ஞாயிறு, 30 ஜூன், 2024

தமிழக அரசின் மின் கொள்முதல் அமைப்பில் முறைகேடுகள்; சி.ஏ.ஜி அறிக்கை

 

தமிழக அரசின் முறையான கண்காணிப்பு இல்லாததால் மின் கொள்முதல் (eProcurement) இணையதளம் குறைவாகவே பயன்படுத்தப்பட்டதாக இந்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் (கம்ப்ட்ரோலர் அண்ட் ஆடிட்டர் ஜெனரல்) இ-கொள்முதல் (eProcurement) அமைப்பில் ஏலக் கூட்டுகள், குடும்ப உறவுகளுடன் ஏலதாரர்கள், கொள்முதல் செய்யும் நிறுவனக் கணினிகளிலிருந்து ஏலம் சமர்ப்பித்தல் மற்றும் வெவ்வேறு ஏலதாரர்கள் ஒரே ஐ.பி (IP) முகவரியில் இருந்து டெண்டருக்கான ஏலத்தை டெண்டரிங் செய்தல் உள்ளிட்ட பல்வேறு முரண்பாடுகளைக் கண்டறிந்துள்ளது என டி.டி நெக்ஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மின் கொள்முதல் முறையை நடைமுறைப்படுத்துவது குறித்த செயல்திறன் தணிக்கையில், இ-கொள்முதல் அமைப்பு, வருங்கால தகுதியுள்ள ஏலதாரர்களை, இ-கொள்முதல் போர்ட்டலில் வெளியிடப்பட்ட டெண்டருக்கான ஏலத்தில் இருந்து தடை செய்யவில்லை என்று சி.ஏ.ஜி (CAG) அறிக்கை கூறியது.

ஏப்ரல் 2016 மற்றும் மார்ச் 2022 க்கு இடையில் இ-கொள்முதல் போர்ட்டலில் வெளியிடப்பட்ட 1.34 லட்சம் டெண்டர்களின் தரவு பகுப்பாய்வு 0.62 லட்சம் டெண்டர்கள் அதாவது 46.27 சதவீதம் இரண்டு ஏலங்களை மட்டுமே பெற்றுள்ளன என்று சி.ஏ.ஜி அறிக்கை கூறியது.

33 முதல் 64 சதவீத டெண்டர்களில் 5 முதல் 16 சதவீத ஜோடி ஏலதாரர்கள் முறையே 169 மற்றும் 113 டெண்டர்களில் பங்கேற்றுள்ளனர். இந்த டெண்டர்களில், டி.ஆர்.டி.ஏ, பெரம்பலூரில் 50:50 என்ற விகிதத்திலும், டி.என்.சி.எஸ்.சி.,யில் 55:45 என்ற விகிதத்திலும் பங்கேற்கும் இரண்டு ஏலதாரர்களுக்கு இடையே ஒப்பந்தங்கள் பகிரப்பட்டன, என்று சி.ஏ.ஜி அறிக்கை கூறியது.

ஏலத்தின் பகுப்பாய்வு ஏலதாரர்களுக்கு குடும்ப உறவு அல்லது அதே நிறுவனங்களின் குழுவைக் கொண்டிருப்பதை வெளிப்படுத்தியுள்ளதாக சி.ஏ.ஜி தெரிவித்துள்ளது. இ-கொள்முதல் அமைப்பு ஏலம் விடப்பட்ட கணினியின் ஐ.பி முகவரியை கண்டுபிடித்துள்ளது. சேலத்தில் உள்ள டி.ஆர்.டி.ஏ.,வில், 2016-22ல் மின் கொள்முதல் முறையில் நிதி மதிப்பீட்டு நிலையை எட்டிய 73 சதவீத டெண்டர்கள் அதாவது 1,741 டெண்டர்களில் 1,265 டெண்டர்கள் சேலத்தில் உள்ள டி.ஆர்.டி.ஏ.,வின் ஐ.பி முகவரியில் இருந்து பதிவேற்றம் செய்யப்பட்டன.

இ-கொள்முதல் அமைப்பின் மூலம் செயலாக்கப்பட்ட டெண்டர்களின் தரவு பகுப்பாய்வு, போர்ட்டலில் வெளியிடப்பட்ட 1.34 லட்சம் டெண்டர்களில், 0.44 லட்சம் டெண்டர்கள் அதாவது 33 சதவீதம் ஒரே ஐ.பி முகவரியிலிருந்து சமர்ப்பிக்கப்பட்டவை, இதில் ஒரு டெண்டருக்காக சமர்ப்பிக்கப்பட்ட ஏலங்களின் எண்ணிக்கை 2 முதல் 33 வரை இருந்தது. 

டிசம்பர் 2022 நிலவரப்படி, 2016-22ல் ஜி.பி.என்.ஐ.சி (GePNIC) போர்ட்டலைப் பயன்படுத்திய 53 கொள்முதல் நிறுவனங்கள் மொத்தம் 2,15,060 கோடி ரூபாய் மதிப்பில் 1.78 லட்சம் டெண்டர்களை வெளியிட்டன. இருப்பினும், ஜி.பி.என்.ஐ.சி.,க்கு எடுத்துச் செல்லப்பட்ட 53 கொள்முதல் யூனிட்களில் கூட, இ-கொள்முதல் போர்ட்டலின் பயன்பாடு ஓரளவு மட்டுமே இருந்தது. “தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு யூனிட்களில், 2019-22ல் மொத்த கொள்முதலில் (ரூ. 5,959.70 கோடி) 21.06 சதவீதம் (ரூ. 1,255.54 கோடி) மட்டுமே இ-கொள்முதல் போர்டல் மூலம் மேற்கொள்ளப்பட்டது. ஜி.பி.என்.ஐ.சி போர்ட்டல் மூலம் அனைத்து கொள்முதல்களையும் மேற்கொள்வதற்கான குறிப்பிட்ட வழிமுறைகளை அரசாங்கம் வெளியிடவில்லை” என்று சி.ஏ.ஜி அறிக்கை கூறியது.

இ-கொள்முதல் போர்டல் செயல்படுத்தப்பட்டு 15 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட போதிலும் அதன் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கவும் கண்காணிக்கவும் எந்த ஒரு ‘பொறுப்பு மையம்’ இல்லை என்று சி.ஏ.ஜி அறிக்கை கூறியது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/cag-report-about-discrepancies-in-tamil-nadu-eprocurment-system-4787175