கடந்த அக். 7-ம் தேதி முதல் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37,834-ஆக அதிகரித்துள்ளது.
30 06 2024
கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் – காசா ஆகிய இரு நாடுகள் இடையே போர் பூண்டது. இதில் ஏராளமான ராணுவ வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்தனர். ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டுவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்தார். இதனிடையே மார்ச் மாத இறுதியில் காசாவில் தற்காலிக போர்நிறுத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த தற்காலிக போர் நிறுத்தமும் ஏப்ரல் தொடக்கத்திலேயே முடிவுக்கு வந்தது.
இதனையடுத்து காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியது. வான்வழி, தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டது. இதனால் மீண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37,834-ஆக அதிகரித்துள்ளதாக
இதுகுறித்து காசா சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியதாவது, “காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 40 பேர் உயிரிழந்தனர். 224 பேர் காயமடைந்தனர். இத்துடன், இந்தப் பகுதியில் கடந்த அக். 7-ம் தேதி முதல் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37,834-ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 86,858 பேர் காயமடைந்துள்ளனர்” என்று அமைச்சகம் தெரிவித்தது.
source https://news7tamil.live/37834-deaths-in-gaza-so-far-ministry-of-health-announcement.html