சனி, 29 ஜூன், 2024

இன்ஜினியரிங் கவுன்சலிங் சுற்றுகளில் மாற்றம்? மாணவர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

 

தமிழகத்தில் பொறியியல் கவுன்சலிங்கிற்கான செயல்முறை தொடங்கியுள்ள நிலையில், இந்த ஆண்டு கவுன்சலிங் சுற்றுகளில் மாற்றம் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கான சேர்க்கை செயல்முறையை தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை அமைப்பு நடத்தி வருகிறது. இந்த ஆண்டு பொறியியல் படிக்க 2 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், இந்த ஆண்டு பொறியியல் கவுன்சலிங் செயல்முறையில் மாற்றம் இருக்கும் என்று கல்வி ஆலோசகர் சுரேஷ் சீதாராமன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், இந்த ஆண்டு பொறியியல் கவுன்சலிங் 4 சுற்றுகளாக நடைபெறாது. அனைவருக்கும் ஒரே நேரத்தில் ஒரேச் சுற்றாக நடைபெற உள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

எனவே மாணவர்கள் அதற்கேற்றாற்போல் தயாராக வேண்டும். தங்கள் கட் ஆஃப் மதிப்பெண்ணுக்கு எந்தக் கல்லூரி கிடைக்கும் என கவனித்து சாய்ஸ் ஃபில்லிங் செய்ய வேண்டும். ரேங்க், கடந்த ஆண்டு நிலவரம், கட் ஆஃப் வித்தியாசம், எத்தனை கல்லூரிகளில் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது என்பன போன்றவற்றை எல்லாம் கவனித்து சாய்ஸ் பில்லிங் செய்ய வேண்டும்.  

source https://tamil.indianexpress.com/education-jobs/tamil-nadu-engineering-admission-counselling-rounds-may-differ-this-year-4785178