டப்பட்டது.

2019ல் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்திருந்த நிலையில், வியாழக்கிழமை திரவுபதி முர்முவின் உரையில் இந்தக் குறிப்பு இல்லை. குறிப்பிடத்தக்க வகையில், ராம்நாத் கோவிந்த் தலைமையிலான ஒரு குழு, ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கான வரைபடத்தை பரிந்துரைத்துள்ளது, அதில் மாற்றம் தொடங்கும் 'நியமிக்கப்பட்ட தேதி' குறித்த அறிவிப்பை குடியரசுத் தலைவர் வெளியிடுவார், மேலும் இது மக்களவையின் முதல் கூட்டத்தின் தேதியாகும். ஆனால், இம்முறை ஒரே நேரத்தில் தேர்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை.

ராம்நாத் கோவிந்தின் பேச்சு, தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தியதற்காக தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்தது, மேலும் சில எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்விகளை எழுப்பிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பற்றிய சர்ச்சை குறித்தும் திரவுபதி முர்மு குறிப்பிட்டார்.

ராம்நாத் கோவிந்தின் 2019 உரையில் எதிர்க்கட்சிகள் மீது நேரடித் தாக்குதல் எதுவும் இல்லை, “நாட்டை இருள் மற்றும் உறுதியற்ற தன்மையிலிருந்து வெளியேற்றுவதற்காக”2014 இல் மக்கள் மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு அறுதிப் பெரும்பான்மையுடன் ஒரு அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்தனர். இந்த நேரத்தில், ஜனாதிபதி, காங்கிரஸின் பெயரைக் குறிப்பிடாமல், அவசரநிலையை மேற்கோள் காட்டினார், மேலும் லோக்சபா தேர்தலில் ஜம்மு காஷ்மீர் "நாட்டிற்குள்ளும் வெளியிலும்" இந்தியாவின் "எதிரிகளுக்கு" தகுந்த பதிலைக் கொடுத்துள்ளது என்பதைக் காட்டுகிறது என்று கூறினார்.

இது தொடர்பாக கே.ஆர்.நாராயணனின் பேச்சு இணக்கமாக இருந்தது. “எங்களுடையது பல கட்சி ஜனநாயகம், இதில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஆக்கபூர்வமான உரையாடல், ஆலோசனை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவை தேசிய ஒருமித்த பரந்த தளத்தை உருவாக்குவதற்கு அவசியம். எனவே, அரசாங்கம் ஒருமித்த ஆட்சி முறையை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு முயற்சி செய்யும்,” என்று கே.ஆர்.நாராயணன் கூறினார்.


source https://tamil.indianexpress.com/india/1998-2019-2024-how-3-speeches-by-the-president-framed-mandate-constitution-and-coalition-4784192

மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா இன்று தாக்கல்: ஸ்டாலின் அறிவிப்பு

 

மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா இன்று தாக்கல்: ஸ்டாலின் அறிவிப்பு


28 06 2024

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் விஷ சாராயம் குடித்ததில் 65 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கை  நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம், கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், மதுவிலக்கு அமலாக்க சட்ட திருத்த மசோதா இன்று (சனிக்கிழமை) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. இதற்கான அறிவிப்பை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார். 

பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பி இருந்தார். அதற்குப் பதிலளித்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ''கள்ளக்குறிச்சி விவகாரம் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து பல்வேறு அலுவல்களில் இது குறித்து பேசி வருகிறோம். இதற்கு ஒரு தீர்வு காணும் வகையில் தண்டனைச் சட்டங்களை கடுமையாக்கும் வகையில் மதுவிலக்கு அமலாக்கதுறையின் திருத்தச் சட்ட மசோதா இன்று (சனிக்கிழமை) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவருக்கு கடும் தண்டனை விதிக்கப்படும் வகையில் கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படும்' என்று அவர் கூறினார். 

source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-cm-mk-stalin-on-amendment-enforcement-liquor-prohibition-tamil-news-4785334

இன்ஜினியரிங் கவுன்சலிங் சுற்றுகளில் மாற்றம்? மாணவர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

 

தமிழகத்தில் பொறியியல் கவுன்சலிங்கிற்கான செயல்முறை தொடங்கியுள்ள நிலையில், இந்த ஆண்டு கவுன்சலிங் சுற்றுகளில் மாற்றம் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கான சேர்க்கை செயல்முறையை தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை அமைப்பு நடத்தி வருகிறது. இந்த ஆண்டு பொறியியல் படிக்க 2 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், இந்த ஆண்டு பொறியியல் கவுன்சலிங் செயல்முறையில் மாற்றம் இருக்கும் என்று கல்வி ஆலோசகர் சுரேஷ் சீதாராமன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், இந்த ஆண்டு பொறியியல் கவுன்சலிங் 4 சுற்றுகளாக நடைபெறாது. அனைவருக்கும் ஒரே நேரத்தில் ஒரேச் சுற்றாக நடைபெற உள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

எனவே மாணவர்கள் அதற்கேற்றாற்போல் தயாராக வேண்டும். தங்கள் கட் ஆஃப் மதிப்பெண்ணுக்கு எந்தக் கல்லூரி கிடைக்கும் என கவனித்து சாய்ஸ் ஃபில்லிங் செய்ய வேண்டும். ரேங்க், கடந்த ஆண்டு நிலவரம், கட் ஆஃப் வித்தியாசம், எத்தனை கல்லூரிகளில் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது என்பன போன்றவற்றை எல்லாம் கவனித்து சாய்ஸ் பில்லிங் செய்ய வேண்டும்.  

source https://tamil.indianexpress.com/education-jobs/tamil-nadu-engineering-admission-counselling-rounds-may-differ-this-year-4785178

நீட் முறைகேடு: 'விவாதம் நடத்த விரும்புகிறோம்': ராகுல் காந்தி உருக்கமான பேச்சு - வீடியோ

 இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்காக கடந்த மே 5 ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் யாரும் எதிர்பாராத வகையில், கடந்த 4 ஆம் தேதி முன்கூட்டியே வெளியானது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண் என பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன.

பல்வேறு முறைகேடு புகார் கிளம்பி இருப்பதால் இந்த தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும், நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ. அல்லது உச்ச நீதிமன்றம்  மேற்பார்வையிலான விசாரணை நடத்த வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டது. இந்த விவகாரத்தில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதனிடையே, நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நாடாளுமன்றத்திலும் நீட் முறைகேடு விவகாரம் எதிரொலித்தது. இந்த நிலையில், நீட் தேர்வு விவகாரம், வினாத்தாள் கசிவு குறித்து  நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதம் தேவை என்று தெரிவித்து ராகுல் காந்தி உருக்கமாக பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோவை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது. 

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள வீடியோவில், “நீட் தேர்வு முறைகேடு நாட்டில் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது. வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்துள்ளது என்பது எல்லோரும் அறிந்ததே. இதுபோன்ற முறைகேடுகளால் மாணவர்களின் பல ஆண்டுகால கனவு உடைந்து சுக்குநூறாகியுள்ளது. 

மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் இரு அவைகளிலும் இது குறித்து விவாதிக்க வேண்டும் என முறையிட்டோம். 2 கோடி மாணவர்களின் வாழ்க்கைப் பிரச்னை குறித்த விவாதிக்க என்.டி.ஏ கூட்டணி அரசு தயாராக இல்லை. 

தேர்வு நடத்தும் முறை உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளை நாம் மாற்ற வேண்டியதன் அவசியத்தை இந்த முறைகேடுகள் தெளிவுப்படுத்தி உள்ளன. நீட் விலக்கு தீர்மானம் கொண்டு வருவதே ஒரே வழி, ஆனால், என்.டி.ஏ கூட்டணி அரசு இதற்கு ஒத்துழைக்கவில்லை. 

இந்த விவகாரத்தை பிரதமர் நரேந்திர மோடி கையில் எடுத்து எங்களை வழி நடத்தி இருக்க வேண்டும், ஆனால் அப்படிப்பட்ட சூழல் தற்போது இல்லை என்பது புரிகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசுடன் இணைந்து விவாதித்து, நிரந்திர தீர்வு காண எதிர்க்கட்சியினர் தயாராக உள்ளோம்” என்று உருக்கமாக பேசியுள்ளார். 


source https://tamil.indianexpress.com/india/rahul-gandhi-neet-2024-nta-video-tamil-news-4785010