வியாழன், 20 ஜூன், 2024

கள்ளச்சாராயம் குடித்து 13 பேர் பலி: 60 பேர் மருத்துவமனையில் அனுமதி; கள்ளக்குறிச்சியில் ஷாக்

 கடந்த 10 ஆண்டுகளாக கண்ணு குட்டி என்பவர் கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் விற்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருக்கிறது. கள்ளக்குறிச்சி நகரப் பகுதியில் டி.எஸ்.பி அலுவலகம், கலெக்டர் அலுவலகம், மகளிர் காவல் நிலையம், மதுவிலக்கு பிரிவு என அனைத்தும் அரசு அலுவலகங்கள் இருந்தும் அப்பகுதியில் சர்வ சாதாரணமாக கள்ளச்சார விற்பனை செய்வது வருகிறார். 

இது குறித்து பொதுமக்கள் பல முறை கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ அ.தி.மு.க  செந்திலிடம் புகார்கள் அளித்துள்ளார்கள். அந்தப் புகாரை அவர் அதிகாரிகளுக்கு அனுப்பிய சூழலில் அரசு நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில், கள்ளச்சாராயம் குடித்த நான்கு பேர் பிறந்துள்ளனர் உயிரிழந்துள்ளனர். 20-க்கும் மேற்பட்டவர்கள் உயிரு ஆபத்தான நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி  சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கள்ளக்குறிச்சி நகரப் பகுதியை ஒட்டிய கோமுகி ஆற்றங்கரை ஓரம் கருணாபுரம்  கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கிராமம் மூட்டை தூக்கும் தொழிலாளிகள் வசிக்கின்றனர். இந்தப் பகுதியில் மூன்று வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் அப்பகுதியில் வசித்து வருகின்றனர். கூலி வேலையை முடித்துவிட்டு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சாராயம் குடிப்பது நாள்தோறும் வழக்கமாக வைத்துள்ளனர். 



நேற்று மாலை, இரவு நேரத்தில் சாராயம் குடித்த கூலித் தொழிலாளிகளுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக  அவர்களை இன்று விடியற்காலை இரவு  மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கே சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் கருணாபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் (வயது 45), பிரவீன் குமார் (25), சேகர் (60), ஜெகதீசன் (65) ஆகிய 4 பேரும் சிகிச்சை பலனின்றி இன்று காலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இறந்தனர். 

இந்த சம்பவம் இன்று காலை காட்டு தீ போல் கருணாபுரம் கிராம பகுதியில் பரவ ஆரம்பித்தது. இதன் விளைவாக சுமார் 20-க்கும் மேற்பட்டவர்கள்  சாராயம் குடித்து  வயிற்று வலி இருப்பதாக அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.  அவர்களுக்கும் மருத்துவமனை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் நான்கு பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளாக சாராயம் விற்பனை செய்து வந்த கண்ணுகுட்டி தற்போது  தலை மறைவாகியுள்ளார். அவரை பிடிப்பதற்கு போலீசார் தனி படை அமைத்துள்ளனர். ஆனால், 'மாவட்ட நிர்வாகம் அவர்கள் யாரும் சாராயம் குடித்து இறக்கவில்லை என்றும், உடல் கூறு ஆய்வு நடத்திய பின்பு தான் முழு விவரம் தெரியும். அதனால் யாரும் பொதுமக்கள் பதட்டம் அடைய வேண்டாம் வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம், வதந்திகளை நம்ப வேண்டாம்' என்று கூறியுள்ளது. 

இதற்கிடையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 4 பேர் உயிரிழந்ததை கண்டித்து எதிர்க் கட்சி தலைவரும், அ.தி.மு.க பொதுச் செயலாளரும் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க நிறுவனர் தலைவர் டாக்டர் ராமதாஸ், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். 

இதேபோல், கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இறந்து போன குடும்பத்திற்கு தல 20 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 


source https://tamil.indianexpress.com/tamilnadu/spurious-liquor-4-dead-in-kallakuruchi-4769051