வெள்ளி, 21 ஜூன், 2024

நாட்டை உலுக்கிய விஷச்சாராய மரணங்கள்…

 

நாட்டை உலுக்கிய விஷச்சாராய மரணங்கள் பற்றி தற்போது பார்க்கலாம்….

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் கிராமத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட விஷச்சாராயத்தை குடித்த 34 பேர் வாந்தி,  மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். மேலும்,  பலர் சிகிச்சையில் இருப்பதால்,  பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  இதுபோன்று, நாட்டையே உலுக்கிய விஷச்சாராய மரணங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்…

  • கடந்த ஆண்டு 2023 ஏப்ரல் மாதம் பீகார் மாநிலத்தில் உள்ள கிழக்கு சம்பரண் பகுதியில்  விஷச்சாராயத்தை குடித்து 28 பேர் உயிரிழந்தனர்.
  • கடந்த ஆண்டு 2023 மே மாதம் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள மரக்காணம், செங்கல்பட்டு
    பகுதிகளில்  விஷச்சாராயத்தை குடித்து 17 பேர் உயிரிழந்தனர்.
  • 2022ம் ஆண்டு ஜூலை மாதம் குஜராத் மாநிலத்தில் உள்ள பொடாட் பகுதியில்  விஷச்சாராயத்தை குடித்து 42 பேர் உயிரிழந்தனர்.
  • 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் பீகார் மாநிலத்தில் உள்ள சரண் மாவட்டத்தில்  விஷச்சாராயத்தை குடித்த 72 பேர் உயிரிழந்தனர்.
  • 2020ம் ஆண்டு ஜூலை மாதம் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் விஷச்சாராயத்தை குடித்து 100 பேர் உயிரிழந்தனர்.
  • 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அசாம் மாநிலத்தில் உள்ள கோலாகாட் பகுதியில் விஷச்சாராயத்தை குடித்த 168 பேர் உயிரிழந்தனர்.
  • 2015ம் ஆண்டு ஜூன் மாதம் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை பகுதியில் விஷச்சாராயத்தை குடித்து 100 பேர் உயிரிழந்தனர்.
  • 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள சங்கரம்பூர் பகுதியில் விஷச்சாராயத்தை குடித்து 156 பேர் உயிரிழந்தனர்.
  • 2009ம் ஆண்டு ஜூலை மாதம் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் பகுதியில் விஷச்சாராயத்தை குடித்து 136 பேர் உயிரிழந்தனர்.
  • 2008ம் ஆண்டு மே மாதம் தமிழ்நாடு மற்றும் கர்நாடக (எல்லை)  பகுதிகளில் விஷச்சாராயத்தை குடித்து 180 பேர் உயிரிழந்தனர்.
  • 1999 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தருமபுரியில் விஷச்சாராயத்தை குடித்து 45 பேர் உயிரிழந்தனர்.
  • 1992ம் ஆண்டு மே மாதம் ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டக் பகுதியில் விஷச்சாராயத்தை குடித்து 200 பேர் உயிரிழந்தனர்.
  • 1991ம் ஆண்டு நவம்பர் மாதம் டெல்லி மாநிலத்தில் விஷச்சாராயத்தை குடித்து 99 பேர் உயிரிழந்தனர்.
  • 1989ம் ஆண்டு மார்ச் மாதம் குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா பகுதியில் விஷச்சாராயத்தை குடித்து 136 பேர் உயிரிழந்தனர்.
  • 1982ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கேரளா மாநிலத்தில் உள்ள விபின் பகுதியில் விஷச்சாராயத்தை குடித்து 77 பேர் உயிரிழந்தனர்.
  • 1981ம் ஆண்டு ஜூலை மாதம் கர்நாடக மாநிலத்தில் உள்ள டேனரி பகுதியில் விஷச்சாராயத்தை குடித்து 299 பேர் உயிரிழந்தனர்.
  •  1978ம் ஆண்டு டிசம்பர் மாதம் பீகார் மாநிலத்தில் உள்ள தன்பாத் பகுதியில் விஷச்சாராயத்தை குடித்து 254 பேர் உயிரிழந்தனர்.

source https://news7tamil.live/deaths-due-to-alcohol-that-shook-the-country.html