வெள்ளி, 21 ஜூன், 2024

அமெரிக்கா போகப்போறீங்களா? கண்டிப்பா இத தெரிஞ்சிக்கோங்க!

 

அமெரிக்காவுக்குச் செல்வோர் பிராண்டட் பொருள்களின் ஃபஸ்ட் காபி என்று சொல்லப்படும் அதே போன்ற போலி பொருள்களை வைத்திருந்தால், அவை சுங்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்ற மாணவர்கள்,  சுற்றுலா பயணிகளிடமிருந்து பிராண்டட் பொருள்களின் பெயரில் உள்ள போலி பொருள்களை அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையின் கண்காணிப்புப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.   அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் பொருள்கள் பயணிகளின் கண் முன்னே அழிக்கப்படுவதாகவும்,  அவை துணிகளாக இருந்தால் கிழிக்கப்பட்டு குப்பையில் வீசப்படுவதாகவும் கூறப்படுகிறது.

source https://news7tamil.live/are-you-going-to-america-be-sure-to-find-out.html

அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு விதிகளின்படி,  ஒரு நபர் (சட்டை, கைப்பை, காலணி) தலா ஒரு பிராண்டட் பெயரில் இருக்கும் போலியான பொருள்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர்.  அதன்படி,  அவை தனிநபரின் பயன்பாட்டுக்காக மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுமே தவிர, விற்பனை செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது.

ஒரு நபர் 30 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே இந்த வாய்ப்பை பெறுவர்.  பிராண்டட் பொருளின் பெயரில் அல்லது சின்னம் கொண்ட போலி பொருள்களை அமெரிக்காவுக்குள் எடுத்துச் செல்வது தவறு.  போலியான பொருள்கள் எடுத்துச் செல்வது, கடத்தலுக்குச் சமம் என்றும்,  அவர்கள் மீது குற்ற வழக்குப் பதிவு செய்யப்படும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.