ஞாயிறு, 23 ஜூன், 2024

கள்ளச் சாராய விஷ முறிவு மருந்து புதிய சிகிச்சை

 

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தமிழக அரசிடம் விஷச் சாராய முறிவிற்கான மருந்து கையிருப்பில் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி  பழனிசாமி கூறிய நிலையில், அமைச்சர் மா. சுப்ரமணியன் பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் மூன்றாம் நாள் கூட்டம் சனிக்கிழமை தொடங்கியது. கருப்புசட்டை அணிந்து வந்த அ.தி.மு.க-வினர், சட்டப்பேரவை கூட்டம் தொடங்கிய உடனே கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய விவகாரம் குறித்து பேச அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் அனுமதி கேட்டனர்.

சபாநாயகர் அப்பாவு சட்டமன்ற மரபுகளின்படி, உறுப்பினர்களின் கேள்வி, பதில் முடிந்த பிறகு, பேச அனுமதி அளிக்கிறேன். நினைத்த நேரத்தில், நினைத்த விஷயத்தைப் பேசுவதற்கான இடமல்ல சட்டமன்றம் என்று கூறின் அ.தி.மு.க-வின் கோரிக்கையை ஏற்க மறுப்பு தெரிவித்தார். 

இதையடுத்து, கள்ளக்குறிச்சி கள்ளச்சாரயம் விவகாரம் குறித்து பேச அனுமதி வழங்காததை கண்டித்து அ.தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து சட்டப்பேரவை நிகழ்வுகளைப் புறக்கணித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “கள்ளச் சாராய விவகாரத்தில் இதுவரை எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள். இன்னும் எத்தனை பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது போன்ற விவரங்களை கேட்டு பெறுவதற்கு அனுமதி கேட்டோம். ஆனால் இன்றைக்கும் பேரவை தலைவர் அனுமதி கொடுக்கவில்லை.

மா. சுப்பிரமணியன் நேற்று ஜிப்மர் மருத்துவமனையில் ஆய்வு செய்துவிட்டு பேட்டி கொடுக்கிறார். ஓம்பிரசோல் மாத்திரை நிறைய கையிருப்பு உள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமி வேண்டும் என்றே ஒரு பதற்றத்தை ஏற்படுத்துகிறார் என்றும் கூறுகிறார். நான் விஷச் சாராய முறிவுக்கான மருந்துக்கு தட்டுப்பாடு உள்ளது என்று தான் தெரிவித்தேன். ஆனால் மா சுப்பிரமணியன் அல்சர் மருந்திற்கான ஓம்பிரசோல் மருந்து கையிருப்பு உள்ளதாக தெரிவிக்கிறார்.

நான் சொன்ன மருந்தின் பெயர் ஃபோம்பிசோல்; ஆனால் அவர் சொல்கிறது ஓம்பிரசோல் மாத்திரை. அல்சர் மாத்திரை பெயரை அவர் சொல்கிறார். நான் கள்ளச்சாராய விஷ முறிவிற்காக செலுத்தப்படுகின்ற இன்ஜெக்சன். ஆனால் அவர் பெயரை மாற்றி சொல்கிறார். இது எங்கும் கிடைக்கவில்லை” என்றார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “20ஆம் தேதி அன்று ஓம்பிரசோல் மருந்து இல்லை என்று கூறிய எடப்பாடிக்கு 4.42 கோடி ஓம்பிரசோல் மருந்து கையிருப்பு உள்ளது என்று பதில் அளித்தேன்.

பிறகு இன்று ஃபோம்பிசோல் மருந்து கையிருப்பில் இல்லை என்று குழப்புகிறார் மருத்துவ நிபுணர் எடப்பாடி பழனிசாமி. ஃபோம்பிசோல் இன்ஜெக்‌ஷன் [Fomepizole injection] தேவைக்கு அதிகமாகவே கையிருப்பில் உள்ளது.” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  

“Omeprazole - Fomepizole குழப்பத்தில் எடப்பாடி! 20.06.2024 அன்று Omeprazole மருந்து இல்லை என்று கூறிய எடப்பாடிக்கு 4.42 கோடி Omeprazole மருந்து கையிருப்பு உள்ளது என்று பதில் அளித்தேன். பிறகு இன்று (22.06.2024) Fomepizole மருந்து கையிருப்பில் இல்லை என்று குழப்புகிறார் மருத்துவ நிபுணர் எடப்பாடி, Fomepizole injection தேவைக்கு அதிகமாகவே கையிருப்பில் உள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலகத்தரமான மருத்துவ நெறிமுறைகள் (Treatment Protocol) மூக்கு வழி பிராண வாயு செலுத்துதல், நரம்பு வழி Drips, எத்தனால் ஊசி, லியுகோவோரின் ஊசி, சோடா பை கார்பனேட் ஊசி, ஹிமோடையாலிசிஸ், பேன்டோபிரசோல் ஊசி, செயற்கை சுவாசம் (வெண்டிலேட்டர்) பின்பற்றி சிகிச்சை வழங்கப்படுகிறது.

மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் அளிக்கப்படும் அதே சிகிச்சை முறை கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் ஆகிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. டிஸ்சார்ஜ் ஆன பிறகு.. வீட்டுக்கு போய் மிச்சமிருந்த விஷ சாராயத்தை குடிச்சிருக்காங்க- அமைச்சர் திடுக் மருத்துவ நிபுணர் எடப்பாடி பழனிசாமி வேறு ஏதாவது புதிய மருத்துவ சிகிச்சை முறையை கண்டுபிடித்து சொன்னாலும் அது சரியானவையாக இருந்தால் அதனால் உயிர்கள் காப்பாற்றப்படும் என்ற நிலை இருப்பின் எடப்பாடி சிகிச்சை முறைகள் பின்பற்றப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/minister-ma-subramanian-and-edappadi-k-palaniswami-clash-kallakurichi-hooch-death-4775309