கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக தொடர் புகார்கள் உள்ளன. இந்நிலையில், போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து வேட்டை நடத்தினார்கள்.
எனினும் இதில் 7 போலீசார் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றம் அதிகரித்தது. இந்த நிலையில், கல்வராயன் மலையில் சாராய வேட்டைக்கு சென்ற காவலர்கள் அனைவரும் இருப்பிடம் திரும்பினர் என மாவட்ட காவல்துறை அறிவித்து உள்ளது. அதில், 7 காவலர்களும் சாராய வேட்டையை முடித்துவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்துள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 19 மற்றும் ஜூன் 20 ஆகிய தேதிகளில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதாகக் கூறப்படும் குறைந்தது 58 பேர் உயிரிழந்துள்ளனர். பலியானவர்களில் பெண்கள் மற்றும் ஒரு மாற்றுத்திறனாளியும் அடங்குவர். மேலும் 82 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சோகத்தை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு மாவட்ட ஆட்சியர் ஸ்ரவன் குமார் ஜாதவத்தை இடமாற்றம் செய்தது. மேலும், காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனாவை இடைநீக்கம் செய்துள்ளது.
மேலும், இந்த துயர சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையத்தையும் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/the-7-constables-who-went-on-a-liquor-hunt-in-kalvarayan-hill-returned-home-4776549